Published:Updated:

ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!

ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!
ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!

ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!

ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!


கோவை போலீஸின் சமீபத்திய இரண்டு செயல்பாடுகள்  அவர்களின் மீதான மதிப்பைக் கூட்டியிருக்கிறது, போலீஸின் மீதான பொதுப்பார்வையை மாற்றியிருக்கிறது. முதலாவது  புத்தாண்டையொட்டி கோவை மாநகரப் போலீஸார் எடுத்த நடவடிக்கை. இரண்டாவது பொங்கலுக்காக வனகிராமங்களில் கோவை ரூரல் போலீஸ் நடத்திய பொங்கல் நிகழ்ச்சி. இரண்டுமே அவர்கள் கடமை சார்ந்ததுதான் என்றாலும் அவர்கள் கையாண்ட விதத்தை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது. அப்படி என்ன செய்தார்கள்.?

எங்க கூடதான்  உங்களுக்கு ஹேப்பி நியூ-இயர்.

புத்தாண்டு அன்று இரவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட போலீஸும்  இளைஞர்களின் அலப்பறைகளைக் கட்டுப்படுத்த படாதபாடுபட்டார்கள். குடித்துவிட்டு நள்ளிரவு சாலைகளில் அசுரத்தனமாக வண்டி ஓட்டும் இளைஞர்கள்  அராஜகம்  செய்துவிடாமலும் அதனால் அசம்பாவிதம் ஏற்படாலும்  தடுக்க பல இடங்களில் தங்களது போலீஸ்தனத்தை வழகத்தைவிட கூட்ட வேண்டிய சூழலில் இருந்தார்கள் காவல்துறையினர். காட்டவும் செய்தார்கள். ஆனாலும், சென்னையில் பேரிகாடை இழுத்து தீப்பொறி பறக்கவிட்டது மட்டுமல்லாமல்,  சமூகவலைதளங்களில்  போலீஸை திட்டி வீடியோ வெளியிடும் அளவுக்கு எல்லை மீறினார்கள் இளைஞர் (அதன் பிறகு அவர்கள் வெளுக்கப்பட்டது வேற கதை!)  ஆனால், கோவை போலீஸ் மிகச் சாதாரணமாக இளைஞர்களை எதிர்கொண்டார்கள். கோவையில் அவினாசி சாலைதான் அகலமான சாலை ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு அன்று இரவு அவினாசி  சாலையில்தான் இளைஞர்கள் ஆர்ப்பரிப்பார்கள். குடித்துவிட்டு கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் இளைஞர்களிடம் கோபம் காட்டினாலோ, அதிகாரத்தைச் செலுத்தினாலோ வேலைக்கு ஆகாது. அவர்கள்  அடங்கமாட்டார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த கோவை சிட்டி போலீஸ் வேறுவிதமாக யோசித்தது. அவினாசி சாலையின் ஒவ்வொரு சிக்னலிலும் பந்தல் அமைத்து,  நாற்காலிகள் போட்டு வைத்திருந்தார்கள்.  பத்து மணி முதலே சிக்னல்களில் போலீஸ் குவிக்கப்பட்டனர். நேரம் ஆக ஆக... இளைஞர்கள் ஆனந்தக் கூத்தாட்டதை ஆரம்பித்தார்கள்.  

ஒரே பைக்கில் மூன்றுபேர் வந்தாலோ, குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்தாலோ, உருமிக்கொண்டு நின்றாலோ சிக்னலிலிருந்து தப்ப முடியாதபடி கண்காணிப்பு வளையத்தை காவல்துறையினர் தீவிரப்படுத்தினார்கள். 11 மணியிலிருந்து 12 மணி வரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு சிக்னலிலும் மடக்கப்பட்டார்கள். அடி வெளுக்கப்போகிறார்கள் என்ற பதற்றம் நிறைந்த பயத்தோடு வந்த இளைஞர்களுக்கு கோவை போலீஸ் கொடுத்ததோ ஜாலி டார்ச்சர். இதற்காக வரவழைக்கப்பட்டிருந்த தொகுப்பாளர்கள், போலீஸிடம் சிக்கிய   இளைஞர்களை கேள்விகளாலும் கேளிக்கைகளாலும் சிதறடிக்க ஆரம்பித்தார்கள். நீங்க கடைசியா காலேஜ்ல என்ன ச்சேப்டர் படிச்சீங்க? என்பதில் ஆரம்பித்து எங்க இங்க வந்து ஏ.பி.சி.டியை தப்பில்லாம சொல்லுங்க பார்ப்போம்?  என்பது வரை டஃப்(!?) கேள்விகள் கேட்கப்பட பதில் சொல்லமுடியாமல் ஒடுங்கிப்போனார்கள் யூத்கள். உங்க நியூ- இயர் ரெஷல்யூஷனைச் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டபோது, போதையிலிருந்த ஒரு காதல் தோல்வி இளைஞர் மைக்கைப் பிடுங்கினார். தான் போலீஸ் வளையத்துக்குள் நிற்பதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், ‘இந்த வருஷம் முழுக்க எல்லா பொண்ணுங்களையும் சைட் அடிக்கணும்’  என்று மைக்கில்  கத்தினார்.  

ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!

இன்னோர் இளைஞர் ஒரு போலீஸின் தோள்களைப்பிடித்து தொங்கிக்கொண்டு,  சார் என் பைக் கீ-யை கொடுங்க சார் என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் எனக்காக வெயிட் பண்றாங்க என்று கெஞ்சினார். இப்படியாக சிக்னலுக்கு சிக்னல் நிறைய இம்சைகள். எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட போலீஸார்.  புன்சிரிப்பு மாறாமல்,  ‘நீங்க எங்கேயும் போக முடியாது. இந்த வருஷம் எங்ககூடதான் உங்களுக்கு நியூ-இயர்.’ அங்க பாருங்க கேக்கெல்லாம் வச்சிருக்கோம் 12 மணி ஆனதும் கமிஷனர் வருவாரு கட் பண்ணிட்டு 1 மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம்’ என்று சொல்ல இதுவரைக்கும் இப்படி ஒரு போலீஸ் ட்ரீட்மென்ட்டை நாங்க பார்த்ததில்லையே என்று குழம்பித்தவித்த இளைஞர்கள் புத்தாண்டை போலீஸோடு கொண்டாடிவிட்டு கம்மென்று வண்டியை எடுத்துச் சென்றார்கள். இதுகுறித்துப் பேசிய போலீஸார், எல்லா நேரத்திலேயும் போலீஸ் ஒரே மாதிரி செயல்பட்டோமென்றால் வேலைக்கு ஆகாது. அசாதாரண சூழல்ல ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்ங்கிறதை ஃபாலோ பண்ணனும். இளைஞர்களை அவங்க வழியிலேயே போய் மடக்கணும்  அதுக்காகத்தான் இந்த ஸ்பீக்கர்... பாட்டு எல்லாம் ஏற்பாடு செஞ்சோம். அவுங்க கொண்டாட்டத்துக்கும் தடை போடமுடியாது. விட்டால் வேறு யாருக்காவது பிரச்னையைக் கொடுத்துருவாங்க. நடந்து முடிஞ்சபிறகு வருத்தப்படுறதைவிட நடக்குறதுக்கு முன்னாடியே தடுக்கணும் அதனாலதான் இப்படி அன்பான முறையில் லாக் பண்ணோம்.  அடிச்சு உதைச்சு விரட்டியிருந்தால் விபரீதமாகிப்போக வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் பொறுப்போடு.

ஆபரேஷன் ‘அன்பு’ - கோவை போலீஸின் வாவ் ஐடியாக்கள்.!

போலீஸ் நடத்திய  பொங்கல் விழா....

கோவை சிட்டி போலீஸ் மட்டுமில்லை நாங்களும் சாமர்த்தியம்தாம் என்று காட்டியிருக்கிறது கோவை ரூரல் போலீஸ். கடந்த 8ம்தேதி, கோவை வனப்பகுதியையொட்டிய கிராமமான பில்லூரை அடுத்துள்ள மானாறு கிராமத்தில் மழைவாழ் மக்களோடு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். போலீஸும் நிழல் மயம் என்கிற அமைப்பினரும் சேர்ந்து  அந்த ஊர் மக்கள் 500பேருக்கு பொங்கல் புத்தாடை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர் விழாக்கோலம் பூண்டிருந்த மானாறு கிராமத்திற்கு போலீஸாரோடு பொங்கல் திருவிழா  கொண்டாடியது அபூர்வ திருவிழாவாக அமைந்தது. காரணம் அந்தப் பகுதி மக்களெல்லாம் படிப்பறிவு இல்லாதவர்கள். போலீஸைக் கண்டாலே அச்சம்கொள்ளக்கூடியவர்கள். எல்லாம் சரிதான்! அந்த மக்களோடு போலீஸ் ஏன் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்? வேற வேலை இல்லையா என்ன? என்று இந்த இடத்தில் நீங்கள் நினைப்பதில் ஒன்றும் தவறு இல்லை. கோவை வனப்பகுதிகள் முழுக்க மாவோயிஸ்ட் ஊடுருவல்கள் நிறைய இருக்கின்றன. அதைத் தடுப்பதும், ஊடுறுவிய மாவோயிஸ்ட்களைக் கண்டுபிடிப்பதும் சாதாரண காரியம் இல்லை. அது அந்தக் கிராமமக்கள் நினைத்தால்தான் முடியும். போலீஸ் என்றாலே அடிப்பார்கள். கேஸ் போடுவார்கள். போலீஸிடம் எது சொன்னாலும் நமக்குப் பிரச்னைதான் என்று நினைத்து போலீஸுக்கு மக்கள் பயந்தார்கள் என்றால் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வாங்க முடியாது. மாவோயிஸ்ட் ஊடுருவல் பற்றி ஒருவர் தகவல் கொடுக்க நினைத்தாலும் போலீஸ் பற்றிய அச்ச உணர்வு அதைத் தடுத்துவிடும். ஆக அந்த அச்ச உணர்வை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும். போலீஸூம் சாதாரண மனிதர்தான். பொதுமக்களைக் காப்பதற்காகத்தான் பாடுபடுகிறார்கள் என்பதை புரிய வைக்கவேண்டும் அதற்காகத்தான் இந்த திருவிழா முயற்சி.  போலீஸ்காரங்க இப்படியெல்லாம் ஜாலியா இருப்பாங்கனு எங்களுக்கு இதுவரைக்கும் தெரியாதுங்க. அவ்வளவு பாசமா பழகுறாங்க எப்பவும் இப்படியே இருந்துவிட்டால் நல்லா இருக்கும் என்று அந்தக் கிராமமக்கள் சிலாகிக்க, அவர்களோடு இறங்கியது பழகியது எங்களுக்கும் ஓர் அற்புத அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்று பூரிக்கிறார்கள் போலீஸ்காரர்கள்.
 
கோவை போலீஸின் இந்த வித்தியாச முயற்சிக்கு போலீஸ் பாணியில் பெயர் வைப்பதென்றால், தாராளமாக ஆபரேஷன் அன்பு என்று  வைக்கலாம்! 

அடுத்த கட்டுரைக்கு