Published:Updated:

பஞ்சாயத்து வரம்புக்குள் வரும் அந்த 29 துறைகள் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

பஞ்சாயத்து வரம்புக்குள் வரும் அந்த 29 துறைகள் -  டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!
பஞ்சாயத்து வரம்புக்குள் வரும் அந்த 29 துறைகள் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

பஞ்சாயத்து வரம்புக்குள் வரும் அந்த 29 துறைகள் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 29 : நாட்டாண்மை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆகச் சிறந்த பகுதி - பாகம் IX. பஞ்சாயத்துகள்.

‘பாகம் IX-ன் அடிப்படை நோக்கம் – ஜனநாயகத்தில், அதிகார பரவலாக்கலை உருவாக்குவதுதான்; இதன் மூலமே, பாரம்பர்யமாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் (traditionally marginalized groups) உள்ளாட்சி அமைப்புகளில் காலூன்ற முடிவதை உறுதி செய்ய முடியும்.” என்கிறது உச்ச நீதிமன்றம். 

உள்ளாட்சி அமைப்புகள் குறித்த பாகம் 9, மூன்று பிரிவுகளைக்கொண்டது.

பாகம் IX  – பஞ்சாயத்துகள். 

பாகம் IXA – நகராட்சிகள்.

பாகம் IXB – கூட்டுறவுச் சங்கங்கள். 

மூன்று அமைப்புகளுக்கும், சாசனத்தில் ஒரே பிரிவுதான் – Article 243. ஆனால், 243 தொடங்கி 243ZT வரை 46 உட்பிரிவுகள் உள்ளன.

 “சுய அரசுக்கான நிறுவனம் – பஞ்சாயத்து” என்கிறது பிரிவு 243 (d).

“ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு உள்ள அத்தனை அதிகாரங்களையும் கிராம அளவில், ‘கிராம சபா’ (பஞ்சாயத்து) உபயோகப் படுத்தலாம்.” (243A). 20 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு மாநிலத்திலும், பஞ்சாயத்துகள் இருக்க வேண்டும். (243B) பஞ்சாயத்துப் பதவிகள், அதன் வரம்புக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும். 243-C(2). ஒவ்வொரு பஞ்சாயத்து அமைப்பிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு, அந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எஸ்.சி, எஸ்,.டி. மக்கள் தொகைக்கு ஏற்ப, பிரதிநிதித்துவம் தரப்படுவதை உறுதி செய்கிறது பிரிவு 243-D. 

குறிப்பு: சாசனம் குறிப்பிடுகிற அதே சொற்களில் எஸ்.சி., எஸ்.டி. என்று நாமும் குறிப்பிடுகிறோம். தலித் பிரிவினர், பட்டியல் மரபினர் எனப்படும் பழங்குடியினர் என்று, பொருள் கொள்ளவும். 

பஞ்சாயத்து வரம்புக்குள் வரும் அந்த 29 துறைகள் -  டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

பஞ்சாயத்துகள், அதன் முதல் கூட்டத்துக்கான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செயல்படும். அதன் பிறகு, மீண்டும் தேர்தல் மூலம், பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பதற்கு, 21 வயது அடைந்து இருந்தாலே போதுமானது. இதை நேரடியாகச் சொல்லவில்லை. இப்படிக் கூறுகிறது: 

“பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கு 25 வயது ஆகாவிட்டாலும், 21 வயதை எட்டி இருந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்”!!! (பிரிவு 243-(F)(b)

பஞ்சாயத்துகளுக்கு, என்னென்ன அதிகாரங்கள் உள்ளன..? 

11-வது அட்டவணை (Eleventh Schedule) கூறுகிற துறைகளில், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை வடிவமைக்க, செயல்படுத்த, பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் தருகிறது பிரிவு 243-G. அட்டவணை 11, என்னென்ன துறைகளை, பஞ்சாயத்துகளின் வரம்புக்குள் கொண்டுவருகிறது…?

மொத்தம் 29 துறைகள் பட்டியல் இடப்பட்டுள்ளது.

விவசாயம்; விவசாய விரிவாக்கம்.

நிலச் சீர்திருத்தம், நிலத் தொகுப்பு, மண் சேமிப்பு (Soil Conservation).

சிறு பாசனம், தண்ணீர் மேலாண்மை, நீர் நிலைப் பெருக்கம்.

கால்நடை, கோழி வளர்ச்சி, பால் உற்பத்தி.

மீன்வளம்.

சமூகக் காடுகள்.

சிறு வன உற்பத்திப் பொருள்கள்.

சிறு தொழில்கள் – உணவுப் பதப்படுத்தல் உட்பட.

கதர் கிராம கைத்தொழில்கள்.

கிராமப்புற வீட்டு வசதி.

குடி தண்ணீர்.

எரிபொருள், கால்நடைத் தீவனம்.

சாலைகள், பாலங்கள், நீர்வழிகள் உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள்.

கிராமப்புற மின்சாரம் – அதன் விநியோகம் உட்பட.

மரபுசாரா எரிசக்தி மூலங்கள்.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.

கல்வி – தொடக்க நிலை, இடைநிலைப் பள்ளிகள். (Primary and Secondary schools) 

தொழிற் பயிற்சி மற்றும் தொழிற் கல்வி. (Technical training And vocational education)

முதியோர் கல்வி, முறைசாராக் கல்வி. (Adult and non-formal education)

நூலகங்கள்.

கலாசார நடவடிக்கைகள். (Cultural activities)

சந்தைகள், பொருட்காட்சிகள். (Markets and fairs)

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் – மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்துக் கடைகள் உட்பட. (Health and sanitation, including hospitals, primary health centres and dispensaries)

குடும்ப நலம் ((Family welfare)

மகளிர், குழந்தை நலம். 

சமூக நலம் - மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் நலம் உட்பட.

நலிவடைந்த பிரிவினர் நலம் – குறிப்பாக, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர்.

பொது விநியோக அமைப்பு.

சமூக சொத்துகளின் பராமரிப்பு. 

எத்தனை துறைகள்! எவ்வளவு அதிகாரங்கள்….!

உள்ளாட்சி அமைப்புகள்தாம், ஜனநாயகத்தின் வேர்கள். 

கிராமப் பஞ்சாயத்துகள் மூலம்தான், அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். காரணம், அடித்தட்டு மக்களின் நேரடி நிர்வாகம் அங்குதான் சாத்தியம். மக்களின் கையில்தான் நிர்வாகமும் அதிகாரமும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் நியாயமான தேவைகள் கவனிக்கப்படும். ஆனால், திட்டமிட்டு பஞ்சாயத்துகளின் அதிகாரங்கள் அனைத்தும் அடியோடு பறிக்கப்பட்டு விட்டன. மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இழைக்கப்படும் வஞ்சகம் பற்றி வாய் திறப்பது இல்லை. உண்மையில் அதற்குத் துணை போகின்றனர். 

போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகிற இளைஞர்களேனும், இதுகுறித்த விழிப்பு உணர்வோடு ஜனநாயகத்தை அணுக வேண்டும் என்பதே நமது விருப்பம். குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அகன்ற விசாலமான பார்வையுடன் அரசமைப்புச் சட்டத்தைப் பார்ப்பதுவே நல்லது. TNPSC Gr4 தேர்வில், இந்த பாகம் உதவலாம். அதை விடவும், UPSC (Civil Services) Examination அதாவது, ஐ.ஏ.எஸ். தேர்வில், இத்தகைய அகன்ற அறிவு, மிகப் பெரிய அளவில் உதவும். கிராமப் பஞ்சாயத்துகளைப் போன்றே, நகராட்சிகளுக்கும் சிறப்பு அதிகார வரம்பும் பல்வேறு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பிரிவு 243-W, மற்றும் 12-வது அட்டவணை (Twelfth Schedule) இதுகுறித்து சொல்வதை நாளை பார்க்கலாம். இதற்கு முந்தைய பகுதிகளை படிக்க விரும்பினால் இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க

மாதிரித் தேர்வு 29

loading...
அடுத்த கட்டுரைக்கு