Published:Updated:

பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming

பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming

பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming

பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming

பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming

Published:Updated:
பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming

துருவத்தில் இருக்கும் பனிப்பாறைகள் உலக வெப்பமயமாதலால் உருகி வருகின்றன. இதனால் கடல்மட்டம் உயரும் என்பது உண்மையே. பனிமலைகள் உருகினால் நீராகும் உலகின் 98% நன்னீர், துருவங்களில்தான் உறைந்து கிடக்கின்றன. மொத்தமும் கடலில் கலந்தால்?

கடலிலோ உப்புநீர், கரைந்து கலப்பதோ நல்ல நீர். எனவே, கடலின் உப்பு அளவு மாறுபடும். எடை அதிகமாகவுள்ள உப்பு நீர் கீழேயும், எடை குறைவான நல்ல நீர் மேலே என்றும் இருக்கும். சிறிது சிறிதாக உப்பின் அளவு குறைந்து கடலில் இதுவரை இருந்து வந்த நீரின் கன எடை மாறுபடும். அத்தோடு இதுவரை இருந்த நீரோட்டம், காற்றோட்டம் இரண்டும் மாறுபடும். இதனால் புவியின் வானிலையில் மாற்றம் நிகழும். கடல் மட்டம் உயர்வதையும் தாண்டி பூமியில் பல மாற்றங்கள் நடைபெறும்.

"துருவங்களின் பனிமலைகள் உருகுவதால் விளைவுகள் அபாயகரமாக இருக்கும்." இந்த வாக்கியத்தின் முழுக் கருத்தும் உண்மையல்ல. அதில் சிறு மாற்றம் வேண்டும். "துருவத்தின் பனிமலைகள் உருகுவதால் விளைவுகள் அபாயகரமாக இருக்கும்." எந்தத்  துருவம்?

வடதுருவத்தின் பனிப்பாறைகள் முழுதாகக் கரைந்து கடலில் கலந்தாலும் பெரியளவில் மாற்றம் எதுவும் இருக்காது. ஏனென்றால், ஆர்டிக் பிரதேசத்தின் பனிப்பாறைகள் அனைத்தும் கடலின் மேற்பரப்பில்தான் மிதந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அதன் கொள்ளளவு கடலின் கொள்ளளவில் கலந்துதான் இருக்கிறது. ஆனால், கிரீன்லாந்து பகுதியின் பனிப்பாறைகள் உருகினால் மட்டும் கடல் மட்டம் 20 அடி வரை உயரும். வேண்டுமானால் வானிலை மாற்றங்கள் சிறிதளவில் நிகழலாம். அதுவே, தென் துருவப் பாறைகள் மொத்தமாகக் கரைந்துவிட்டால்?

அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுவதும் உருகினால் இன்று இருப்பதில் இருந்து 200 அடி உயரம் வரை கடல் மட்டம் உயரும். சூரிய ஒளியைப் பூமியிலிருந்து பிரதிபலிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பனிப்பாறைகள் இல்லையென்றால், சூரிய ஒளி கடற்பகுதியை நேரடியாக அதிக தட்பவெப்பநிலைக்கு, அதாவது அதிக வெப்பத்துக்கு ஆளாக்கும். வானிலை மிகவும் மோசமடையும். 220 அடி வரை உயரும் கடல் மட்டம் நிலத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளைப்  பாதிக்கும். பல நிலப் பகுதிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்படும். இதனால் பூமியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை அகதிகளாக்கப்படுவார்கள். நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை பேரழிவில் பலியாவார்கள். வானிலை விரைவாக வெப்பமடையும் (Rapid Heating), அதன் பிறகு விரைவாக உறைபனிப் பரவல் நடக்கும் (Rapid Cooling). மீண்டுமொரு பனியுகம் தொடங்கும்.

பனி உருகுவதால் துருவப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவை முற்றிலுமாக அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமின்றி பல நூறு ஆண்டுகளாக உறைந்தே இருந்த பகுதிகள் உருகும்போது புதுப் புது நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சைபீரியாவில் ஒரு பனிப்பாறை உருகியபோது அதற்குள் உறைந்து கிடந்த கலைமானின் சடலத்தால் அந்தப் பகுதி முழுக்க ஆந்த்ராக்ஸ் (Anthrax) என்னும் நச்சுப்பரு நோய் பரவியது. ஒரு பாறை உருகியதற்கே இப்படி என்றால், ஒரு கண்டமே உருகினால்? 

2018-ல் பிறக்கும் குழந்தைகளுக்கு 32 வயது ஆகும்போது கடல்மட்டம் தற்போது இருப்பதிலிருந்து 4.5 அடி வரை உயரும். அதுவே 2100-ல் இரண்டு மடங்காகும். அதாவது மேற்கூறியது இப்போது இருக்கும் மாசுபாட்டு அளவைப் பொறுத்து ஆராய்ச்சியாளர்கள் கூறிய அளவுகோல். வரும் காலங்களில் அது மேலும் அதிகரிக்கலாம். இது தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகக் குழு அளித்துள்ள அறிக்கை. கடல்மட்ட உயர்வு பல நாடுகளின் நிலப்பகுதிகளை நீர்ப்பகுதிகளாக மாற்றிவிடும். அது நிகழ்ந்தால் மாலத்தீவுகள், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், துவாலு, அந்தமான் நிக்கோபார் போன்ற பகுதிகள் இருக்கவே இருக்காது. 15 கோடி மக்கள் 2050லேயே சூழலியல் அகதிகளாக்கப்படுவார்கள் என்று ஐ.நா கூறுகிறது. அதுவே 2100-ல் 200 கோடியாக உயருமாம். கடல் மட்டம் 9 அடி உயர்ந்தாலே நிலைமை இவ்வளவு மோசம். மொத்த பனியும் உருகினால்?

வடஅமெரிக்காவில் வான்கூவர், சியாட்டல், போர்ட்லாந்து போன்றவை இருக்கவே இருக்காது. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோவின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்குள் தான் இருக்கும். சாக்ரமண்டோவை விழுங்கிவிட்டு சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பெரிதும் விரிவடையும். கிழக்கில் கடலோர மாகாணங்கள் மொத்தமும் அழிக்கப்படும். உதாரணமாக நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைக்  கடலுக்குள் தான் தேடவேண்டும்.

தென் அமெரிக்காவின் கதையே வேறு. கடலோரப் பகுதிகள் கடலாவதோடு நில்லாமல், உள்நிலக்  கடல் பகுதிகளும் உருவாகும். ஐரோப்பாவில் நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் அழிந்துவிடும். உலகத்தையே அடிமையாக்கிய ஐரோப்பியர்களின் பாவக் கணக்கு தீர்க்கப்படுவது போல், இந்தக்  கண்டம் தான் இருப்பதிலேயே பெருமளவில் சேதங்களைச் சுமக்கும். பெல்ஜியத்தின் பாதி இருக்காது. லண்டன், வடக்கு ஜெர்மனி அனைத்தும் கடலுக்கடியில் தான் இருக்கும். வெனிஸ், இத்தாலி போன்ற நாடுகள் அட்ரியாடிக் கடலின் ஒரு பகுதியாகிவிடும். கிரைமியன் தீவகம் (Crimean peninsula) கிரைமியன் தீவாகிவிடும். பிளாக் கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் இருக்கும் நிலங்கள் நீருக்குள் மூழ்கி இரு கடல்களும் ஒரு கடலாகி விடும்.

இருப்பதிலேயே குறைவான பாதிப்புகளோடு ஆப்பிரிக்கா தப்பித்துவிடும். ஆனால் எகிப்து பெரியளவில் பாதிக்கப்படும். அலெக்சாண்டிரியா, கைரோ இரண்டும் கடலாகத்தான் இருக்கும். பக்ரைன், கத்தார் மற்றும் பாக்தாத் நகரம் முழுவதையும் பாரசீக வளைகுடா விழுங்கிவிடும். இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய இழப்புகளைச் சந்திக்கும். அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள் எதுவுமே இருக்காது. ராமேஸ்வரம் முழுவதும் கடலுக்குள் சென்றுவிடும். குஜராத் நிலத்தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாகிவிடும். அத்தோடு கடலோரப் பகுதிகள் அனைத்தும் கடலாகி விடுவதால் அதற்கு அடுத்ததாக இருந்தவை புதிய கரையோரப் பகுதியாகும். ஆனால், பங்களாதேஷிற்கு பாதிப்புகள் மிக மிக அதிகம். அப்படியொரு நாடு இருந்ததற்கான அடையாளம்கூட இல்லாமல் அழிந்துவிட வாய்ப்புகள் உண்டு. சீனாவின் பெய்ஜிங், பியோங் யாங், சியோல், ஷாங்காய், டோக்கியோ போன்ற நகரங்கள் கடலுக்குள்தான் இருக்கும்.

ஆஸ்திரேலியா, புது உள்நிலக் கடலோடு பரப்பளவில் மிகவும் சுருங்கிவிடும். அன்டார்டிகா , மனிதர்கள் வாழத்தகுந்த வாழிடமாக மாறிவிடும். அதிர்ச்சியாக இருக்கிறதா?

இது நடப்பதற்கு இன்னும் 5000 வருடங்கள் ஆகும். அதாவது இன்றிலிருந்து அடுத்த 5000 ஆண்டுகளுக்குள் சிறிது சிறிதாக நிகழ்ந்து உலகின் புவியியல் அமைப்பு இந்த நிலைக்கு இட்டுச் செல்லப்படும். இது நடக்காமல் தடுக்க முடியாது. வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். அதற்கு முழுமுதற் காரியமாக புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும். கரிம வாயுக்கள் காற்று வெளியில் கலப்பதைத் தடுக்க வேண்டும். பாரீஸ் காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் 195 உலக நாடுகள் தத்தம் நாடுகளில் மாசுபாடுகளைச் சரிசெய்வதாகவும், உலக வெப்பமயமாதலில் அவர்களது பங்கைக் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்துக் கையெழுத்திட்டுள்ளனர். வெறும் கையொப்பத்தோடு நின்று விடாமல் அனைத்து நாடுகளும் அக்கறையோடு முயற்சிகளை மேற்கொண்டால் வரவிருக்கும் பேரழிவுகளைச் சிறிதளவேனும் கட்டுப்படுத்தலாம், தாமதப்படுத்தலாம்.