Published:Updated:

''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்?’’ - பாலபாரதி கேள்வி

''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்?’’   - பாலபாரதி கேள்வி
''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்?’’ - பாலபாரதி கேள்வி

''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்?’’ - பாலபாரதி கேள்வி

தவிப் பேராசியர் நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தையொட்டி வெளிப்படும் அரசியல் கருத்துகளும் அனலாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவு. அந்தப் பதிவில், தமிழகத்தின் மூத்தத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவார்களா? என்றக் கேள்வியுடன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினைப் பதிவிட்டிருந்தார். அவருடைய இந்தப் பதிவுதான் தற்போது தமிழகத்தில் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது குறித்து அரசியலில் உள்ள பெண் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள சிலரிடம் பேசினோம். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் பேசிய போது, 

''கனிமொழியைப் பற்றி ஹெச்.ராஜா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பி.ஜே.பி-யின் மாநிலச்  செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், 'எந்தக் கட்சியாக இருந்தாலும் பெண்களை இப்படிப் பேசுவதை ஏற்க முடியாது' என்று கூறியுள்ளார்.  தமிழிசை அவர்கள் கட்சியின் தலைவரிடம் கூறிவிட்டு ஹெச்.ராஜாவை நீக்க வேண்டியதுதானே? அதை ஏன் இன்னும் அவர் செய்யவில்லை? இதில் கனிமொழியை மட்டும் அல்ல... அவருடைய இந்தப் பேச்சு மூலம் ஒட்டு மொத்தமாக பெண்களையே இழிவுபடுத்துகிறார். பழமையான இந்துத்துவா சித்தாந்தங்களை பி.ஜே.பி கடைபிடிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. முக்கியப் பொறுப்பில் இருக்கக் கூடிய ஹெச். ராஜா இப்படி பேசியிருப்பது எப்படியான மனநிலை அவருக்கு இருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. இது அரசியலில் உள்ள மற்றக் கட்சியைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல... தமிழிசையையும்கூட அவர் அப்படித்தான் கீழ்த்தரமாகப் பேசுவார். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கருத்தினைச் சொல்லி வன்முறையைத் தூண்டி விடுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் ராஜா. காலையில் எழுந்து ராஜாவின் ட்விட்டரையோ அல்லது செய்தியையோப்  படித்தால் மனம் அமைதியிழந்து விடுகிறது. சாதாரண மனிதனுக்குள் வன்மத்தை விதைக்கிறது அவருடையப் பதிவு.

நிர்மலாவுக்கு ஆதரவு தெரிவித்து மரியாதையான கருத்துகளை வெளியிடும் ஹெச்.ராஜா, கனிமொழியைப் பற்றி தவறான கருத்தைப் பதிவு செய்திருப்பது  ஆர். எஸ்.எஸ் வெறியின் உச்சத்தைக் காட்டுகிறது. தமிழகத்து பெண்கள் இரண்டு விஷயத்துக்காக போராடவேண்டியுள்ளது. ஒன்று... ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாநிலத்தை விட்டே வெளியேற்ற வேண்டும். அதனைக் குடியரசு தலைவர் செய்ய வேண்டும். மற்றொன்று ஹெச்.ராஜாவை பி.ஜே.பி-யை விட்டே வெளியேற்ற வேண்டும்.இதனை பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்ய வேண்டும். அவ்வாறு  தமிழிசை செய்துவிட்டு மாநிலச் செயலாளராக இருந்தால், உண்மையாகவே பெண்களாகிய நாங்கள் பெருமை அடைவோம்" என்றார் .  

 இது குறித்து காங்கிரஸ் கட்சியின்  செய்தித் தொடர்பாளர் ஜோதி மணியிடம் பேசியபோது, "ஹெச் ராஜாவின் பேச்சுக்கு முக்கியத்துவம்

கொடுத்து  பதில் கூறினால் அதைவிட, தரம் தாழ்த்திக்கொள்ளும் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.மனித நாகரீகம் இல்லாதவரிடம்  அரசியல் நாகரீகத்தை எதிர்பார்த்து கருத்துக்கூறுவது எனக்கு தரம் தாழ்ந்தச் செயல் . ஒட்டு மொத்தமாக ஆர்.எஸ். எஸ் மற்றும் பி.ஜே.பி சித்தாந்தத்தின் வெளிப்பாடே அவருடையப்பேச்சு'' என்றார்

    முன்னதாக ஹெச்.ராஜாவின் பேச்சுக் குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது, 'பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அவர். 

'ஹெச் ராஜாவை பி.ஜே.பி-யிலிருந்து பதவி விலக வைக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழிசை சௌந்தர்ராஜன்?' என்ற பாலபாரதியின் கேள்வியைக் கேட்பதற்காக தமிழிசை சௌந்தர்ராஜனைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அப்போது நமது அழைப்பை ஏற்ற அவருடைய உதவியாளர் ''மேடம் மீட்டிங்கில் இருப்பதால், தற்போது அவரால் பேச முடியாது'' என பதில் அளித்து அழைப்பைத் துண்டித்தார். 

  பாலபாரதியின்  கேள்விக்கு தமிழிசை  சௌந்தர்ராஜனின்  பதில் என்ன? 

அடுத்த கட்டுரைக்கு