Published:Updated:

இது... அம்மாக்கள் ஸ்பெஷல்!

இது... அம்மாக்கள் ஸ்பெஷல்!

இது... அம்மாக்கள் ஸ்பெஷல்!

இது... அம்மாக்கள் ஸ்பெஷல்!

Published:Updated:

தாய்ப்பால், ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்ப்பால்! ஆனால், பயணம் புறப்பட்டுவிட்டால், குழந்தைக்கு பால் புகட்டுவதற்குள் படாதபாடு பட்டுவிடுவார்கள் பெண்கள். பொதுவெளியில் பால்கொடுக்க முடியாததால், பெரும்பாலும் புட்டிப்பால்தான்! ஆனால், இந்த நிலையை மாற்றும் வகையில் உலகத் தாய்ப்பால் வாரமான இந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் பால் கொடுப்பதற்கான பிரத்யேக அறைகளை பேருந்து நிலையங்களில் திறந்து வைத்து, பலரின் பாராட்டுதல்களையும் அள்ளியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா!

இது... அம்மாக்கள் ஸ்பெஷல்!

தமிழகம் முழுவதும் உள்ள 352 பெரிய பேருந்து நிலையங்களில், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எப்படி செயல்படுகின்றன என்பதை அறிய, சென்னையின் முக்கியப் பேருந்து நிலையங்கள் சிலவற்றை விசிட் செய்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு பேருந்து நிலையத்தின் தாய்ப்பாலூட்டும் அறையிலும் ஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை. சில பேருந்து நிலையங்களில் ஏற்கெனவே இருந்த அறைகளைப் புதுப்பித்து, தாய்ப்பால் ஊட்டும் அறைகளாக மாற்றியமைத்துள்ளனர்.

மந்தைவெளி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறை உள்ளே அமர இருக்கைகளும் தண்ணீர் கேன் ஒன்றும் வைத்துள்ளனர். மந்தைவெளி கிளை பொறுப்பாளர் சுப்பிரமணியன், “தொடங்கிய முதல் நாளான நேற்று, 3-4 தாய்மார்கள் அறையைப் பயன்படுத்தி உள்ளனர்” என்றார்.

மக்கள் புழக்கம் அதிகமாக உள்ள இடம், தி.நகர். அதன் பேருந்து நிலையத்தில், இன்னும் பெரியதாக தாய்ப்பாலூட்டும் அறையை அமைத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். கிண்டி பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகம் வரும். இருப்பினும், அங்கு தாய்ப்பாலூட்டும் அறை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள தாய்ப்பாலூட்டும் அறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பராமரிப்பின் கீழ் உள்ளது. இந்த அறை விசாலமாக உள்ளது, குளிரூட்டப்பட்டிருக்கிறது, இருக்கைகள் வசதியாக, தனித்தனி சிற்றறைகளாக, திரைச்சீலையுடன் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் மூலம் வெந்நீர், குளிர்ந்த நீர் போன்ற வசதியும் உள்ளன. குழந்தைக்கு உடைமாற்றும் அறை மற்றும் கைகழுவும் இடமும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 15 பெண்கள் வரை இந்த அறையைப் பயன்படுத்த இயலும். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போவதால், இந்த விசாலமான ஏற்பாடு.

இது... அம்மாக்கள் ஸ்பெஷல்!

“பால் குடிக்கிற புள்ளையை வெளியூருக்குக் கூட்டிட்டுப் போனா, புட்டிப்பால், பால் பவுடர்னு ஒரே அவஸ்தை. ஆனா, இப்போ இந்த அறைகள் ரொம்ப உபயோகமா இருக்கு. சங்கோஜம் இல்லாம பால் கொடுக்க முடியுது!’’ என்றார் ஒரு பயனாளி.

அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில், ‘மொபைல்’ அறையாக அமைத்துள்ளனர் தாய்ப்பாலூட்டும் அறையை. ஆனால், பேருந்து ஒன்று திரும்பும்போது இடித்ததால், அந்த அறையில் உள்ள கழிப்பறை தண்ணீர் குழாய் உடைந்துவிட்டதாகவும், அதனால் அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சிலர் கூறினர்.

‘மாநகராட்சியில் இருந்து ஊழியர் வந்தால்தான் திறக்க முடியும். காலையில் ஒருவர், மாலையில் ஒருவர் என வருவார்கள்’ என்றனர் பேருந்து நிலைய அலுவலர்கள்.

‘‘ஞாயித்துக்கிழமைதான் கடற்கரைக்கு கூட்டம் அதிகமா வரும். அப்போ இது ரொம்பப் பயனுள்ளதா இருக்கும். தாய்மாருங்க தவிப்பை புரிஞ்சுக்கிட்டு செஞ்ச ஒரு உருப்படியான ஏற்பாடு இது!’’ என்று பாராட்டினார் அருகில் கடலைக் கடை வைத்திருக்கும் ஒரு பெண்!

ஐ.மா.கிருத்திகா, படங்கள்: ம.நவின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism