Published:Updated:

``முகத்துக்கு நேரா எதையும் சொல்றது தப்பா..?!"- `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா

``முகத்துக்கு நேரா எதையும் சொல்றது தப்பா..?!"- `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா
``முகத்துக்கு நேரா எதையும் சொல்றது தப்பா..?!"- `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா

``என்னுடைய ஸ்மைலிங் முகம் மிகப்பெரிய பலம். எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் புத்துணர்ச்சியாக இருக்கலாம். நமக்கு எதிரில் இருப்பவரையும் சந்தோசமாக்கிடலாம்.

செய்தி வாசிப்பாளர், ஆங்கர் எனத் தன் பயணத்தைத் தொடங்கியவர் சரண்யா. தற்போது. `நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் துறுதுறு பெண்ணாக வலம்வந்து, தங்கள் வீட்டு செல்லப் பெண்ணாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

``செய்திவாசிப்பாளர் டு ஆக்டிங்... எப்படி உணர்கிறீர்கள்?''

``ஆக்டிங் ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கு. நான் எந்த வேலைன்னாலும், அதுக்காக முழுவதும் தயார்செய்துகொண்டுதான் களத்தில் இறங்குவேன். நடிக்கிறதுன்னு முடிவானதும் நிறைய ஒர்க் அவுட் பண்ணினேன். ஆனால், முதல் 30 எபிசோடுகளில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைக்கலை. செய்தியாளர் பணியை விட்டுட்டு வந்தது தப்போ என நினைச்சேன். ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகளில் வாய்ப்பு கிடைச்சது. நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள். இப்போது நிறைய குடும்பங்களில் இந்தச் சரண்யா, செல்லப் பெண் ஆகிட்டாள். அந்த அன்புக்கு நன்றி.''

``சீரியல் சரண்யாவுக்கும், ஒரிஜினல் சரண்யாவுக்கும் என்ன வித்தியாசம்?''

``ஒரே ஒரு வித்தியாசம்தான். நிஜ வாழ்க்கை சரண்யா, புடவையைத் தொட்டதே கிடையாது. எங்கே போனாலும் மார்டன் டிரஸ்தான். சீரியலில் புடவை கட்டி கட்டி, அதன் மேலே காதல் வந்துருச்சு. மற்றபடி, சீரியலில் வரும் கேரக்டர் மாதிரியே, சரி தப்பை முகத்துக்கு நேரா சொல்லிருவேன்.''
 

``உங்கள் பிளஸாக நினைக்கும் விஷயம் என்ன?''

``என்னுடைய ஸ்மைலிங் முகம் மிகப்பெரிய பலம். எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் புத்துணர்ச்சியாக இருக்கலாம். நமக்கு எதிரில் இருப்பவரையும் சந்தோசமாக்கிடலாம். இதனால், யாரையும் எளிதில் அணுகிட முடியுது. அது நிறைய அன்பு உள்ளங்களைக் கொடுத்திருக்கிறது.''

``நிஷா ஏன் சீரியலை விட்டு வெளியேறிட்டாங்க?''

``இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. அது நிஷாவின் தனிப்பட்ட விஷயம். எனக்கு சீனியரான அவங்களிடம் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அவங்க சீரியலிலிருந்து விலகறதுக்கு எந்த வகையிலும் நான் காரணம் இல்லை. நிஷா மீது நான் நிறைய மரியாதை வெச்சிருக்கேன்.''

உங்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம் பற்றி சொல்லுங்கள் ?

எனக்கு டிரஸ்ஸிங் பண்றதுன்னா நிறையவே பிடிக்கும்.கல்லூரி படிக்கும் போதே நிறைய மிக்ஸ் அண்ட் மேட்ச் டிரை பண்ணுவேன்.புதுசு புதுசா எதையாது உருவாக்கிப் போட்டு பார்ப்பேன்.உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதால் எனக்கு எந்த வகையான ஆடையும் எளிதில் செட் ஆகிவிடும்.மேலும் என் உடல் வாக்குக்கு எந்த வகையான ஆடை பொருந்தும் பொருந்தாது என்பதில் நல்ல புரிதல் இருக்கு.எனக்கு புதுப்புது கலர்களில் ஆடை அணிவது பிடிக்கும்.ஆடைகளும் ,நாம் அணியும் வண்ணங்களும் நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் என்பதை நான் தீவிரமா நம்புறேன்.சீரியலில் நடிக்க வரும் போது ஒரே மாதிரி டிரஸ் தான் கொடுத்துறருவாங்கலோனு பயந்துகொண்டே இருந்தேன்.ஆனால் சீரியலையும் எனக்கு ஏற்ற மாதிரி புதுப்புது கலர்களில் டிரஸ் செலக்ட் பண்ணி கொடுத்தார்கள்.சீரியலில் நான் அணியும் ஆடைகளுக்கு என்றே நிறைய ரசிகைகள் இருக்காங்க.அதனால் நான் உடுத்தும் ஆடையில் இருந்து அணியும் அணிகலன் வரை எல்லாவற்றிலும் ரொம்பவே கான்சியஸா இருப்பேன்.சீரியலில் அன்றைய எபிசோடுக்கான ஆடையை அணிந்ததும் பலமுறை எனக்கு அந்த டிரஸ் செட் ஆகுமானுன்னு யோசித்து தான் முடிவு எடுப்பேன்.

``உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் எது?''

``நான் இந்த சீரியலுக்குள் வரும்போது, இங்கே எல்லாரும் சீனியர்ஸ். இவங்களைத் தாண்டி மக்கள் எப்படி என் கேரக்டரை ஏத்துப்பாங்கனு சந்தேகம் இருந்துச்சு. போன மாசம் அய்யம்பாளையம் வரைக்கும் போயிருந்தேன். அங்கே இரவு 11 மணிக்கு ஒரு அக்கா, `வாம்மா சரண்யா'னு அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போய், டீ போட்டு கொடுத்தங்க. சுமார் 100 நாள்களாகத்தான் சீரியலில் என்னுடைய பயணம். அதுக்குள் மக்களிடம் அன்பைச் சம்பாதிச்சிருக்கேன். இதைவிட ஒரு நெகிழ்வான, மறக்கமுடியாத தருணம் என்ன இருக்கப்போகுது.''

``உங்க அடுத்த திட்டம் என்ன?''

``இப்படித்தான் என் எதிர்காலம் இருக்கணும்னு எந்த பிளானும் பண்ணிக்கிறதில்லை. பிடிச்ச விஷயத்தைப் பண்ணுவேன். போர் அடிக்கும்போது, கொஞ்சம் இடைவெளி எடுத்துட்டு மீண்டும் பயணப்படுவேன். சினிமா வாய்ப்புகள் வருது. ஆனால், சினிமாவில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. தொடரில் சிறப்பாக நடிக்கணும் அவ்வளவுதான்.''

கலக்கு செல்லம் கலக்கு!

அடுத்த கட்டுரைக்கு