Published:Updated:

`எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்!' - `கலகக்காரன்' பெரியார் பாடல்

`எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்!' - `கலகக்காரன்' பெரியார் பாடல்

இன்னிக்கு ரொம்பப்பேர் பெரியாரையும் அம்பேத்கரையும் பிரிச்சுப்பார்க்குறாங்க. ஆனா, அது ரொம்ப ஆபத்தானது. அவர்கள் ரெண்டு பேரோட தேவையும் இன்னைக்கு ரொம்ப முக்கியம்.

`எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்!' - `கலகக்காரன்' பெரியார் பாடல்

இன்னிக்கு ரொம்பப்பேர் பெரியாரையும் அம்பேத்கரையும் பிரிச்சுப்பார்க்குறாங்க. ஆனா, அது ரொம்ப ஆபத்தானது. அவர்கள் ரெண்டு பேரோட தேவையும் இன்னைக்கு ரொம்ப முக்கியம்.

Published:Updated:
`எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்!' - `கலகக்காரன்' பெரியார் பாடல்

சுயமரியாதை அறிவு
பகுத்தறிவுப் பாதை உனது
சகமனிதனைச் சமமாய்த்
தொடுவது ஒரு குற்றமென 
சுற்றிவந்த முட்டாள் மனதில் 
இடியென விழுந்தது யார்?
சடங்கினை உதைத்தது யார்?
கடவுளை மறுத்தது
மனிதனை நினைத்தது
சமத்துவம் உரைத்தது யார்?
பெரியார்

#HBDPeriyar140 என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் காலையிலேயே டிரெண்டாகியுள்ளது. தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளான இன்று, சமூக வலைதளமெங்கும் பெரியாரின் கருத்துகளையும் புகைப்படத்தையும் பதிவிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர் இளைஞர்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பெரியாரின் சிந்தனைகளைப் பற்றிய கூட்டங்களையும் விவாதங்களையும் நடத்திவருகின்றனர்.

சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகிவிட்ட சூழலில், நீலம் பண்பாட்டு மையம், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இணைந்து, பெரியாருக்காக ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. `கலகக்காரன் பெரியார்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை, காஸ்ட்லெஸ் கலெக்டிவின் பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு எழுதிப் பாடியுள்ளார். முழுக்க ராப் இசையில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பெரியாரின் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் பாடலை எழுதிப் பாடியுள்ள அறிவிடம் இதுகுறித்துப் பேசியதிலிருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பெரியாரோட பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அவருடைய சிந்தனைகளை எடுத்துட்டுப்போறதுக்கான ஒரு சின்ன அறிமுகமா இந்தப் பாடல் இருக்கும். அந்த நோக்கத்துலதான் நீலம் பண்பாட்டு மையம், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல், காஸ்ட்லெஸ் கலெக்டிவ் சேர்ந்து இந்தப் பாடலை உருவாக்கினோம். பெரியார், அம்பேத்கர் மாதிரியான தலைவர்களைப் பற்றி, குறிப்பிட்ட குழுவான மக்கள் மட்டும்தான் பேசிட்டு இருக்காங்க. ஆனா, எல்லா மக்களுக்கான தலைவர்களா அவங்க வாழ்ந்திருக்காங்க. தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை மக்கள் முன்னேற்றத்துக்காகச் சிந்தித்துச் செலவிட்டாங்க. பொதுமக்கள் மத்தியில் இந்தத் தலைவர்களைக்கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியா நான் இந்த மாதிரியான பாடல்களைப் பார்க்கிறேன். அந்தத் தலைவர்களே அந்தக் காலத்துல இதைத்தான் கூறினாங்க. வரும்காலங்கள்ல அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி, மக்களுக்குப் புரியுறவிதத்துல கொள்கைகளைக்கொண்டு சேரக்கணும்னுதான் பெரியாரும் அம்பேத்கரும் சொன்னாங்க. 

இன்னிக்கு நாம ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சோஷியல் மீடியாக்குள்ள போயிட்டுதான் வர்றோம். சோஷியல் மீடியா பயங்கர பவர்ஃபுல்லானது. அதை எப்படிப் ஆக்கபூர்வமா பயன்படுத்துறதுங்கிறதுதான் என்னோட மிக முக்கியமான வேலை. பாப் மார்லேதான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரை வெறுமனே இசைக்கலைஞரா மட்டும் பார்க்க முடியாது. அவரோட பாடல்கள்ல புரட்சிகரமான வரிகளும் நிறைஞ்சிருக்கும். அதைப்போலதான் என் பாடல்களையும், ராப் இசையோடு சேர்த்து கருத்தாழமிக்கப் பாடல்களா உருவாக்கிறதுதான் என் ஐடியா.

`தெருக்குரல்'கிற பேர்ல நாங்க இளைஞர்கள் கொஞ்சபேர் சேர்ந்து, வாராவாரம் பார்க்ல பாடல் பாடி அதை ஃபேஸ்புக்ல லைவ் பண்றோம். அதுவும் ஒரு சிறு முயற்சிதான். மக்களுக்கானதுதான் கலை. அதை அந்த மக்களுக்குப் பயனுள்ளவிதமாகப் பயன்படுத்துறதுதான் அந்தக் கலைக்கு நாம செய்ற நியாயமான மரியாதை. இன்னிக்கு ரொம்பப்பேர் பெரியாரையும் அம்பேத்கரையும் பிரிச்சுப்பார்க்குறாங்க. ஆனா, அது ரொம்ப ஆபத்தானது. அவர்கள் ரெண்டு பேரோட தேவையும் இன்னைக்கு ரொம்ப முக்கியம். `எனக்கொரு தலைவனைப் பிடிக்குமே அது அம்பேத்கர் என்றிட்டார்...' என்ற வரி இந்த பாட்டுல இருக்கு. அந்த ரெண்டு பேரும் முக்கியமானவங்கன்னு உணர்த்துறதுக்காகத்தான் அந்த வரி. இன்னிக்கு ஒருநாள் மட்டும் பெரியாரைப் பற்றிப் பேசிட்டு, நாளைக்கு வேற டாப்பிக் பேச நகராம, பெரியாரைப் பற்றி தொடர்ந்து பேசணும். அது நம்மளோட கடமை" என்றார்.

'இறப்பினைவிடவும்
சிறப்பது மனிதம்
பகுத்தறிவடையும்
பொழுதினி விடியும்
சரித்திரம் முழுதும்
சமத்துவம் எழுதும்
இருக்கை இணையும் 
பொழுது முடியும்'

என்ற வரிகள் பின்னணியில் ஒலித்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism