`நம்மை நாமே கண்டுபிடிப்பதற்கும் அதே நேரத்தில் நம்மைத் தொலைந்துபோகச் செய்வதற்குமான சக்தியைக் கொடுப்பதுதான் கலை’ - அமெரிக்க தத்துவவியலாளர் தாமஸ் மெர்ட்டன் (Thomas Merton).

பாரம்பர்யக் கலைகள் குறித்துப் பலரும் குறைப்பட்டுக்கொள்கிற முக்கியமான விஷயம், `புரியவில்லை’ என்பதுதான். கர்னாடக இசை, இந்துஸ்தானி, பரதம் என எந்த வடிவமாக இருந்தாலும் இந்தப் `புரியவில்லை’ தவிர்க்க முடியாத அம்சமாகவே இன்றும் இருக்கிறது. கலையின் வளர்ச்சிக்குத் தடைபோட இதுவும் ஒரு காரணம். ஒரு கலை, மக்களிடம் அதிகமாகப் போய்ச் சேரும்போதுதான் அதன் வளர்ச்சி அபாரமானதாக இருக்கும். கலையைக் காலத்துக்கேற்ப புதுப்பிக்கும் வேலையை, பல கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களால்தான் பல கலைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், பரதக்கலைஞர் லட்சுமி ராமசுவாமி.

``பிரபல தினசரிப் பத்திரிகையில் நிருபரா வேலை பார்க்கிற ஒருத்தர், என் நண்பர். பலமுறை அவரை என் பரதநாட்டிய நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர் வந்ததே இல்லை. கேட்டா, `எனக்கு பரதமெல்லாம் புரியாதுங்க’னு சொல்லிடுவார். ஒருநாள், `சென்னையில என்னோட புது புரொடக்ஷனை அரங்கேற்றப்போறோம். ஒரு தடவை வந்து பாருங்களேன்’னு கூப்பிட்டேன். அவர் `வர்றேன், வரலை’னு எதுவுமே சொல்லலை. பேசாம போயிட்டார். அது, புறநானூற்றுல இருந்து சில பாடல்களை எடுத்து நாங்க தயாரிச்ச `அந்த நாளும் வந்திடாதோ...’ங்கிற நாட்டிய நாடகம். அவர் என்ன நினைச்சாரோ தெரியலை. அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பத்திரிகையில விரிவா, பிரமாதமான ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அந்த விமர்சனத்துல, `கிளாசிக் டான்ஸ்னா புரியாது, அது அப்படிப்பட்ட கலைவடிவம்கிற அபிப்பிராயத்துலதான் நான் இருந்தேன். ஆனா, அதையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்; மக்களை ரசிக்கவெக்க முடியும்னு இந்த நாட்டிய நாடகம் நிரூபிச்சிருக்கு. இனிமே யாரும் பரதக்கலையைப் `புரியலை'னு சொல்ல வேண்டிய தேவையிருக்காது’னு குறிப்பிட்டிருந்தார்’’ என்றபோது, கலையின் வழியே ரசிகரை மலைக்கவைத்த மகிழ்ச்சி லட்சுமி ராமசுவாமி முகத்தில் தெரிந்தது. இதுதான் இவரின் தனித்துவமான அடையாளம்.

தனிநபர் பரதநாட்டியம் ஆடுகிற கையோடு, இவர் நிகழ்த்தும் நாட்டிய நாடகம் ஒவ்வொன்றுமே எல்லோரையும் ரசிக்கவைக்கிற, பிரமிக்கவைக்கிற, நம் கண்களுக்கு விருந்தாக அமைந்துவிடுகிற அற்புதம். ஆரம்பம் முதல் முடிவு வரை பார்க்கிறவர்களைக் கட்டிப்போட்டுவிடுகின்றன இவருடைய நிகழ்ச்சிகள். தமிழ்மீது ஆழ்ந்த பற்றும், தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வமும்கொண்டவர் லட்சுமி ராமசுவாமி. ஒவ்வொரு நாட்டிய நாடகத்துக்கும் இவர் எடுத்துக்கொள்கிற பாடல்கள் எல்லாம் தனிரகம். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, திருவரங்கக் கலம்பகம்... என நீளும் அந்தப் பாடல்கள் கண்களோடு, நம் செவிக்கும் விருந்து படைப்பவையே. அவரிடம் பேசினோம்.

``தனிநபர் நாட்டியத்தைவிட குழு நாட்டியத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்களே?’’

``ஒருத்தர் ஆடுறதைப் பார்க்கிறதைவிட அஞ்சு பேர் சேர்ந்து ஆடுறதைப் பார்க்கிறது எல்லாருக்குமே சந்தோஷமா இருக்கும். இதுதான் என் முயற்சிகளுக்கான தொடக்கம். ஒரு பெரிய கதையை ஒரு குழுவா சேர்ந்து செய்யறது இன்னும் வசதி. தனிநபர் நாட்டியத்துல (Solo) `தசாவதாரம்’ கதையைப் பண்றேனு வெச்சுப்போம். பிரகலாதன், நரசிம்மர், ஹிரணியகசிபுனு நானே எல்லாப் பாத்திரங்களையும் பண்ண
வேண்டியிருக்கும். இதையே ஒரு குழு நாட்டியமா செஞ்சா, ஒரு சிறுவனைப் பிரகலாதனா நடிக்கவைக்கலாம்; கொஞ்சம் ஆஜானுபாகுவா இருக்கிற ஒருத்தரை நரசிம்மரா ஆடவைக்கலாம். அதோட, கதையை எல்லாரும் எளிமையா புரிஞ்சுக்கக்கூடிய வாய்ப்பும் இதுல இருக்கு.

என் குரு, சித்ரா விஸ்வேஸ்வரன்கிட்ட நான் படிச்ச காலத்துல இப்படிக் குழுவா பண்ற நாட்டியங்கள் ரொம்பக் குறைவு. நாளாக ஆக, கலாக்ஷேத்ரா உட்பட பலரும் குழு நடனத்தைக் கொண்டுவர ஆரம்பிச்சாங்க. பரதம் கத்துக்கிற எல்லாக் குழந்தைகளாலயும், எப்பவும் தனிநபர் நாட்டியம் பண்ண முடியாது. பல குழந்தைகளுக்கு அரங்கேற்றம் பண்றதே சிரமமான காரியம். ஏன்னா, ஒரு நாட்டிய நிகழ்வு, அவ்வளவு செலவு பிடிக்கிற விஷயம். இப்படிக் குழுவா நாட்டிய நாடகங்கள் பண்ணும்போது நிறையபேர் பங்கேற்கலாம்கிற வசதி இருக்கு. செலவுகளைக் கொஞ்சம் பகிர்ந்துக்க முடியும்.

ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் சீஸன் வரும்போது, எல்லாரும் என்கிட்ட கேட்கிற கேள்வி, `இந்த வருஷம் புதுசா என்ன பண்ணப்போறீங்க?’ங்கிறதுதான். இது சர்வ சாதாரணமான கேள்வியாகிடுச்சு. இதுலேருந்தே குழு நாட்டியத்துக்கான வரவேற்பைப் புரிஞ்சுக்கலாம்’’ சிரித்த முகத்தோடு சொல்கிறார் லட்சுமி ராமசுவாமி.

``நாட்டிய நாடகங்களை நிகழ்த்த வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது?’’

``புதுசா ஏதாவது பண்ணணும்னு யோசிச்சப்போதான் எனக்கு டாக்டர் ரகுராமனோட அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட தொல்காப்பியம், சிலப்பதிகாரம்னு தமிழ் படிக்க ஆரம்பிச்சேன். அப்போ தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வராக ராஜேஸ்வரி அம்மா இருந்தாங்க. அவங்கதான் `சங்கத் தமிழ்ல இருந்து ஏதாவது பாடலை எடுத்து அதுக்கு டான்ஸ் பண்றியா?’னு கேட்டாங்க. அதுவரைக்கும் எனக்கு சங்கத்தமிழ் அறிமுகமே கிடையாது. அது 2,000 ஆண்டுகள் பழைமையானதுங்கிறது மட்டும்தான் எனக்குத் தெரியும்.

நான் ரகுராமன்கிட்ட `என்னால இதைப் பண்ண முடியுமா’னு கேட்டேன். அவர், `முதல்ல படி... அப்புறம் பார்க்கலாம்’னார். நான் `நற்றிணை’யை முழுக்கப் படிச்சேன். இது இதெல்லாம் டான்ஸுக்கு நல்லா இருக்கும்னு 20 பாடல்களை எடுத்தேன். அதுலேருந்து 12 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு கதையா வடிவமைச்சோம். நற்றிணையில தனியா கதை இல்லை. பல புலவர்கள் பல காலகட்டங்கள்ல எழுதிய பாடல்களோட தொகுப்பு அது. அந்தப் பாடல்களுக்கு ஏற்ப ஒரு கதையை உருவாக்கினோம். அதை `சங்கமும் சங்கமும்’ங்கிற பேர்ல மேடையேற்றினோம்.

அதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சிதம்பரம் கோயில்லேருந்து `ஒரு குரூப் டான்ஸ் பண்றீங்களா?’னு கேட்டிருந்தாங்க. அப்போ `நடராஜர் பேர்ல ஒரு தூது இலக்கியம் பண்ணினா என்ன?'னு ஒரு யோசனை. இதுவரைக்கும் நடராஜர் பேர்ல எந்தத் தூது இலக்கியமும் கிடையாது. ஒரு நாட்டியப் பெண் தன் சிலம்பையே நடராஜருக்குத் தூதா அனுப்புற மாதிரி கதையை உருவாக்கினோம்.

`சிலம்புவிடு தூது’னு மேடையேற்றினோம். அதை அந்த வருஷமே கிருஷ்ண கான சபாவுல ஒன்றரை மணி நேர நாட்டிய நாடகமா பண்ணினோம். அதுதான் குழுவா நாட்டிய நாடகம் பண்ணின முதல் அனுபவம். அதுவரைக்கும் என் ஸ்டூடன்ட்ஸ் வெளி உலகத்துக்துத் தெரிஞ்சதே இல்லை. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வெளியே தெரிய ஆரம்பிச்சுட்டாங்க.’’

லட்சுமி ராமசுவாமியின் நிகழ்த்துகலைகள் தமிழோடு இரண்டறக் கலந்தவை. சிறுதொண்டர், நீலகண்டர், கண்ணப்பநாயனார் கதைகளை விவரிக்கும் `ஆளாவது எப்படியோ?', சிவன் நாட்டியமாடியதாகச் சொல்லப்படுகிற ஏழு தலங்களை தேவாரப் பாடல்களின் பின்னணியில் விவரிக்கும் `சப்த விடங்கம்’, படித்தாலும், கேட்டாலும், பார்த்தாலும், நினைத்தாலும் நன்மையையெல்லாம் வாரி வழங்கும் `சுந்தர காண்டம்’, மதுரை மீனாட்சி தொடங்கி சுக பிரம்மரிஷி வரை அர்த்தமுள்ள அடையாளமாக இருக்கும் கிளியை மையப்படுத்திய `சுக மார்க்கா’; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் கதைகளைச் சொல்லும் `நால்வர்’ என இவரின் நாட்டிய நாடகங்கள் தனித்துவமானவை.

``ஒரு கலை என்ன செய்யும்?’’

``சமீபத்துல ஒரு பிரபலம் சொல்லியிருக்காங்க… `கலைகளுக்கு நிறைய இடம் கொடுத்தா, சமூகக் குற்றங்கள் குறைஞ்சுபோயிடும்’னு. அது உண்மை.

அரசன் பேகன்கிட்ட ஒரு புலவர் போறார். அவர் பேர் அரிசில் கிழார். `உன்னுடைய ராஜ்ஜியத்துல ஒரு பெண் சத்தம் போட்டு அழுதுக்கிட்டு இருந்தா. அவளைப் பார்க்கும்
போதே புகை படிந்த ஓர் ஓவியம் மாதிரி இருந்தது’னு சொல்றார். உடனே பேகன் கேட்கிறான்… `என்னுடைய ராஜ்ஜியத்துல கஷ்டமா, அதுவும் ஒரு பெண்ணுக்கா, நம்பவே முடியலையே, அந்தப் பெண் யாரு?’ உடனே சற்றும் தாமதிக்காமல் அந்தப் புலவர் சொல்கிறார்… `உன் மனைவி’ என்று.

ஒரு கவிஞனால சற்றும் தயக்கமில்லாமல் அரசனையே குற்றம் சொல்ல முடிந்தது, அந்தக் காலம். அந்தச் சூழல் என்னன்னா, பேகன் தன் மனைவியை விடுத்து, வேறொரு பெண்ணின்பால் ஈர்ப்புக்கொண்டிருந்த நேரம். இதைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுகிறார் அரிசில் கிழார். அதை ஏற்றுக்கொண்டு, பேகன் தன் மனைவியை வீட்டுக்கு அழைத்துவருகிறான். கலை, இலக்கியம் எதையும் செய்யும் என்பது இந்த நிகழ்வின்மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புறநானூற்றுப் பாடல்கள்ல போர் மட்டும் சித்திரிக்கப்படலை; நட்பு, மகிழ்ச்சி, குழந்தைப்பருவம், நீதின்னு என்னென்னவோ இருக்கு.இதையெல்லாம் எங்க நிகழ்ச்சியில கொண்டுவந்தோம்.’’

``நாட்டியம் ஏன் மக்களிடம் போய்ச் சேர்வதில்லை?’’

``ஏன்னா, அதுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இல்லை. ஒரு டிவி சீரியல் உங்க வீட்டுக்குள்ளேயே வந்துடுது. ஆனால், ஒரு கலை குறித்த விழிப்பு உணர்வு இல்லை. இலங்கை மாதிரி பல நாடுகள்ல பள்ளிக் காலத்துலேயிருந்தே ஏதோ ஒரு கலையை மாணவர்கள் எடுத்துப் படிக்கிறாங்க. அப்படிப் படிக்கிறவங்களுக்கு வேலையும் கிடைக்குது. அந்த நிலைமை நம்ம நாட்டுலயும் வரணும். எல்லாப் பள்ளிகள்லயும் பரதநாட்டியம் படிச்ச ஆசிரியர்கள் நியமிக்கப்
படணும். கரடுமுரடான இந்த வாழ்க்கையைக் கடந்துசெல்ல உதவும் ஒரே கருவி கலைதான். குழந்தைகளுக்குக் கலையை, கலை ரசனையைச் சொல்லிக்கொடுக்கணும். ஒரு பூ மலர்ந்திருக்குன்னா, `அடடா… இது மலர்ந்திருக்கே’ன்னு நமக்கு ரசிக்கத் தெரியணும். ஆக, ரசிகத் தன்மையை நாம வளர்க்கலை. நம்ம கல்வித் திட்டத்துல அது இருந்திருக்கணும். அப்படி இருந்திருந்தா, சமூகத்துல வெறுமை நிலவியிருக்காது; பல குற்றங்கள் அரங்கேறியிருக்காது. கலை வெளியே வந்தா, சமூகத்துல குற்றங்கள் குறையும். இது தொடர்பா வெளிநாடுகள்ல ஆராயச்சிகள்லாம் நடந்திருக்கு. ஆக, ரசிகத்தன்மை அதிகமானா எல்லாருமே தனிநபர் நாட்டியத்தைக்கூட ரசிக்க ஆரம்பிச்சுடு
வாங்க’’ என்கிறார் லட்சுமி ராமசுவாமி.

ரசனையை வளர்ப்போம்!

பாலு சத்யா