திருவல்லிக்கேணி, அய்யா தெருவிலுள்ள இரண்டு மாடி பங்களா. வெளிச் சுவரில் `ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா அனுக்கிரஹா' என்று பெரிய எழுத்துகளில் வீட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. கோட்டைக் கதவுகள் மாதிரி வாசலில் இரும்பு கேட். பலம்கொண்டு அழுத்தித் திறந்து உள்ளே நுழைந்தவுடன் படிக்கட்டுகள் வழியே இரண்டாவது மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்.

விசாலமான அறை. தரையில் குறுக்கும் நெடுக்குமாகப் பத்தமடைப் பாய்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. மூலையில் சிறியதும் பெரியதுமாகப் பயணப் பெட்டிகள்.

சுவர் நெடுக காஞ்சி மகா பெரியவா படங்கள். சின்ன ஊஞ்சலிலும் பூஜை மண்டபத்திலும் நடமாடும் தெய்வத்தின் திருவுருவங்கள். சிறு விளக்கு சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. பளிச்சென்று உள்ளே நுழைகிறார், கடம் மேதை `விக்கு' விநாயகராம். பஞ்சகச்ச வேஷ்டி, சந்தனக் கலரில் அரைக்கைச் சட்டை. இரண்டாவது பித்தானை மறைத்து காஞ்சி மாமுனிவர் படம் பதித்த பேட்ஜ். தரையில் சப்பணமிட்டு அமர்கிறார் 76 வயது வித்வான். அருகில் இருந்த கடம் எடுத்துத் தன்முன் ‘டெடிபேர்’ மாதிரியாக வைத்துக்கொள்கிறார்! குழந்தை மாதிரி சிரிக்கிறார். சீவல், புகையிலை பழக்கம் உண்டு. ஆனால், காவி படிய பற்கள் கிடையாது!

அக்டோபர் 10 அன்று மியூசிக் அகாடமி இவருக்கு `சிறப்பு வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்துக் கௌரவித்தது. அகாடமி அபூர்வமாகக் கொடுக்கும் விருது இது. இதற்கு முன்னர் கமலா லட்சுமிநாராயணன் (பரதம்), லால்குடி ஜெயராமன் (வயலின்) இருவருக்கு மட்டுமே வாழ்நாள் சாதனையாளராக அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. இப்போது விக்கு.

``விநாயகராம் என்ற பெயருடன் `விக்கு' இணைந்தது எப்படி?''

``ஒருமுறை கச்சேரிக்காக எம்.எஸ் அம்மா குழுவுடன் அமெரிக்கா சென்றிருந்தேன். பக்கவாத்தியக் கலைஞர்களைச் சுருக்கிப் பெயரிட்டு அழைப்பதுதான் எம்.எஸ்., வழக்கம். என்னை எப்படி அழைக்கலாம் என்று யோசித்தார்கள். அருகிலிருந்து குட்டிப் பெண், `விக்கு' என்று திடீரென்று யோசனை சொல்ல, அதுவே என் பெயருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது...'' என்றார் விநாயகராம்.

பூஜை மண்டபத்தில் காஞ்சி பெரியவரின் சின்னதான பேப்பர்மெஷ் சிலைக்குப் பின்னால் கடம் ஒன்று வைக்கப்பட்டிருப்பது கண்களில் பட்டது. அதன் வாயில் பூக்கள்.

``அதுவா, ஒரு தடவை மானாமதுரையில் புது கடம் வாங்கிட்டு, பெரியவாகிட்ட ஆசி வாங்க காஞ்சிபுரம் போனேன்... சாதாரணமா மற்ற இசைக்கருவிகளைக் கையால தொடமாட்டார் பெரியவா. அன்னிக்குக் கடத்தை என்னிடமிருந்து வாங்கி `டங்'னு தட்டிப் பார்த்தார். எனக்கு உடல் சிலிர்த்தது. பெரியவா விரல் பட்ட கடத்துல என் கை விரல்கள் படக்கூடாதுன்னு அதை பூஜைல வச்சுட்டேன்.''

காஞ்சி மகான் பற்றி பேச்செடுத்தாலே இவரது கண்கள் பனிக்கின்றன. அந்த அளவு அதி தீவிர பெரியவா பக்தர்.

விநாயகராமுக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு கதை உண்டு.

திருச்சி திட்டக்குடியில் டி.ஆர். ஹரிஹர சர்மா - நீலாம்பா தம்பதிக்கு முதலில் பிறந்தது ஒரு பெண் குழந்தை. அடுத்து ஆண் ஒன்று, பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள்.

``நான்தான் அந்த ஆண் குழந்தை. எனக்கு ராமசேஷன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எங்கள் இருவரில் ஒரு குழந்தை மட்டுமே பிழைக்கும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.’’

ஹரிஹர சர்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரவில் தூக்கம் வராமல் தவித்தார். குழந்தைகள் பிழைக்க வேண்டுமென இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டினார். மூத்த சகோதரர் வைத்தியநாத சர்மாவிடம் ஆலோசித்தார்.

பிள்ளையாருக்குக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் ஒரு மரபு அந்நாளில் உண்டு. தம்பிக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் தனயன். ஆண் குழந்தையைத் தத்துக் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறார். முதலில் தயங்கினாலும், குழந்தை பிழைக்க வேண்டுமே என்பதற்காக ஒப்புக்கொண்டார் ஹரிஹர சர்மா.

தென்னூர் பிள்ளையார் கோவிலில் தேவையான சடங்குகள் செய்யப்பட்டு, குழந்தையை ஆனை முகத்தானுக்கு தத்துக்கொடுத்தார்கள். ஆசைக் குழந்தை பிழைத்தது. அதற்கு `விநாயகராமன்' என்று பெயரிட்டார்கள்.

``இதுதான் நான் விநாயகராம் ஆன கதை'' என்று சொல்லிச் சிரித்தார் விக்கு!

திட்டக்குடியில் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஹரிஹர சர்மா, நன்றாக மிருதங்கம் வாசிக்கக் கூடியவர். பிரபல மிருதங்க வித்வான் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் சீடரான இவர், நிறைய கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்திருக்கிறார். ஒரு சமயம் கச்சேரிக்கு மெட்ராஸ் வந்திருந்தபோது டிராமில் பயணித்திருக்கிறார். அப்போது ஜன்னல் ஷட்டர் திடீரென்று கீழிறங்கி, இவரது வலது கை மோதிர விரலைத் துண்டித்துவிட்டது. இனிமேல் மிருதங்கம் வாசிக்க இயலாது என்பதால் சோர்ந்துவிடவில்லை ஹரிஹர சர்மா. மோர்சிங் வாசிக்க ஆரம்பித்தார். கச்சேரிகளுக்காக திருச்சிக்கும் சென்னைக்குமாகப் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

மகனுக்கு லயத்தில் ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்தார் ஹரிஹர சர்மா. முக்கியமாக, கடம் வாசிப்பதில் அவனுடைய ஈடுபாடு அதிகமிருந்ததையும் புரிந்துகொண்டார். பாடம் ஆரம்பமானது. அவருக்கு மிருதங்கம் வாசிப்பது இயலாமல் போய்விட்டதால், தாளக்கட்டுகளை வாய்மூலமாகச் சொல்லி, கடத்தில் அவற்றை வாசிக்க மகனைப் பழக்கினார்.

``பண்டிட் ரவிசங்கரின் சிதார் மாதிரி என் மூலமாகக் கடம் உலகளவில் பிரபலமாக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. என்னைக் கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்தினார். தினமும் விடியற்காலை என்னை பூஜைஅறையில் கடத்துடன் உட்கார வைத்துவிட்டு வெளியே கதவைப் பூட்டிவிடுவார். நான் ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பி வாசித்துக்கொண்டிருக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு தானாக அணையும் வரை வாசிப்பதை நிறுத்தக் கூடாது...'' என்று அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் விநாயகராம்.

வருடம் 1955. தூத்துக்குடி ராமநவமி உற்சவத்தில் கடம் கலைஞராகப் பதின்மூன்று வயது விநாயகராமின் அரங்கேற்றம். அன்று வி.வி.சடகோபன் பாட்டு, மதுரை கிருஷ்ண ஐயங்கார் மிருதங்கம்.

இனி தனக்குக் கடம்தான் முழுநேரத் தொழில் என்பதை உணர்ந்தார் விநாயகராம். ``நீ பெரிய கடம் வித்வானாக உயர வேண்டும். ஆனால், பணத்துக்காகவும் புகழுக்காகவும் வாசிக்கக் கூடாது. உன்னைவிட இசையும் கடமும் மிகப் பெரியது என்பதை என்றும் மறந்துவிடாதே...'' என்ற தந்தையின் சொல்லை மந்திரமாகக்கொண்டு படிப்படியாக முன்னேறினார். அன்றைய முன்னணிப் பாடகர்கள் பலருக்கும் உபபக்கவாத்தியமாகக் கடம் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

மியூசிக் அகாடமியில் செம்மங்குடியின் பாட்டுக்குக் கடம் வாசிக்கும் வாய்ப்புப் பெற்றார் விநாயகராம். முன்வரிசையில் எம்.எஸ், சதாசிவம் உள்பட பிரபலங்கள் பலர். மறுநாள், எம்.எஸ். சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் செம்மங்குடி. கல்கி கார்டன்ஸுக்கு இளம் கடம் வித்வானை அழைத்துச் சென்றார். உடன் ஹரிஹர சர்மாவும்.

``எங்க குழுவுடன் நீயும் வெளிநாட்டுக்கு வர்றியா?'' என்று கேட்டார் சதாசிவம்.

``நிச்சயம் வரேன்... அப்போதான் நானும் பச்சை நோட்டுப் பார்க்க முடியும்...'' என்றார் விநாயகராம். அவர் கண்முன் நூறு ரூபாய் நோட்டு விரிந்திருக்க வேண்டும்!

அடுத்த விநாடி மகனின் முதுகில் சுளீரென்று ஓர் அடி கொடுத்தார் ஹரிஹர சர்மா. ``எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பணம் பிரதானமா இருக்கக் கூடாதுன்னு!''

விநாயகராமுக்கு உறைத்தது. தந்தையின் மந்திரச் சொல்லும் நினைவுக்கு வந்தது!

ஒரு தாளை எடுத்து இளம் வித்வானிடம் நீட்டினார் சதாசிவம். அடுத்த ஒரு வருடத்துக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எம்.எஸ். நிகழ்த்தவிருந்த கச்சேரிகளின் பட்டியல் அது.

``இந்த எல்லா கச்சேரிகளிலும் நீதான் கடம் வாசிக்கறே...'' என்று சதாசிவம் சொல்ல, கிள்ளிப் பார்த்துக்கொண்டார் விக்கு!

``எம்.எஸ் அம்மாவுடன் வாசித்த அனுபவங்கள் என்னைப் புரட்டிப் போட்டன. அம்மாவுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது கடம். உலகளவில் அதன் அந்தஸ்தை உயர்த்தியவர் அவர்...'' என்று உணர்ச்சி வசப்பட்டார் விநாயகராம்.

1970-களில் `சக்தி' குழுவில் இணைந்து வாசிக்க விநாயகராமுக்கு அழைப்பு விடுக்கிறார் கிடார் கலைஞர் John McLaughlin. வயலின் எல்.சங்கர், மிருதங்கம் ராம்நாட் ராகவன் மற்றும் தபலா ஜாகிர் உசேன் என்று பிரபலங்களைக்கொண்ட குழு அது. அந்தச் சமயத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் நிரந்தரப் பணிக்கான ஒப்புந்தத்தில் கையெழுத்துப்போட வேண்டிய சூழலில் இருந்தார் விநாயகராம். ரேடியோ வேலை என்றால், அது பாதுகாப்பானது. மாதமானால் சம்பளம் வந்துகொண்டிருக்கும். `சக்தி' குழுவில் இணைந்தால், குறுகிய காலத்தில் கணிசமான தொகையும் அளவில்லா ஆனந்தமும் கிடைக்கும்! வானொலி நிலையமா அல்லது சக்தி பயணமா என்று சில நாள்கள் சஞ்சலப்பட்டார் விநாயகராம். இறுதியில் `சக்தி' அவரைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டது!

``இப்போது திரும்பிப் பார்த்தால், செய்ய வேண்டியதையே செய்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்குக் கிடைத்ததை உணர்கிறேன். என் வழியில், என் இசையைத் தொடர்ந்ததில் கிடைத்த மன நிறைவும் மகிழ்ச்சியும் வேறு எதிலும் எனக்குக் கிடைத்திருக்காது.'' என்று அழுத்தமாகத் தெரிவித்தார் விநாயகராம்.

கர்னாடக இசை உலகில் இதுவரையில் `கிராமி அவார்டு' பெற்ற ஒரே கலைஞர் கடம் விக்கு விநாயகராம்.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்து டிரம்மர்கள் தேர்வு செய்யப்பட்டு, தாளவாத்திய ஆல்பம் ஒன்று வெளியிட முடிவானது. அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞரும் ஆராய்ச்சியாளருமான மிக்கி ஹார்ட் (Mickey Hart) இதில் முக்கியமானவர். இந்தியாவிலிருந்து தபலா ஜாகிர் உசேன் மற்றும் கடம் விநாயகராம். `பிளானெட் டிரம்' என்பது ஆல்பத்தின் பெயர். 1991-ல் வெளியான இந்த ஆல்பம், உலகத்தின் இசைப்பிரியர்களைக் கிறங்கடித்தது. அந்த வருடம் விற்பனையில் முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்தது. ஜாகிர் உசேன், விநாயகராம் என்ற நம்மவர்கள் இருவரின் கை விரல்களும் மற்றவர்களுடன் இணைந்து மந்திரஜாலம் புரிந்தன! ஆகச் சிறந்த இசை ஆல்பமாகத் தேர்வாகி, ஆஸ்கருக்கு இணையான கிராமி அவார்டு கிடைக்கப்பெற்றுத் தந்தது இந்த ஆல்பம் எனச் சொல்லிப் பெருமிதம் அடைந்தார் விக்கு விநாயகராம்.

``விற்பனையில் ராயல்டி என்று வரும்போது சாதாரணமாக மெயின் ஆர்ட்டிஸ்ட் ஒருவருக்கு மட்டுமே ராயல்டி வழங்குவது வழக்கம். ஆனால், பிளானெட் டிரம் ஆல்பத்தைப் பொறுத்தவரை இதில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் ராயல்டி தொகையை அனுப்பி வருகிறார்கள் என்பது பெரிய விஷயம்.'' என்ற விநாயகராம், தனக்கு வரும் ராயல்டியில் சொந்தச் செலவுக்காக ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல் காஞ்சி மாமுனிவரின் பாதங்களில் சமர்ப்பித்துவருகிறார்.

விநாயகராமின் மனைவி சந்திரா. 1968-ல் திருமணம் நடந்திருக்கிறது. மூத்த மகன் செல்வகணேஷ், கஞ்சிரா வாசிப்பில் கலக்கிக்கொண்டிருப்பவர். அடுத்தவர், உமாசங்கர். அப்பா வழியிலேயே கடம் வாசித்து வருகிறார். மூன்றாமவர் மகேஷ், வாய்ப்பாட்டைத் தனக்கானதாகத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். ஒரே மகள் சங்கீதா, பாட்டு டீச்சர். கலைக்குடும்பம்!

`ஜெயகணேஷ் தாள வாத்ய வித்யாலயா' என்ற பெயரில் ஹரிஹர சர்மா துவங்கிய பள்ளியை, இப்போது தலைமையேற்று நடத்திவருகிறார் விநாயகராம். இங்கு கடம் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. இன்று 25 பேர் கடம் பயின்று வருகிறார்கள்.

மேடையில் கடம் வாசித்து இன்று பிரபலமாக வலம்வரும் வி.சுரேஷ், சுகன்யா ராம்கோபால், கடம் கார்த்திக் அனைவருமே விநாயகராமின் தயாரிப்புதான். இதில் சுகன்யாவை மாணவியாகச் சேர்த்துக்கொள்ள முதலில் தயங்கியிருக்
கிறார் விநாயகராம். `கலைக்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. உழைப்பும் ஆர்வமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம்' என்று சொல்லி, சுகன்யாவுக்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுத் தந்து, பின்னர் மகனிடம் அனுப்பியிருக்கிறார் தந்தை ஹரிஹர சர்மா. ``அதுக்கப்புறம்தான் சுகன்யாவை என் மாணவியா ஏத்துண்டேன்'' என்ற மேதை விநாயகராமிடம் பானை பிடிக்க (கடம் வாசிக்க என்று படிக்கவும்!) கற்று வருபவர்கள் பாக்கியசாலிகள்தான்!

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன்