‘கலை என்பது, உணர்வுபூர்வமாக ஒன்றைப்போலவே செய்வதாகும். அதாவது, மாயஉலகைப் படைப்பதாகும். எனவே, கலைஞன் தனது கலைப்படைப்புக்குத் தேவையான விஷயங்களைப் புலனறிவிலிருந்து பெற்றுக்கொண்டபோதிலும், அவனது சிந்தனை மேலும் உயர்ந்த தளத்தில் இயங்குகிறது. தனது சக மாந்தரைக் கற்பனைகள் நிரம்பிய ஓர் உலகத்திற்கு அழைத்துச் செல்வதுதான் கலைஞனின் செயல்பாடாகும். அங்கே, அவர்கள் தங்கள் உணர்ச்சிப் பெருக்குக்கு ஒரு வடிகால் பெறுவது மட்டுமன்றி, நிதர்சன வாழ்க்கையில் காணப்படும் யதார்த்தத்துடனான போராட்டத்தை எதிர்கொள்வதற்கான புதிய தெம்பையும் பெறுகின்றனர்.’

- ஜார்ஜ் தாம்சன் (மனிதசாரம்)

கலைதான், ஒரு சமூகம் காண வேண்டிய கனவை அதற்குக் கையளிக்கிறது. கலைதான், ஒரு சமூகம்

பேண வேண்டிய நினைவுகளை அதற்கு மீட்டளிக்கிறது. நினைவுகளும் கனவுகளும்தான் ஒரு சமூகத்தின் இயக்கத்தில், அதன் புதிய நகர்திசையைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. வரலாற்றில், மனிதர்கள் சுதந்திரமான கூட்டுழைப்பிலிருந்தபோது, கலை பொதுவில் பிணைந்திருந்தது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு என மனிதன் ஓரிடத்தில் நிலைகொள்ள, உழைப்பில் ஏற்பட்ட உபரியின் விளைவாய் தனிச்சொத்து, அரசு, மதம், வர்க்கப் பிரிவினை ஆகிவற்றின் தோற்றங்களுக்குப் பின்னே கலை, தனி நபருக்குரியதாக மாற்றம்கண்டது. உழைப்பிலிருந்தும் கலையிலிருந்தும் மனிதன் அந்நியமாகிவிட்ட சூழலில்...

இயற்கையை அறியவும் அதைப் பிரதிபலிக்கவும் அதன் பேராற்றலைக் கட்டுப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் மனிதன் முயன்றுகொண்டிருந்த ஆதி காலத்தில், எது கலையாக இருந்ததோ அந்தக் கலையை, அதன் களங்கமற்ற தன்மையை நவீன உடல்கொண்டு சமகாலச் சமூகத்தின் பாடுகளை, வாதைகளை, பாவிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும்தான் ச.முருகபூபதியின் நாடக முயற்சியாக இருக்கிறது. ‘சமூகத்தின் மறுக்கமுடியாத கலாசார உடல்கள், சடங்கில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன’ என்ற நம்பிக்கையுடைவராக இருக்கிறார் அவர்.

‘மணல்மகுடி’யின் பாடல்

வழமையான நாடக வடிவங்களுக்கு, நிகழ்த்துமுறைக்கு வெளியே சதா மீறிச் செல்ல எத்தனிப்பவை இவரது நாடக முயற்சிகள். தொன்மச் சடங்குகளின் பாவனையில், நாட்டார் பண்பாட்டுக் கூறுகளுடன், குறைந்த சொற்களும் பெரும்பாலும் உடல்மொழியால் அமையும் கவித்துவக் காட்சியமைப்பும், ஒலிவண்ணங்களும் பழங்குடி இசை மற்றும் இயற்கை உயிர்களின் இயல்பொலியும் கூடிய மிக உயிர்ப்புள்ள நாடக வடிவம் இவருடையது. ஒலிவண்ணங்களில், மேலுடையற்ற நாடக உடல்களில் பூக்கும் வியர்வையின் ஒளிரல், புதிய புதிய அர்த்தங்களை உமிழ்ந்தபடி இருக்கும் காட்சிகளில். நாடக நிலத்தில் இயங்க, வெற்றுடல்களே முருகபூபதியின் தேர்வாக இருக்கின்றன. ‘மூன்றாம் உலக நாடுகளின் உடல்கள், தங்கள் வாதைகளைச் சொல்ல எந்த உடையும் ஒத்துழைப்பதில்லை’ என்ற நுட்பமான அரசியல் புரிதலோடே அதை அவர் முன்வைக்கிறார். ‘ஆடைகளும் ஆபரணங்களும் குற்றங்களுடன்

தொடர்புடையவை’ என்கிறார்.

உலகமயமாக்களின் விளைவாய், நாம் கைவிட்ட, தொலைத்த, மறந்த புழங்கு பொருள்கள்தாம் பெரும்பாலும் நாடகத்தின் அரங்கப் பயன்பாட்டுப் பொருள்களாக (Properties) இருக்கின்றன. அழுக்குத்துணிகள், ஓலைப்பெட்டிகள், சுளகு, உலக்கை, மண், பழைய காகிதங்களாலான முகமூடிகள், துணிபொம்மைகள், கயிறுகள், லாந்தர் விளக்குகள், சுரைக்குடுவைகள், சலங்கைகள், மண்பாண்டங்கள், என இந்தப் பட்டியல் பெரிது. ஒரு குறிப்பிட்ட நாடகப் பிரதியில், நிகழ்த்துவெளியில் இப்பொருள்களின் இருப்பும் வெளிப்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருளாளும் ஒளியாலும் முடிச்சிடப்பட்ட, துண்டு துண்டான காட்சிகளின் வழியே கனவுநிலையை எட்டவும் நினைவுகளைத் தூண்டவுமான முயற்சியில் நாடகக் கலைஞர்கள் ஈடுபடுகிறார்கள். அதன் வழியே, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கான தனித்த பிரதியை வாசிக்கிறார்கள் அல்லது காண்கிறார்கள். காட்சியில் வெளிப்படும் குறிப்பிட்ட ஒரு பண்பாட்டுப் பொருள், ஒரு தனித்த பார்வையாளரிடம் பிரத்யேக நினைவுகளைக் கிளறுவதோடு, இழந்தவை மீட்க வேண்டியவை என்கிற அரசியல் விழிப்புணர்வில், ஏக்கத்தில் பொதுப்பார்வையாளரோடு ஒன்றுகலக்கச் செய்கிறது.

இவரது நாடகங்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, குறிப்பிட்ட திட்டவட்டமான அர்த்தங்களைக் கோராத தன்மை. அரங்கம், ஒளி, வண்ணம், இசை, இருள், குரல், மொழி, உடல்கள், பொருள்கள் கொண்டு ஓர் இயக்குநரும் பல பார்வையாளர்களும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளும் முடிவற்ற பிரதியாக இருக்கிறது. நிகழ்த்துதலுக்கான திட்டவட்டமான நாடகப் பிரதியை எழுதுவது என்பதிலிருந்து முருகபூபதி வெகுவாக விலகிவந்துவிட்டார் என்றே தொன்றுகிறது. ஓர் அடிப்படையான அகத்தூண்டலை அல்லது சமகாலப் பிரச்னைகள் சார்ந்த தற்செயல் காட்சி ஒன்றை எடுத்துக்கொண்டு, பின் நடிகர்கள், ஒத்திகை நிலம், அதன் பிரதான சூழல்தன்மை, ஒத்திகை நாள்களின் மனநிலை, காட்சிக்குள் இயல்பாய் உள் நுழையும் பொருள்கள், நாடகத்திற்குத் தயாராகும் குறிப்பிட்ட பருவகாலத்தின் பாதிப்பு எனக் கட்டுப்பாடற்று, அனைத்தையும் அனுமதித்து உள்வாங்கி லயப்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக ஒரு நாடகத்தை உருவாக்குவதிலும் நிகழ்த்துவதிலும் முழுமையான சுதந்திரத்தை நோக்கி நகர்ந்துவிட்டார் என்பதை, அவர் நடிகர்களை மேடையை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்ததிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை நாடக ஒத்திகையின்போது, அந்தப் பக்கமாக வந்த ஒரு பச்சோந்தியை அவதானித்து, அதன் உடலசைவுகளை, பதற்றங்களை, தலை திருப்பிப் பார்க்கும் முறையை உள்வாங்கி, அங்கேயே நடிகர்களிடம் அதை நிகழ்த்தச் செய்ததை அவர் குறிப்பிட்டபோது, இந்த சூழல்கவனம் மிக்க வழிமுறைதான் அவரது நாடகத்தில் உயிர்ப்புள்ள காட்சிகளைச் சாத்தியமாக்குகிறது என்று புரிந்துகொள்ள முடிந்தது.

வழக்கமான நாடகக் காட்சிகளில் இடம்பெறும் யதார்த்தமான மொழி வடிவத்தையும் உரையாடலையும்

முருகபூதியின் நாடகங்களில் நாம் காண முடியாது. மிகக் துடியான கவிதையின் அல்லது குறிசொல்பவரின் பேயோட்டுபவரின் துண்டு துண்டான மாந்திரீகக் குறியீட்டுச் சொல்லின் அதிர்வோடே அம்மொழி பெரும்பாலும் இடம்பெறும். அது கர்ப்ப இருளுக்குள் அல்லது வாதையின் அந்தகத்துக்குள் அல்லது கனவின் மங்கலான ஒளிக்குள் பிரவேசிப்பவர்கள், கேள்வி எழுப்பும் பதில் சொல்லும் மொழியாலான வாக்கியங்களாக இருக்கின்றன. பெரும்பாலும், ‘இவரின் நாடகங்கள் புரிவதில்லை!’ என்பவர்கள், கவனம்கொள்ள வேண்டிய புள்ளி இதுதான். நாடக மேடையில் இருக்கும் நான்கு பாத்திரங்கள் பேசிக்கொள்கின்றன என்றால் அதில், அவை திட்டவட்டமான சமகாலப் பிரச்னை ஒன்று குறித்த நேரடியான உரையாடலில் இருப்பதில்லை. அப்பாத்திரங்கள் பல்வேறு காலகட்டத்தில், நினைவில், கனவில், நிலத்தில் நடமாடிக்கொண்டிருப்பவை. சமகாலத்தி லிருக்கும் ஓருடல் கேட்கும் கேள்வியிலிருக்கும் வலிக்கு, மொழியுருவாகாக் காலத்து உடல் ஒன்று, பதில் முனகும் முயற்சி அது. மொழிகளின் தேவையற்று ஆதி உயிர்களைப்போல பூச்சியினங்களை, விலங்குகளை, பறவைகளைப்போல உடல்களின் ஸ்பரிசத்தால் ஒன்றுக்கொன்று பேச முயல்பவை. ருசியால் வாசனையால் சூழலை உணர்வுகளை அறிந்துகொள்ள விழைபவை. இயற்கையில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உடற்துடிப்புகளையும் பாவிக்க முனையும் நாடக மொழியாக இருக்கிறது அது. கறாரான அர்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்காமல், உயிர்கொள்ளும் ஓவியங்களைப் போன்ற இந்நிகழ்த்துதலில் கரைந்துபோதலே பெருமதியான அனுபவமாக இருக்கும்.

‘புழுதிமரப் பறவைகள்’

‘செம்மூதாய்’, ‘மிருக விதூஷகம்’, ‘சூர்ப்பணங்கு’ எனத் தொடர்ச்சியாக முருகபூதியின் நாடகங்களைப் பார்த்து வருபவன் என்றவகையில் ‘புழுதிமரப் பறவைகள்’, வடிவம் சார்ந்தும் நிகழ்த்துமுறையிலும் முந்தைய தன்மையையே தொடர்வதாக இருக்கிறது. உட்பொருளில், அதன் காட்சிமொழியில் சற்று நெகிழ்வுத்தன்மை கூடியிருப்பதாகப்பட்டது. சென்னையிலுள்ள, ‘எக்மோர் மியூஸியம் அரங்கில்’ நடத்தப்பட்ட இரண்டு நாள்களுமே காணச் சென்றிருந்தேன். பார்வையாளர்கள் தரப்பில் நல்ல வரவேற்பிருந்தது. அரங்கின் அமைப்பும் அதன் எதிரொலிக்கும் சுவர்களும் முழுமையான இருளுக்கும் இசைக்கும் கூடுதலாக வாய்ப்பளித்தன. உயரம் மிகுந்த பார்வையாளர் பகுதியிலிருந்து பார்க்கும்போது, மிகத் தாழ்வான பகுதியில் யாரோ சிலர் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு விநோதச் சடங்கு நிகழ்ச்சியைப் போலிருந்தது நாடகம்.

நீல ஒளிவெள்ளம் பொங்க, மெள்ள நிலத்திலிருந்து மேலெழுகிறது ராட்சத ஜெல்லி மீன் போன்ற ஓர் உரு. கடலின் லயம் அதன் அசைவுகளில் தொனிக்கிறது. மனிதக் கைகள், உள்ளிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர, பெருங்கருப்பை ஒன்றிலிருந்து பல்லுயிர்கள் ஜனிக்கும் காட்சியாக அது விரிந்தது. உள்ளிருந்து

ஜனித்த ஒவ்வோர் உடலும், பிற உடலைத் தொட்டுத் தொட்டு உணர்கின்றது. நைந்த துணிக்கிழிசல்கள் உயிரிழைகள்போல கருப்பையைச் சுற்றிலும் நெளிய, நாடக அறிமுகக் குறிப்பிலிருந்த ‘கந்தல் கந்தலான இருப்பு’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்து மொத்தக் காட்சிப்படிமத்தையும் வேறு தளத்துக்கு நகர்த்தியது. ஒருவர், ‘இது ஹிரோஷிமாவின் அணுகுண்டுப் புகை வடிவம்போல இருக்கிறது. உள்ளிருந்து வருபவை அதில் மாண்ட உயிர்கள்’ என்று நாடகத்திற்குப் பிறகான தேநீர் உரையாடலில் குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுவதை ஏற்கும் விதமாக, உள்ளிருந்து வெளிவந்த அத்தனை உடல்களும் முழுமையாகத் துணித்துண்டுகளால் முடிச்சிட்டு தம்மை மறைத்துக்கொண்டிருந்தன. இந்தச் சுதந்திரப் பொருள்கொள்ளல் முறையை அனுமதிக்கும் வகையில் பார்வையாளரை கூடுதலான பொறுப்புணர்ச்சிக்கும் படைப்புணர்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது இந்நாடக வடிவம்.

‘வேசை முத்திரையிடப்பட்ட’ பல பெண்களின் கிழிந்த சேலைகளால் செய்யப்பட்ட பொம்மைகளை ஈன்றெடுக்கிறார்கள் மேடைக்கலைஞர்கள். பொம்மைகளை நிலத்தில் கிடத்தி, அதன் தொப்புள் கொடியைத் துண்டிக்காமல், ஆன மட்டும் அதன் நீளத்தை இழுத்துச் சென்று இருளில் கரைந்து மறைகிறார்கள். வேறு வேறு நிலைகளில் நின்றபடி ஈன்றவர்களின் தொப்புள்கொடிகள் குறுக்கும் நெடுக்குமாய் விநோத கோலம்பூண்டு கிடக்கின்றன நிலத்தில். மொத்த பிரசவ வலியையும் ஒரு பாடலாக்கி முனகுவதுபோல பின்னிருந்து ஒலிக்கிறது இசை.

‘பருத்தித்துணிகளை உவர்மண்ணில் முறுக்கி, அழுக்குப் பனுவலை விரித்திருக்கிறாள் வண்ணா முதுதேவதை’ என்கிறது ஒரு குரல். ஆம், உண்மையில் ஓர் அழுக்குப் பனுவலை வாசிக்கும் உணர்வுதான் இந்நாடகம். எத்தனை ஊர்ப் பெண்களின் ஆண்களின் குழந்தைகளின் அழுக்கு உடைகளின் வாசனை அதிலிருந்து எழுகிறது... எவ்வளவு கண்ணீரின் ரத்தத்தின் வியர்வையின் உயிர்த்திரவங்களின் உப்புவாடை அதிலிருந்து கசிகிறது... ஒடுக்கப்பட்ட தனித்துவிடப்பட்ட சுரண்டப்பட்ட தண்டனைக் குள்ளாக்கப்பட்ட உடல்களின் வாதை, இந்நாடகத்தின் ஆதாரக்குரலாக ஒலிக்கிறது.

உடல்கள் சுவர்கள்போல விரைத்து நிற்க, அதைத்தாண்ட எத்தனிக்கும் உடல்களின் முயற்சி, கண்களின் மிரட்சி, உலகெங்குமுள்ள அகதிகளின் வலியை உணர்த்துவதாக இருந்தது. மீறல்களில் பலியாகும் உடல்களாகவும் அவை துடித்தன.

கண்களில் இருள்நிறத்துணி கட்டப்பட்ட பாத்திரங்கள், காற்றில் விரல்களால் எழுதியபடி வருகின்றன, தேடுதலில் தட்டுப்படும் உடல்களின்மீது விரல்பதித்து எழுதுகின்றன. ஒரு குரல், “எனக்கு எழுதத் தெரியாது!” என்கிறது. மற்றொன்று “படிக்கத் தெரியாது!” என்கிறது. இன்னொன்று, “என்னடா படிச்சவன்... உடலைப் படிடா!” என்று ஆங்காரமாகிறது. கோமாளி வந்து, “என்னோடு எல்லா உயிரினங்களும் பேசும்!” என்று வெள்ளந்தியாய்ச் சொல்லிப் போகிறான். அவன் பேச்சில் அவ்வளவு சமகால அரசியல் அங்கதம். “13 கிளிகளை ஏன் சுட்டீங்க... 7 கிளிகளை எப்ப திறந்து விடுவீங்க?” என்ற கேள்விகள் சட்டென

பார்வையாளனைக் கனவுக்குள்ளிருந்து வெளியேற்றி, யதார்த்தத்தில் தூக்கில் எறிகின்றன. இப்படியாக, கனவுநிலைக்கும் சமகால அரசியல் பிரக்ஞைக்கும் இடையே நம்மை ஊடாடச் செய்வதுதான் இந்நாடகத்தின் இயல்புத்தன்மையாகவும் சிறப்புத்தன்மையாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியாக நாடகத்தை விவரிக்கத் தொடங்கினால், அதுவொரு கவிதைத் தொகுப்பாக மாறிவிடக்கூடும். ஒவ்வொருவரும் தனது ஞாபகப்புலனைக்கொண்டு கற்பனையைக்கொண்டு காண வேண்டிய நாடக வடிவம் இது, என்பதால் நாடகம் குறித்த காட்சி விவரணைகளை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

மனிதர்கள் பிறரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே அந்நியமாகிவிட்ட சூழலில், தொடு உணர்வின் உயிர்அதிர்வுகள், நீண்ட அன்பின் மௌனங்கள், ஆழ உறவாடும் உடல்களின் இசைமைமிக்க இருள்வெளிகள் என மனிதர்கள் வரித்துக்கொள்ள வேண்டிய உயிர்மைமிக்க கனவுநிலத்தைக் கையளிக்கின்றன முருகபூபதியின் நாடகங்கள்.

மூன்றாம் உலகநாட்டின் பெண்கள் படும் பாடுகள், விவசாய, சிறுதொழில் நசிவு, இயற்கைவளச் சுரண்டல், சூழலியல் ஆபத்துகள், மொழியும் எழுத்தும் அரசியல் அதிகாரமாதல், குரலற்றவர்களின் ஊமைக்கோபம் எனப் பல்வேறு பொருளடுக்குகள்கொண்ட காட்சிப் படிமங்களின் தொகுப்பில், இரண்டு மணி நேரம் ‘புழுதிமரப் பறவைகள்’ நிகழ்த்தப்பட்டது. நாடகம் என்பதும் சினிமாவைப்போல பிரமாண்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில், தமிழில் இதுபோன்ற உயிர்ப்புள்ள நாடகச் செயல்பாடுகள் அவசியமானவை. நாடக உருவாக்கம், நடிப்பு, இலக்கிய வாசிப்பு, சூழல் அவதானிப்பு, இசை கேட்டல், கவிஞர்கள், ஓவியர்கள், புனைவெழுத்தாளர்களுடனான உறவாடல், பயணங்கள் என இளைஞர்களை மிக துடிப்புள்ள திசையில் அழைத்துச் சென்று, அவர்களை ஆளுமைகளாகப் பரிணமிக்கச் செய்யும் முருகபூபதியின் தொடர்ச்சியான இயக்கம் ஆச்சர்யமளிக்கக்கூடியது.

இன்றைய அதிநவீன டிஜிட்டல் கனவுகளிருந்து வெளியேறி, உயிர்ப்புள்ள நமது வாழ்வை வாழவும் அதைக் கொண்டாடவும் நாம் உண்மையின் பச்சையம் மிக்க கலைகளை நோக்கித் திரும்ப வேண்டும் என அழைக்கிறார்கள் கலைஞர்கள். “மிருக ரேகைகள்கொண்ட ஆதிக்கனவுநிலத்தை நோக்கித் திரும்புங்கள்!’ என்கிறது ஒரு குரல்.

- வெய்யில், படங்கள் : க.பாலாஜி