Published:Updated:

``நான் இன்னும் மியூசிக் போடுறதுக்கு இதுதான் காரணம்!" - இசையமைப்பாளர் தேவா

தேவா

`` `தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ்தான் நினைவுக்கு வருகிறார். திறமையுள்ளவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும் என்பது என் கருத்து." - இசையமைப்பாளர் தேவா

``நான் இன்னும் மியூசிக் போடுறதுக்கு இதுதான் காரணம்!" - இசையமைப்பாளர் தேவா

`` `தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ்தான் நினைவுக்கு வருகிறார். திறமையுள்ளவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும் என்பது என் கருத்து." - இசையமைப்பாளர் தேவா

Published:Updated:
தேவா

தான் இன்னும் இசையமைப்பதற்கான காரணத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் தேவா. மருத்துவர் புகழேந்தியின் மகள்கள் பிரணவி மற்றும் ப்ராப்தி ஆகியோர் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை, ராணி சீதை அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

பிரணவி மற்றும் ப்ராப்தி
பிரணவி மற்றும் ப்ராப்தி
Jeeva Ganesh

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரட்டையர்களான பிரணவி மற்றும் ப்ராப்தி 9-ம் வகுப்பு படிக்கின்றனர். தங்களது ஐந்து வயதிலிருந்தே குரு லக்ஷ்மணசுவாமியிடம் பரதநாட்டியம் கற்று வருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்ச்சியில் பல்வேறு விருந்தினர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக நடனக் கலைஞர் ராதிகா சூரஜித், நக்கீரன் கோபால், இசையமைப்பாளர் தேவா, துணை கமிஷனர் மகேந்திரன், பத்திரிகையாளர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரணவி மற்றும் ப்ராப்தி
பிரணவி மற்றும் ப்ராப்தி

நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சூரஜித், ``நாட்டிய குரு லக்ஷ்மணசுவாமி பாரம்பர்யமான பரதக் கலையில் இந்தக் காலத்துக்கு ஏற்ப தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். தான் கற்ற கலையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து கலைத் தொண்டு செய்து வருகிறார். குரு என்பவர் இருளை அகற்றி ஞானத்தைத் தருபவர். நாட்டிய குருவிடம் இருந்து நடனத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாகப் பேசிய இசையமைப்பாளர் தேவா, ``இரட்டை சகோதரிகளின் நடனம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்தது மாதிரி இருந்தது. குரு லக்‌ஷ்மண சுவாமியைப் பார்க்கும்போது எங்கள் குழுவில் `தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ்தான் நினைவுக்கு வருகிறார். திறமையுள்ளவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும் என்பது என் கருத்து. அப்படி மனதாரப் பாராட்டுபவர்களால்தான் நான் இன்னும் மியூசிக் போட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

நாட்டிய அரங்கேற்றம்
நாட்டிய அரங்கேற்றம்

``என் குழந்தைகளும் பரதம் ஆடியிருக்காங்க அதனால பரதத்துக்குள்ள நான் ரொம்பவே உள்ள போயிருக்கேன். சிலப்பதிகாரத்துல மாதவியின் நடனத்தைப் பாராட்டி வைரங்களால செய்த தலைக்கோலி அணிவாங்க. அதுபோல நமக்கு இங்க ரெண்டு தலைக்கோலி தேவைப்படுது. இவங்க ஆடுறதுல ஏதாவது குறை இருக்குமான்னு பார்த்துகிட்டே இருந்தேன். ஆனால், எந்தக் குறையும் இல்ல" என்றார் நக்கீரன் கோபால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism