Published:Updated:

``பர்ஃபெக்ஷன் சலிப்பை ஏற்படுத்துகிறது... குறைகளே உங்களை உருவாக்குகின்றன'' - ஆலியா பட்!

ஆலியா பட்

நாம் நேசிக்கப்படுவதற்கு, விருப்பம் கொள்வதற்கு, நல்லவர்களாக இருப்பதற்கு, முற்றிலும் தவறில்லாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

மனதின் ஓட்டங்கள் எண்ணங்களின் வழியே எழுத்தை அடைந்து, அதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் பலரின் இதயங்களைத் தொடும்போது பெரும்பாலானவர்களின் கவனத்தைப் பெற்று விடுகின்றன.

``பர்ஃபெக்ஷன் சலிப்பை ஏற்படுத்துகிறது... குறைகளே உங்களை உருவாக்குகின்றன'' - ஆலியா பட்!
aliabhatt instagram

அப்படித்தான் தன்னுடைய மன ஓட்டத்தை இன்ஸ்டா பதிவில் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். சமீபத்தில், தான் கலந்துகொண்ட விருது நிகழ்ச்சியில் இதுவரை பகிராத புகைப்படங்களைப் ஒரு வீடியோவாக இணைத்து, நீண்ட பதிவு ஒன்றை எழுதி உள்ளார்.

அதில்,``இக்காலத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன, அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு. சத்தமாகப் பேசாதே... பயந்தாங்கொள்ளியாக இருக்காதே... ஒல்லியாக இருக்காதே. குண்டாக இருக்காதே... லட்சியத்தோடு இரு. ஆனால் அதைத் தாண்டி ஏதும் செய்யாதே. நம்பிக்கையுடன் இரு. ஆனால் அதீதமாக வேண்டாம் என அறிந்தும் அறியாமலும் பல விதிகள் உள்ளன.

நாம் நேசிக்கப்படுவதற்கு, விருப்பம் கொள்வதற்கு, நல்லவர்களாக இருப்பதற்கு, முற்றிலும் தவறில்லாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இதெல்லாம் உண்மையில் கற்பனை கதைகளில் மட்டுமே சாத்தியம்.

கடந்த பத்து வருடங்களில் ஆழ்மனதில் அறிந்த ஒன்றை நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன். பர்ஃபெக்ட்டாக இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. குறைகளே உங்களை உருவாக்குகின்றன’’ எனப் பதிவிட்டுள்ளார்.

நெகிழ்ச்சியான இந்தப் பதிவிற்குப் பலரும் தங்களின் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையில் இருக்கும் பல பிரபலங்களும் இந்தக் கருத்தை ஆமோதித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆலியா பட்டின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.