Published:Updated:

“வெளிநாட்டுக் கலைஞர்கள் வேண்டாம்!”

பல்லவி ஷ்ராஃப்
பிரீமியம் ஸ்டோரி
பல்லவி ஷ்ராஃப்

ஹீரோவோட கெட்டப்பை மாத்துறதுக்காக, ஹாலிவுட்லேயிருந்து புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைக் கூட்டிட்டு வந்தோம்’’ - `தசாவதாரம்’ தொடங்கி `சீதக்காதி’ வரை இப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறோம். புராஸ்தெட்டிக் மேக்கப்புக்காக இனி ஹாலிவுட்டுக்கெல்லாம் போகவேண்டிய தேவையில்லை.

“வெளிநாட்டுக் கலைஞர்கள் வேண்டாம்!”

ஹீரோவோட கெட்டப்பை மாத்துறதுக்காக, ஹாலிவுட்லேயிருந்து புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைக் கூட்டிட்டு வந்தோம்’’ - `தசாவதாரம்’ தொடங்கி `சீதக்காதி’ வரை இப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறோம். புராஸ்தெட்டிக் மேக்கப்புக்காக இனி ஹாலிவுட்டுக்கெல்லாம் போகவேண்டிய தேவையில்லை.

Published:Updated:
பல்லவி ஷ்ராஃப்
பிரீமியம் ஸ்டோரி
பல்லவி ஷ்ராஃப்

ல்லவி ஷ்ராஃப்... புராஸ்தெட்டிக் மேக்கப்பில் கலக்கும் நம் ஊர் பெண். `கேம் ஓவர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்திருக்கும் இவரது வயது, ஜஸ்ட் 24!

``நான் பார்சி பொண்ணு. ஜாம்ஷெட்பூரில் பிறந்து பெங்களூருல வளர்ந்தேன். பியானோ, கிடார் வாசிக்கிறது, நீச்சல், குதிரையேற்றம் ஐஸ் ஸ்கேட்டிங், ஸ்கூபா டைவிங், கராத்தே, ஓவியம், போட்டோகிராபினு சின்ன வயசுலேயே என் விருப்பங்கள் கன்னாபின்னானு இருந்திருக்கு. நான் ஒரு டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டும்கூட. பெங்களூருல சொந்தமா டாட்டூ ஸ்டூடியோ வெச்சிருக்கேன். எல்லா விஷயங்களுக்கும் என் பெற்றோர் ஆதரவா இருந்தாங்க.

“வெளிநாட்டுக் கலைஞர்கள் வேண்டாம்!”

17 வயசுல என் சேமிப்புப் பணத்தில கேமரா வாங்கினேன். நானே குறும்படங்களுக்கான கதைகள் எழுதி, டைரக்‌ஷன்லருந்து எடிட்டிங் வரைக்கும் பண்ணி, யூ டியூப்ல ரிலீஸ் பண்ணிட்டிருந்தேன். மீடியா ஸ்டடீஸ் முடிச்சிட்டு, யூரோப்ல ஃபிலிம் மேக்கிங் படிச்சேன். ஒளிப்பதிவில் ஸ்பெஷலைஸ் பண்ணினேன். சினிமாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இண்டஸ்ட்ரியில யாரையும் தெரியாது. சோஷியல் மீடியாதான் என்னை சினிமாவுக்குள்ளே கூட்டிட்டு வந்தது.

மனசுல தோணும் விஷயங்களைப் புகைப்படங்களா எடுத்திட்டிருந்த நான், உலகின் மிகப் பழைமையான மதமான `ஸோரோஅஸ்ட்ரியானிசம்’ பற்றி ஒரு டாகுமென்டரி பண்ணினேன். அதுக்குக் கிடைச்ச வரவேற்புதான் என்னை மாத்தி யோசிக்கவெச்சது. அதுக்குப் பிறகுதான் ஃபிலிம் மேக்கிங் பக்கம் என் கவனம் முழுமையா திரும்பிச்சு. ஒரு பக்கம் எனக்குப் பிடிச்ச மாதிரி குறும்படங்கள் எடுக்கிறது. இன்னொரு பக்கம் விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் ஃபிலிம்ஸுக்கு ஒளிப்பதிவாளரா வேலை செய்றதுனு வாழ்க்கை போயிட்டிருந்தது’’ என்கிற பல்லவியின் வாழ்க்கை, யூ டியூபின் மூலம் யூ டர்ன் எடுத்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பிராக் பிலிம் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தப்போ என்னுடைய புராஜெக்ட் வொர்க் படத்துக்காக புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டாங்க. அதுக்காக புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சிலரை அணுகினேன். அப்போ அவங்க கேட்ட தொகை, என்னை மிரளவெச்சது. `புராஜெக்ட் வொர்க்குக்காக அவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்கணுமா?’னு யோசிச்சேன். யூ டியூபில் புராஸ்தெட்டிக் மேக்கப் பற்றிய தகவல்களைத் தேடினேன். ஓரளவுக்கு ஐடியா வந்தது. தேவையான பொருள்களை வாங்கி, என் ஃப்ரெண்டுக்கு முயற்சி செய்து பார்த்தேன். அது நல்லா வரவே, அதையே என் புராஜெக்ட் படத்தின் நாயகிக்கும் செய்தேன். என் வொர்க்கைப் பார்த்துட்டு என் ஃப்ரெண்ட்ஸ் அவங்களுடைய புராஜெக்ட்டுக்கும் என்னை புராஸ்தெட்டிக் மேக்கப் பண்ணித்தரச் சொன்னாங்க. அதுதான் ஆரம்பம். புராஸ்தெட்டிக் மேக்கப் பற்றி டெக்னிக்கலா தெரிஞ்சுக்க நினைச்சு, யூ.கே-வில் நீல் கார்டன் ஸ்டூடியோஸ்ல அட்வான்ஸ்டு புராஸ்தெட்டிக் மேக்கப்பில் ஒரு கோர்ஸ் முடிச்சேன். அதை முடிச்சிட்டு வந்ததும், `சகுச்சி’னு ஒரு கன்னடப் படத்துல புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அந்தப் படத்துல நான் போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டேஜ்லதான் இணைஞ்சேன். அதனால அதை என் அறிமுகப் படமா சொல்லிக்க முடியலை. அப்படிப் பார்த்தா `கேம் ஓவர்’தான் என் அறிமுகப் படம்’’ பெருமை பகிரும் பல்லவிக்கு, `கேம் ஓவர்’ இன்னொரு திருப்புமுனை.

“வெளிநாட்டுக் கலைஞர்கள் வேண்டாம்!”

`` `கேம் ஓவர்’ படக் குழுவினரோடு சோஷியல் மீடியா தொடர்புல இருந்தேன். அந்தப் படத்துக்கு புராஸ்தெட்டிக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டப்போ, குழுவைச் சேர்ந்தவங்க டைரக்டர் அஷ்வின்கிட்ட என்னைப் பற்றிச் சொல்லி என் வொர்க்கைக் காட்டியிருக்காங்க. அவர் என் திறமையை நம்பி அந்த வாய்ப்பைக் கொடுத்தார். படத்துல விநோதினி வைத்யநாதன், சஞ்சனா நடராஜன் ரெண்டு பேருக்கும் தலைகளை உருவாக்கினேன். இதுக்காக, எனக்கு 15 நாள் தேவைப்பட்டுச்சு. செயற்கையா தெரியாதபடி தலைகளை உருவாக்கிறது பெரிய சவாலா இருந்துச்சு. டாப்ஸியின் கையை ஒரு மணி நேரத்துலேயே புராஸ்தெட்டிக்ல உருவாக்கிட்டேன்.

விநோதினியின் தலை ஜன்னலில் மோதும் அந்தக் காட்சிக்குக் கிடைச்ச கைத்தட்டல்கள், இன்னும் என் காதுகள்ல ஒலிச்சுக்கிட்டே இருக்கு. இந்தப் படத்தின் மூலம் டாப்ஸியோடு கிடைச்ச நட்பு, அவங்க நடிக்கிற `சாந்த் கி ஆங்க்’ என்ற பாலிவுட் படத்திலும் வாய்ப்பை வாங்கித் தந்திருக்கு. அந்தப் படத்துல டாப்ஸிக்கு வயசான தோற்றத்தைக் கொண்டுவந்திருக்கேன். படம், தீபாவளி ரிலீஸ். ஐ’யம் வெயிட்டிங்’’ என்று பூரிக்கும் பல்லவி, புராஸ்தெட்டிக் மேக்கப் பற்றியும் தகவல்கள் தருகிறார்.

``வழக்கமான மேக்கப்புக்கும் புராஸ்தெட்டிக் மேக்கப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சாதாரண மேக்கப்பில், ஒருவரின் அழகை மேம்படுத்திக்காட்ட முயற்சிசெய்வோம். அதாவது இருப்பதைவெச்சு இன்னும் அழகாகக் காட்டுறதுனு சொல்லலாம். ஆனா, புராஸ்தெட்டிக் மேக்கப்பில் இல்லாத ஒன்றை உருவாக்கணும். அதை தத்ரூபமாகவும் காட்டணும்.

இதுதவிர ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்னு ஒண்ணு இருக்கு. அதாவது ஆர்ட்டிஸ்ட்டின் சருமத்தில் காயங்களையோ, முதுமையின் அடையாளங்களையோ தத்ரூபமா ஏற்படுத்துற ஒரு டெக்னிக். இதுல மோல்டு பயன்படுத்தப்படுறதில்லை. அதனால டீடெய்லிங் கொண்டுவருவது பெரிய சவால். புராஸ்தெட்டிக் மேக்கப்புக்குச் செலவுசெய்ய பட்ஜெட் இல்லாதபோது, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப் கைகொடுக்கும். புராஸ்தெட்டிக் மேக்கப் அப்படியில்லை. ஸ்கல்ப்டிங், மோல்டிங், காஸ்டிங், ப்ரீ பெயின்டிங்னு பல நிலைகளைக்கொண்டது. நினைக்கிற விஷயத்தை ரொம்பவே தத்ரூபமா கொண்டுவர முடியும்.’’ - பாடம் எடுப்பவருக்குப் பல கனவுகள்.

“வெளிநாட்டுக் கலைஞர்கள் வேண்டாம்!”

``புராஸ்தெட்டிக் மேக்கப் என்பது, பிரத்யேகமான திறமை தேவைப்படும் ஒரு கலை. எதையும் வேகமா செய்யணும்னு எதிர்பார்க்கிறவங்களுக்கு இந்தக் கலை சரியா வராது. அசாத்தியமான பொறுமைதான் இந்தக் கலைக்கான முதல் தகுதி.

தவிர, பலரும் புராஸ்தெட்டிக் மேக்கப் என்பது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொடர்பானதுனு தவறா நினைச்சிட்டிருக்காங்க. புராஸ்தெட்டிக் மேக்கப் மூலமா சாத்தியமாகக்கூடிய விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வும் பலருக்கு இல்லை. புராஸ்தெட்டிக் மேக்கப்னா வெளிநாட்டுக் கலைஞர்களைத் தேடிப் போகும் நிலைமையை மாத்தணும். ஹாலிவுட் படங்களுக்கு இணையா நம்மகிட்டயும் பெஸ்ட் புராஸ்தெட்டிக் மேக்கப்புக்கான ரெஃபரன்ஸ் இருக்குனு பெருமையா சொல்லணும்.’’

வண்ணக்கனவுகள் மெய்ப்படட்டும்!