Published:Updated:

குணாவும் குட்டி பரணியும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

பரணி
பரணி

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... குணாவுக்கும் நாய்க்குட்டி பரணிக்கும் இருக்கும் அன்பு, எவ்வளவு அழகா இருக்கு பாருங்க!

``அப்பா... ஊருக்குப் போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?'' - அப்படின்னு கேட்டான் குணசேகரன் என்கிற குணா.

``இப்போதான் குணா பாதி தூரம் வந்திருக்கோம். இன்னும் நாலு மணி நேரம் ஆகும்'' - அப்படின்னு சொன்னார் அப்பா.

``பலமுறை வந்திருக்கோமே குணா. உனக்கே நேரக் கணக்குத் தெரியுமே'' - அப்படின்னு சொன்னாங்க அம்மா.

``அண்ணாவுக்குப் பரணியைப் பார்க்கணும்னு ஆசை. அதான், நேரம் மறந்துப்போச்சு. கரெக்டா?'' - அப்படின்னு கேட்டாள் குணாவின் தங்கை சுபா.

பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் சிந்தினான் குணா. `ஆமா... அதுதான் விஷயம்'னு சொல்ற மாதிரி இருந்துச்சு அந்தப் புன்னகை.

#VikatanPodcast
#VikatanPodcast

அவங்க இப்போ நெடுஞ்சாலை வழியில் இருந்த ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து காபி குடிச்சுட்டு இருந்தாங்க. சென்னையிலிருந்து திருப்பூருக்குப் பேருந்தில் போய்ட்டிருக்காங்க. வழியில் ஓய்வுக்காக வண்டியை நிறுத்தி இருக்காங்க.

காபியைக் குடிச்சுக்கிட்டே பரணியை நினைச்சுக்கிட்டான் குணா. அதை முதன்முறையாக அவன் பார்த்ததும் தொட்டுத் தூக்கினதும் ஞாபகத்துக்கு வந்துச்சு.

வன் பாட்டி வீடு, அதாவது அம்மாவின் அம்மா வீடு இருப்பது திருப்பூரில். அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறையில் திருப்பூருக்குப் போய்டுவான் குணா.

அங்கே மாமாவுக்கு ஒரு பையனும் பொண்ணும் இருக்காங்க. அவங்களோடு ஜாலியா விளையாடுவான். மாமா பையன் காசியோடு சேர்ந்து சைக்கிளில் பல இடங்களில் சுத்துவான்.

dog
dog

அப்படித்தான் இரண்டு வருஷம் முன்னாடி போயிருந்தப்போ, சைக்கிளில் காசியின் நண்பன் ரூஸோ வீட்டுக்குப் போனாங்க.

ரூஸோ வீட்டில் ஒரு நாய் வளர்த்துட்டு இருந்தாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி மார்க்கெட் பகுதியில் அநாதையா இருந்த நாய் அது. கறி கடைக்குப் பக்கத்துல சுருண்டுப் படுத்திருந்துச்சாம்.

``அப்பா... அப்பா... இந்த நாயை நாம கொண்டுபோய் வளர்க்கலாம் அப்பா'' - அப்படின்னு அப்பாகிட்ட ரூஸோ சொல்லியிருக்கான்.

``சார்... இது பெண் நாய் சார். வேணும்ன்னா கொண்டுபோங்க'' - அப்படின்னு கறிக்கடைக்கார் சொல்லியிருக்கார்.

``பரவாயில்லே... நாங்க கொண்டுபோய் வளர்க்கிறோம்''னு சொன்னாராம் ரூஸோவின் அப்பா.

ப்படி வந்த அந்த நாய்தான் பெரியதாகி, குட்டிகளும் போட்டிருக்கு. அதுபற்றி காசி சொல்ல, ``நாய்க்குட்டிகளைப் போய்ப் பார்க்கலாம்டா'' - அப்படின்னு சொன்னான் குணா.

ரெண்டு பேருமா ரூஸோ வீட்டுக்குப் போனாங்க. இவங்களைப் பார்த்ததும், ``ஹாய்... வாங்க வாங்க. குணா நல்லா இருக்கியா, எப்போ வந்தே'' என்று உற்சாகத்தோடு கூப்பிட்டான் ரூஸோ.

``நல்லா இருக்கேன் ரூஸோ. நாய்க்குட்டிகள் எங்கே?'' - அப்படின்னு ஆர்வத்தோடு கேட்டான் குணா.

``வாங்க'' என்று வீட்டுக்குப் பின்னாடி இருந்த தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போனான் ரூஸோ.

dog
dog
மியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

அங்கே நாய்க்காகக் கட்டியிருந்த சின்ன குடிலில் இவங்களைப் பார்த்ததும் அம்மா நாய் எழுந்து நின்னு வாலை ஆட்டி செல்லமா குரைச்சது. அந்த அம்மா நாய்க்குப் பக்கத்துல ரெண்டு குட்டிகள், `கீய்ய்ங்... கீய்ய்ங்'னு கத்திச்சுங்க.

``என்னடா ரூஸோ... ரெண்டுதான் இருக்கு. மொத்தம் ஐந்து இருந்துச்சே'' எனக் கேட்டான் காசி.

``தெரிஞ்சவங்க கேட்டாங்கடா. மூணு ஆண் குட்டிகளைக் கொடுத்துட்டோம். இது ரெண்டும் பெண் குட்டிகள்'' - அப்படின்னு சொன்னான் ரூஸோ.

``இதை யாரும் வாங்கிக்கலையா?'' - அப்படின்னு கேட்டான் குணா.

``பெண் நாய்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்துல வாங்கிக்க மாட்டாங்கடா'' என்று சொன்னான் ரூஸோ.

``ஏன் அப்படி?''னு கேட்டான் குணா.

``பெண் நாய்ன்னா வளர்ந்ததும் இந்த மாதிரி குட்டிகள் போடும். அதையும் சேர்த்து கவனிச்சுக்கணும். அதனால வளர்க்க மாட்டாங்க'' - அப்படின்னு சொன்னான் ரூஸோ.

அந்த இரண்டு நாய்க்குட்டிகளையும் பார்த்தான் குணா. ஒரு குட்டி கறுப்பும் வெள்ளையும் கலந்த கலரில் இருந்துச்சு. இன்னொரு குட்டி, காபி கலரில் இருந்துச்சு. அந்தக் குட்டியை குணாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.

kids
kids

``ரூஸோ... இந்தக் குட்டியை எனக்குக் கொடுக்கறியா, நான் ஊருக்குக் கொண்டுபோய் வளர்க்கிறேன்'' - அப்படின்னு சொன்னான்.

``நிஜமாவா... சரி கொண்டு போ'' - அப்படின்னு சொல்லி, அந்தக் குட்டியைக் கொடுத்தான் ரூஸோ.

சந்தோஷத்தோடு அதை எடுத்துகிட்டு வந்தாங்க காசியும் குணாவும். ஆனால், குணாவின் அம்மா அதை மறுத்துட்டாங்க.

``குணா, நாம இருக்கிறது வாடகை வீட்டுல. அங்கே நாய் வளர்க்க முடியாது. இப்போதான் சொந்த வீடு கட்ட ஆரம்பிச்சு இருக்கோம். அந்த வீட்டுக்குப் போனபிறகு வளர்க்கலாம்'' - அப்படின்னு சொல்லிட்டாங்க.

குணாவுக்கு ரொம்ப வருத்தமா போய்டுச்சு. ``சரி, இதைக் கொண்டுபோய் ரூஸோகிட்டயே கொடுத்துடலாம்'' - அப்படின்னு சொன்னான்.

அதுக்கு மாமா, ``வேணாம்... வேணாம்... நம்ம வீட்டுக்கு வந்துடுச்சு. நாங்களே வளர்க்கறோம். நீ லீவில் வரும்போதெல்லாம் இதோடு விளையாடலாம்'' - அப்படின்னு சொன்னார்.

எல்லோரும் சந்தோஷமாகிட்டாங்க. அந்த நாய்க்குட்டிக்கு `பரணி' எனப் பெயர் வெச்சாங்க. லீவில் அங்கே இருந்தவரைக்கும் பரணியோடு விளையாடிட்டே இருந்தான் குணா.

kid
kid
மக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

மூணு மாசத்துக்கு அப்புறம் மறுபடியும் மாமா வீட்டுக்குப் போனபோது அவனால் நம்பவே முடியலை. குட்டியாகப் பார்த்த பரணி, ரொம்ப பெருசா வளர்ந்துடுச்சு. இவனைப் பார்த்ததும் குதிச்சு ஓடிவந்து மேலே தாவிச்சு.

``பார்த்தியா குணா... குட்டியில் பார்த்திருந்தாலும் உன்னைப் பரணி இன்னும் மறக்கலை''- அப்படின்னு சிரிச்சாங்க அத்தை.

அதுக்கு அப்புறம் நாலஞ்சு நாள் லீவு கிடைச்சாலும் பரணியைப் பார்க்கிறதுக்காகவே திருப்பூருக்குப் போய்டுவான் குணா.

இந்த முறை ஒரு ஸ்பெஷலும் இருக்கு. ஆமாம்... நாலு நாளைக்கு முன்னாடிதான் பரணி நாலு குட்டிகளைப் போட்டிருக்கு. இன்னொரு ஸ்பெஷல், குணா அப்பாவும் சொந்த வீடு கட்டிட்டார். ஊருக்குத் திரும்பறப்போ ஒரு குட்டியை எடுத்துட்டுப் போகலாம் என்று சொல்லியிருந்தார்.

அதுதான் குணாவுக்கு இவ்வளவு பரபரப்பு. `பாம்... பாம்...' என்று பேருந்தின் ஹாரன் அடிச்சது. எல்லோரும் ஏறினதும் கிளம்பிச்சு.

சிலுசிலுன்னு அடிச்ச காற்றில் பேருந்தில் இருந்த எல்லோருமே தூங்கிட்டாங்க. ஆனா, குணா மட்டும் தூங்கவே இல்லை. பரணியையும் குட்டிகளையுமே நினைச்சுகிட்டு இருந்தான்.

dog
dog

குட்டிகளை நேரில்தான் முதல்முறையாகப் பார்க்கணும்னு அப்பாவின் செல்போன் வாட்ஸ்அப்ல வந்த படத்தைக்கூட குணா பார்க்கலை.

ரொம்ப நேரம் கழிச்சு கண்கள் சொக்கி தூங்கிட்டான் குணா.

``குணா... குணா... எழுந்திரு... ஊர் வந்துடுச்சு'' - அப்படின்னு அம்மாவின் குரல் கேட்டதும் `திடுக்' என எழுந்தான்.

``அண்ணா... அண்ணா... மெதுவா... இன்னும் பஸ்லதான் இருக்கோம். மாமா வீட்டுல இல்லே'' - அப்படின்னு கிண்டலாகச் சிரிச்சாள் சுபா.

விடியற்காலை 4 மணி. இன்னும் இருட்டு போகலை. ஒரு ஆட்டோவைப் பிடிச்சு மாமா வீட்டு வாசலில் போய் இறங்கினாங்க.

எல்லோருக்கும் முன்னாடி துள்ளிக்கிட்டு இறங்கின குணா, வீட்டு இரும்பு கேட் மேலே கையைவெச்ச அடுத்த நிமிஷம்... `லொள்... லொள்...'னு உள்ளே இருந்து பரணியின் சந்தோஷமான குரல் கேட்டுச்சு.

``அட... நீ வந்துட்டதை தெரிஞ்சுக்கிச்சு குணா'' - அப்படின்னு ஆச்சர்யப்பட்டார் அப்பா.

மாமா வந்து கதவைத் திறந்த அடுத்த நிமிஷம்... பாய்ந்து வந்துச்சு பரணி. குணாவையும் அப்பா, அம்மா, தங்கச்சியையும் சுற்றிச் சுற்றி வந்துச்சு. அப்புறம், குணாவின் கால் சட்டையைக் கவ்வி இழுத்துச்சு.

dog
dog

``குட்டி போட்டிருக்கேன். என் குழந்தைகளை வந்து பாருனு கூப்பிடு'' - அப்படின்னு சொன்னான் காசி.

குணாவை உள்ளே கூட்டிட்டுப் போன பரணி, தன் குட்டிகளுக்குப் பக்கத்தில் போய் நின்னுச்சு.

அழகழகா நான்கு குட்டிகள். கண்களை மூடி தூங்கிகிட்டு இருந்துச்சுங்க. அவற்றைப் பார்த்துட்டு இருக்கும்போதே மறுபடியும் `வவ்... வவ்...' - அப்படின்னு குரைச்ச பரணி மறுபடியும் குணாவின் கால்சட்டையைப் பிடிச்சு இழுத்துட்டு ஹாலுக்குப் போச்சு.

ஹாலில் அங்கேயும் இங்கேயுமே நான்கு இடங்களில் நின்னு நின்னு வந்துச்சு. குணாவுக்கு ஒண்ணும் புரியலை. அப்பா, அம்மாவுக்கும்தான்.

``என்ன பண்ணுது?'' - அப்படின்னு கேட்டான் குணா.

``புரியலையா குணா... அந்த நாலு இடங்கள்தான் பரணி குட்டிகளைப் போட்ட இடங்கள். அதைத்தான் உனக்குக் காண்பிக்குது. எவ்வளவு அறிவு பார்த்தியா'' - அப்படின்னு மாமா சொன்னார்.

குணாவுக்குச் சந்தோஷத்துல அழுகையே வந்திருச்சு. பரணியைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்தான்.

அப்புறமா, குட்டிகளைப் போய்ப் பார்த்தாங்க.

``அண்ணா... இதுல எந்தக் குட்டியை நாம வளர்க்கலாம்'' - அப்படின்னு கேட்டாள் தங்கச்சி சுபா.

``மூணு ஆண் குட்டிகள்... ஒரு பெண் குட்டி... நாம பெண் குட்டியைக் கொண்டு போகலாம்'' - அப்படின்னு சொன்னான் குணா.

எல்லோரும் சந்தோஷமா சிரிச்சாங்க. `வவ்... வவ்...' - அப்படின்னு பரணியும் சந்தோஷமா குரல் கொடுத்துச்சு.

சிங்கம் பிடரி ஏன் உதிருது? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்

அடுத்த கட்டுரைக்கு