Published:Updated:

`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories

குட்டிக் கதை ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... பசியோடு இருந்த ஒரு முதலை, இரைக்காகக் காத்திருந்து, கிடைத்தபோது என்ன செய்தது?

`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... பசியோடு இருந்த ஒரு முதலை, இரைக்காகக் காத்திருந்து, கிடைத்தபோது என்ன செய்தது?

Published:Updated:
குட்டிக் கதை ( pixabay )

அந்த முதலைக்கு அன்றைக்கு ரொம்ப பசி... ரொம்ப ரொம்ப பசி... கொஞ்ச நாளா சரியான இரை கிடைக்கவே இல்லை.

பொதுவா, முதலைகள் ஆற்றுக்குள் சுற்றும் மீன்கள் மற்றும் சில உயிரினங்களைப் பிடிச்சுச் சாப்பிடும். சில சமயம் இரையே கிடைக்காது. முதலையால் சாப்பிடாமல் கொஞ்ச நாள் இருக்க முடியும். அதையும் தாண்டி இரையே கிடைக்காத நேரத்துலதான் தண்ணீர் குடிக்க வரும் நில விலங்குகள் எதையாவது பிடிச்சு சாப்பிடும்.

குட்டிக் கதை
குட்டிக் கதை
pixabay

இப்போ அப்படித்தான் ரொம்ப பசியோடு இருந்துச்சு. எந்த விலங்காவது தண்ணீர் குடிக்கவரும், பிடிச்சுச் சாப்பிடலாம்ன்னு கரையையொட்டி தண்ணீருக்குள் மூழ்கியவாறு காத்திருந்துச்சு.

அது காட்டையொட்டின மாதிரி இருக்கிற ஆறு... யானை முதல் முயல் வரை எல்லாமே அங்கேதான் வந்து தண்ணீர் குடிக்கும். அதனால், நிச்சயம் இரை கிடைக்கும்னு காத்திருந்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலடிச் சத்தம் கேட்டதும் முதலை உஷார் ஆச்சு... தண்ணீருக்குள் சின்ன அசைவு வந்துடாத மாதிரி மிதந்தபடி இருந்துச்சு.

காலடிச் சத்தம் நெருங்கிச்சு... நெருங்கிச்சு... ஓர் உருவம் குனிஞ்சு தண்ணீர் குடிக்க ஆரம்பிச்சது. முதலைக்கு ஏமாற்றமா போயிடுச்சு. ஏன்னா, அது ஒரு சிங்கம்.

சிங்கம் எல்லாம் கடுமையாகத் தாக்கிடும். அதனால, மூச்சு காட்டாமல் தண்ணிக்குள்ளே போயிடுச்சு முதலை.

சிங்கம் போனதும் மறுபடியும் கொஞ்சம் மேலே வந்து காத்திருந்துச்சு. மறுபடியும் காலடிச் சத்தம்... இந்த முறை வந்தது யானைக் கூட்டம்.

முதலை
முதலை
pixabay

`ஆத்தீ... வம்பு பண்ணினா தூக்கி வீசிடுவாங்க' என நினைச்சுக்கிட்டே தண்ணிக்குள்ளே போயிடுச்சு முதலை.

யானைகள் தண்ணியைக் குடிக்கிறதும் தலையில் ஊற்றிக்கொள்வதும் ஆற்றுக்குள் இறங்கி குளிச்சு விளையாடறதுமாக இருந்துச்சுங்க. அதிலும், ஒரு குட்டி யானை பயங்கர சேட்டை பண்ணுச்சு.

`சரிதான்... இவங்க எப்போ கிளம்புவாங்க. பசி தாங்க முடியலையே'ன்னு காத்திருந்துச்சு முதலை.

ஒரு வழியாக யானைக் கூட்டம் கிளம்பிப் போனதும், ஆறே பெருமூச்சு விட்டுச்சு. கொஞ்ச நேரம் அமைதி... அமைதி... அமைதியோ அமைதி...

முதலை
முதலை
pixabay

மறுபடியும் முதலை ஆற்றுக்கு மேல் பகுதிக்கு வந்து தண்ணீரில் மூழ்கிக் காத்திருந்துச்சு. மறுபடியும் காலடிச் சத்தம் கேட்டுச்சு. இந்தமுறை வந்தது ஒரு மான்... ஒற்றைப் பெண் மான்.

`ஆஹா சூப்பரு... இந்த மானை தவறவிடக் கூடாது. ஒரே பிடியா பிடிச்சுடணும்' எனத் தயாராச்சு முதலை.

அந்த மான் தண்ணீர் குடிக்க ஆரம்பிச்சதும் ஒரே பாய்ச்சல்... கழுத்தைப் பிடிக்கிறதுதான் முதலையின் திட்டம். ஆனால், அதுக்குள்ளே உஷாரான மான், விலகி ஓடப் பார்த்துச்சு. வேகம் பத்தலை...

மானின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடிச்சுடுச்சு முதலை. தடுமாறி விழுந்து திமிற ஆரம்பிச்சது மான். முதலையின் பாதி உடம்பு தரைக்கு வந்தாச்சு. அது கொஞ்சம் கொஞ்சமாக மானை கவ்விட்டே வரும்போது...

crocodile
crocodile
pixabay

``முதலை அண்ணே... முதலை அண்ணே... என்னை விட்டுருங்க''ன்னு கெஞ்ச ஆரம்பிச்சது மான்.

``முடியாது... எனக்கு ரொம்ப பசியா இருக்கு. கொலைப் பட்டினியில இருக்கேன். உன்னை விட முடியாது''ன்னு சொல்லிச்சு முதலை.

``ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. எனக்குக் குட்டி பிறந்து மூணு நாள்தான் ஆச்சு. அது என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும். தாய் இல்லாட்டி காட்டுக்குள்ளே குட்டியின் நிலைமை என்னவாகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க''ன்னு சொல்லிச்சு மான்.

தன் அகலமான வாயைத் திறந்தவாறு மானின் வயிறு வரை வந்துட்ட முதலை லேசாகத் தயங்கிச்சு. ``நிஜமாத்தான் சொல்றியா, குட்டி பிறந்து மூணு நாளா ஆச்சு?'' எனக் கேட்டுச்சு.

``இயற்கை மீது சத்தியமா! முதலை அண்ணே, அதோ தெரியுதே புதர். அங்கேதான் மூணு நாளைக்கு முன்னாடி குட்டியை ஈன்றேன். என் குட்டியும் அங்கேதான் இருக்கு'' எனச் சொல்லிச்சு மான்.

deer
deer
pixabay

முதலை மெதுவாகப் பின்வாங்கி, மானின் பிடியை விட்டுச்சு. சட்டென எழுந்து உடம்பைக் குலுக்கி கால்களை உதறியது மான். ``ரொம்ப நன்றிண்ணே. உங்களோட பசியையும் பொருட்படுத்தாம என்னை விடுவிச்சதை எப்பவும் மறக்க மாட்டேன்'' எனச் சொல்லிச்சு.

``சரி... சரி... குட்டியைப் பார்த்துக்க'' எனச் சொல்லிச்சு முதலை.

கொஞ்ச தூரம் போய் தனது குட்டியுடன் சேர்ந்துக்கிட்ட மான், திரும்பிப் பார்த்து மறுபடியும் நன்றி என்கிற மாதிரி தலையை ஆட்டிச்சு.

பதிலுக்குத் தலையை ஆட்டின முதலை, தன் வயிற்றைத் தடவிக்கிட்டே தண்ணிக்குள்ளே போச்சு!

என்ன சுட்டீஸ்... கதை பிடிச்சிருந்துச்சா?

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாக கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்