Published:Updated:

கூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... எலிக் கூட்டத்திலிருந்து வெளியே போன சுகு எலி, இப்போ எங்கே எப்படி இருக்கு?

எலி
எலி ( pixabay )

ந்த ஊருல ஒரு அரச மரம் இருந்துச்சு. அந்த அரச மரத்தடியில ஒரு பிள்ளையார் கோயில் இருந்துச்சு. அது ஒரு சிறிய கோயில். அரச மரத்தைச் சுற்றி வட்டமாக ஒரு மேடை இருக்கும். அந்த மேடையிலதான் பிள்ளையார் இருக்கும். பிள்ளையாருக்கு எதிரே குட்டியாக ஒரு மூஞ்சூறு சிலையும் இருக்கும்.

Vikatan Podcast
Vikatan Podcast

மூஞ்சூறுன்னா தெரியும்தானே சுட்டீஸ்..? எலி வகைகளில் ஒண்ணு. அதைத்தான் பிள்ளையாரின் வாகனம் எனச் சொல்வாங்க. இந்தக் கதையில் வரப்போறது அந்த மூஞ்சூறோ பிள்ளையாரோ இல்லே.

பின்னே யாரு வரப்போறாங்க? அந்தப் பிள்ளையார் இருக்கிற மரத்துக்குப் பின்னாடி வாங்க... இதோ, மரத்துக்குக் கீழே ஒரு பொந்து தெரியுதா? அந்தப் பொந்துக்குள்ளேதான் கதையில் வரப்போறவங்க இருக்காங்க. அங்கே போவோமா...

உஷ்... சத்தம் போடாமல் மெதுவா வாங்க... மெதுவா மண் சரிஞ்சுடாம இறங்குங்க... மண் சரிஞ்சுட்டா உள்ளே இருக்கிறவங்க மாட்டிப்பாங்க பாவம்!

ம்... வந்தாச்சா... `கீச்... கீச்...' சத்தத்தோடு நிறைய எலிகள் திரிஞ்சுட்டு இருக்கு பாருங்க. ஆமாம்! இது எலிகள் வசிக்கும் ஏரியா.

சுவத்துல சாய்ஞ்சுட்டு தூங்கிட்டு இருக்கிற இந்த எலியை விட்டுருங்க... ஏதோ சிந்தனையோடு இப்படியும் அப்படியும் திரியுற அந்த எலியையும் விட்டுருங்க... அதோ, மூணு எலிகள் பேசிட்டிருக்காங்க பாருங்க அங்கே போகலாம்.

rat
rat
pixabay

``அடேயப்பா... சுகு நீயா? ஆளே அடையாளம் தெரியலையே'' - அப்படின்னு ஆச்சர்யப்பட்டுச்சு கிபா.

``நீ இந்த இடத்தைவிட்டுப் போனதும் என்ன ஆச்சோன்னு கவலைப்பட்டோம். எங்கே போனே?'' எனக் கேட்டுச்சு நாசி.

அவங்க ரெண்டு பேருக்கும் எதிர்ல இருந்துச்சு ஒரு குண்டு எலி. நல்லா `கொழுக் மொழுக்' என இருந்த அந்த எலியின் முகத்துல ரொம்ப பெருமிதம். அந்த எலியின் பெயர்தான் சுகு.

``நான் இப்போ ஒரு மாளிகை மாதிரியான இடத்துல இருக்கேன். அங்கே அரிசி, பருப்பு, சர்க்கரை, பழங்கள், காய்கள் என நிறைய இருக்கு. நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்'' - அப்படின்னு பெருமையாகச் சொல்லிச்சு சுகு.

சுகுவும் முன்னாடி இங்கே இருந்த எலிகளில் ஒண்ணுதான். இந்த எலிகளுக்கு எல்லாம் ஒரு தலைவன் இருக்கு. அந்தத் தலைவன் சொல்ற மாதிரிதான் இங்கே இருக்கிற எலிகள் நடந்துக்கணும்.

ஆனா, சுகுவுக்கு அந்தத் தலைவன் போடற ரூல்ஸ் எதுவுமே பிடிக்காது. தன் இஷ்டப்படி நடந்துக்கும். இதனால், ரெண்டு பேருக்குள்ளே அடிக்கடி வாக்குவாதம் நடந்துட்டே இருந்துச்சு.

rat
rat
pixabay
`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா?' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

ஒருநாள் ரொம்ப கோபமான தலைவன் எலி, ``இந்த இடத்துக்கான விதிமுறைகளை மதிச்சு ஒழுக்கத்தோடு இருக்கிறதுன்னா இரு. இல்லைன்னா வேற இடம் பார்த்துக்க'' - அப்படின்னு சொல்லிடிச்சு.

உடனே சுகு எலியும், ``அதை நான் எப்போவோ முடிவுப் பண்ணிட்டேன். இதோ இப்பவே கிளம்பறேன்'' எனச் சொல்லிட்டு போய்டுச்சு.

பல நாள்களாகத் தகவலே இல்லை. கிபா மற்றும் நாசி எலிகள்தான் சுகுவின் ஃப்ரெண்ட்ஸ். அதனால், அவங்கதான் சுகுவை அடிக்கடி நினைச்சுப்பாங்க. இப்போ திடீர்னு வந்து நிற்கும் சுகுவைப் பார்த்ததும் ஆச்சர்யமாகிடுச்சு.

``மாளிகை மாதிரியான இடமா? அப்படி என்ன இடம்?'' எனப் புரியாமல் கேட்டுச்சு கிபா.

``அதை நான் சொல்றேன்'' - அப்படின்னு குரல் கேட்டு மூணு எலிகளும் திரும்பிப் பார்த்துச்சுங்க.

rat
rat
pixabay

அங்கே இடுப்புல கைகளை வெச்சுக்கிட்டு முறைப்போடு இருந்துச்சு தலைவன் எலி. ஆமாம்! வெளியே போயிருந்த தலைவன் எலி வந்துருச்சு.

``இவன் சொல்றது மாளிகை இல்லே... மளிகைக் கடை. மனுசங்க உணவுப் பொருள்கள் வாங்கற கடை. அங்கே பதுங்கி இருந்துக்கிட்டு திருட்டுத்தனமா சாப்பிட்டு இப்படிக் கொழுத்து வந்திருக்கான். நான் சொன்னது சரிதானே?'' - அப்படின்னு கோபமா சொல்லிச்சு தலைவன் எலி.

சுகு எலி கொஞ்சமும் பயப்படலை. ``ஆமாம்... உங்க பேச்சைக் கேட்டுக்கிடு இங்கேயே இருந்தா எப்பவோ கிடைக்கும் கொஞ்சம் சாப்பாட்டை தின்னுக்கிட்டு இதோ இவங்க மாதிரி நோஞ்சானா கிடக்கணும்'' - அப்படின்னு சொல்லிச்சு.

``இது நோஞ்சானா இருக்கிறதில்லே... உழைச்சு உறுதியா இருக்கிறது. நீ எப்படியோ இருந்துட்டு போ. இங்கே எதுக்கு வந்தே?'' எனக் கேட்டுச்சு தலைவன் எலி.

``நான் மறுபடியும் இங்கே இருந்துக்கறேன்னு உங்ககிட்ட கெஞ்ச வரலை. என் நண்பர்களைப் பார்க்கணும்னு தோணுச்சு வந்தேன். இதோ கிளம்பறேன்'' - அப்படின்னு விறைப்பாகச் சொல்லிச்சு.

rati
rati
pixabay
குரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு?- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

அப்புறமா, கிபா மற்றும் நாசி பக்கம் திரும்பி, ``இதோ பாருங்க,. இந்தத் தலைவர் பேச்சை கேட்டீங்கன்னா கடைசி வரைக்கும் இப்படியேதான் இருக்கணும். என்னை மாதிரி நல்லா இருக்க நினைச்சா உங்களுக்கான வழியைத் தேடிக்கங்க'' - அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடுச்சு.

``என்னங்கப்பா... நீங்களும் போகணுமா? உழைச்சு சாப்பிடாம, திருடிச் சாப்பிடறதைப் பெருமையா நினைக்கிறான். இன்னொரு முறை அவனை இங்கே பார்த்தால் உங்களையும் சேர்த்து துரத்திடுவேன்'' - அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டு நகர்ந்துச்சு தலைவன் எலி.

அன்றைக்கு ராத்திரி கிபாவும் நாசியும் தூங்கவே இல்லை. சுகு பற்றியே கிசுகிசு எனப் பேசிட்டிருந்தாங்க. சுகுவின் கொழு கொழு உடம்பும் அவனோட தெம்பான பேச்சும், அந்த மளிகைக் கடையில் இருக்கிறதா சொன்ன உணவுகளும் பற்றிப் பேசிக்கிட்டாங்க.

``நாசி... எனக்கு ஒரு யோசனை தோணுது'' எனச் சொல்லிச்சு கிபா.

``என்ன யோசனை?'' எனக் கேட்டுச்சு நாசி.

rat
rat
pixabay

``சுகு சொன்னதை வெச்சு பார்க்கிறப்போ, அந்த மளிகைக் கடை பக்கத்துலதான் இருக்கணும். இன்னிக்கு விடியற்காலையில எல்லா எலிகளும் அசந்து தூங்கும். அந்த நேரத்துல அங்கே போய்ட்டு வருவோம். சுகுவைச் சந்திப்போம்'' எனச் சொல்லிச்சு கிபா எலி.

கொஞ்சம் யோசிச்ச நாசி எலியும், ``நீ சொல்றதும் நல்லாதான் இருக்கு. அந்த இடம் சரியா இருக்கும்னு தோணுனா அங்கேயே இருந்துடுவோம். இல்லைன்னா திரும்பிடுவோம்'' எனச் சொல்லிச்சு.

ரெண்டு எலிகளும் பொறுமையா காத்திருந்துச்சுங்க. விடியற நேரம் எல்லா எலிகளும் அசந்து தூங்கறதை உறுதிசெய்துகிட்டு கிளம்பிச்சுங்க.

வலையைவிட்டு வெளியே வந்ததும், ``எந்தப் பக்கமா போறதுப்பா?'' எனக் கேட்டுச்சு நாசி.

``வடக்கு பக்கம்தான் கடை வீதி இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன். வா... வா...'' எனச் சொல்லிட்டு முன்னாடி நடந்துச்சு கிபா.

அது சொன்னது நிஜம்தான். கொஞ்ச தூரம் போனதும் கடைவீதி வந்துச்சு. ரெண்டு பேருக்கும் பயங்கர குஷி.

``அடுத்து சுகு இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கணும். இங்கே இவ்வளவு கடைகள் இருக்கே... இதுல எதெல்லாம் மளிகைக் கடைகள்? எந்த மளிகைக் கடையில சுகு இருப்பான்?'' - அப்படின்னு கேட்டுச்சு நாசி.

rat
rat
pixabay

அப்போ, ``ஏய்... ஏய்... அங்கே பாரு'' எனப் பதற்றத்தோடு சொல்லிச்சு கிபா.

நாசியும் திரும்பிப் பார்த்துச்சு. அங்கே ஒரு மனிதர் வந்துட்டு இருந்தார். அவர் கையில ஒரு பெட்டி. அந்தப் பெட்டியின் வாய்ப் பக்கம் சரிவாக ஒரு கதவு இருந்துச்சு. அந்தக் கதவில் ஒட்டின மாதிரி ஒரு நீளமான பிடி. அந்தப் பிடியைப் பிடிச்சுக்கிட்டுதான் வந்துட்டிருந்தார் அந்த மனிதர்.

அந்தப் பெட்டிக்குள்ளே இருந்து `கீச்... கீச்...' சத்தம்.

``எ... என்னப்பா அது?'' - அப்படின்னு பயத்தோடு கேட்டுச்சு நாசி.

``தெரியாதா உனக்கு... அதுக்குப் பெயர்தான் எலிப்பொறி. நம்மளைப் பிடிக்கிறதுக்காக மனிசங்க பயன்படுத்தறது. நல்லா கவனி... அதிலிருந்து வர்றது சுகு குரல்தான்'' - அப்படின்னு சொல்லிச்சு கிபா.

அது சொன்னது சரிதான்... அந்த மனிதர் இவங்களைக் கடந்து நடக்கும்போது, பெட்டியின் பின்பக்கம் தெரிஞ்சது. அங்கே ஜன்னல் மாதிரி கம்பிகள். அதன் வழியே சுகுவின் முகம் தெரிஞ்சது.

காகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

``யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க... யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க''

இதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டிருந்துச்சு சுகு. அவ்வளவுதான்... கிபாவும் நாசியும் `குடுகுடு' என ஓட்டம் பிடிச்சு, அவங்க வலைக்குள் வந்து, சத்தம் போடாமல் படுத்துக்கிட்டாங்க.

என்ன சுட்டீஸ்... கதை எப்படி இருந்துச்சு?

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்