Published:Updated:

கவிஞர் வைரமுத்துவைக் கவர்ந்த `சுட்டிகளுக்கான குட்டிக்கதை!' #VikatanBedTimeStories

 கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

விகடன் இணையத்தில் தினமும் வெளியாகும் சுட்டிகளுக்கான குட்டிக்கதையிலிருந்து ஒரு கதையை, சாகித்ய அகாடமி விருது விழாவில் தன் கம்பீரக் குரலில் சொல்லி அசரவைத்தார் கவிஞர் வைரமுத்து.

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டே வருகிறது. கூட்டுக்குடும்பங்கள் குலைந்து, தனிக்குடித்தனங்கள் அதிகரித்ததும், தொழில்நுட்ப சாதனங்கள் குழந்தைகளை ஈர்ப்பதுமே கதைகள் குழந்தைகளிடமிருந்து விலகக் காரணம். இந்தத் தலைமுறை பெற்றோரும் கதைகள் மீது ஈர்ப்பில்லாதவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளும் பெற்றோரும் கதைகள் அறிவதற்காக விகடன் இணையதளத்தில் தினமும் மாலை 7 மணிக்கு, சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories வெளியிடப்படுகிறது. இந்தக் கதைகளை ஆடியோ வடிவிலும் கேட்கமுடியும்.

வைரமுத்து
வைரமுத்து
Sahitya Akademi

விகடனின் இந்த முயற்சிக்கு, பெற்றோர்களிடமிருந்து மட்டுமின்றி, குழந்தைகளிடமும் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் வெளியான கதைகளை, குழந்தைகள் தங்கள் குரலில் பேசி வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் குரூப்களிலும் இந்தக் கதைகள் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு சார்பில் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த தேவி நாச்சியப்பன் தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியம் படைத்தமைக்காக விருது பெற்றார்.

கறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி! சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories

விகடன் இணையத்தில் தினமும் வெளியாகும் சிறுவர் கதையிலிருந்து ஒரு கதையை, ஒரு விருது விழாவில் கவிஞர் வைரமுத்து அழகுற கூறினார். அதன் ஒலி வடிவம் இதோ! அவசியம் கேளுங்க.

Posted by Chutti Vikatan on Wednesday, November 20, 2019

இவ்விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து, குழந்தை எழுத்தாளர்கள் பங்குபெற்றார்கள். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் கவிஞர் வைரமுத்து.

`இந்தியாவின் பல பகுதியிலிருந்து வந்திருக்கும் எழுத்தாளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய சாகித்ய அகாடமிக்கு நன்றி. சிறுவர்களுக்கு இலக்கியம் படைப்பது எளிதான விஷயமல்ல. இவர்களுடைய படைப்புகளின் வாசகர்கள் சிறுவர்கள். அதனால் நேரடியாக அது குறித்துப் பாராட்டிப் பேசும் வாய்ப்பிருக்காது. ஆனாலும், அதெல்லாம் குறித்துக் கவலைப்படாமல் எழுதிவருவது பாராட்டுக்குரியது" என்று பாராட்டிப் பேசிய வைரமுத்து, ஒரு வலைதளத்தில் படித்தததாகக் கூறி, விகடன் இணையதளத்தின் சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories பகுதியில் இடம்பெற்ற கே.யுவராஜன் எழுதிய `கறுப்புக்கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி' என்ற கதையை தன் கம்பீரக் குரலில் சொல்லத் தொடங்கினார்.

தனது நேர்த்தியான கதை சொல்லல் முறையால், சுவாரஸ்யமாக முழுக்கதையையும் சொல்லி முடித்த வைரமுத்துவுக்கு பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஆரவாரமான கைத்தட்டல் பரிசாகக் கிடைத்தது.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

இந்தியா முழுவதுமிருந்து பெரும் ஆளுமைகள் பங்கேற்ற ஓர் விழாவில் விகடன் இணையதளத்தில் இடம்பெற்ற சுட்டிகளுக்கான குட்டிக்கதையைச் சொல்லி அனைவரையும் மகிழ்வித்ததற்காக நன்றி, கவிஞர் வைரமுத்து.

விகடனின் #BedTimeStories தொடர் பல்வேறு நிலையிலான வாசகர்கள், ஆளுமைகளிடம் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்களும் தொடர்ந்து கதைகள் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு