Published:Updated:

றெக்கை முளைச்ச குருவிகள் என்ன செஞ்சதுங்க? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை  #DailyBedTimeStories

குருவி
குருவி ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... றெக்கை முளைச்சு முதல்முறையாகப் பறக்கும் குருவிக் குஞ்சுகள் யாரையெல்லாம் சந்திச்சதுங்க?

ந்த ஆலமரத்துல ஒரு அம்மா குருவி கூடுகட்டி மூன்று குஞ்சுகளைப் பொரிச்சு இருந்துச்சு. வழக்கம்போல தன் குஞ்சுகளுக்கு இரையைக் கொண்டு வர போயிருந்துச்சு.

ஆனால், வழக்கத்தைவிட இன்றைக்கு மூன்று குஞ்சுகளும் அம்மாவை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்துச்சுங்க.

குருவி
குருவி

``என்ன ஆச்சு? அம்மா ஏன் இன்னும் வரலை? நான் வேணும்ன்னா கூட்டைவிட்டு வெளியே போய்ப் பார்க்கட்டுமா?'' -அப்படின்னு சொல்லிச்சு ஒரு குருவிக்குஞ்சு.

``வேணாம்... வேணாம்... அம்மாவுக்குத் தெரிஞ்சா கோபிப்பாங்க'' - அப்படின்னு சொல்லிச்சு ரெண்டாவது குருவிக்குஞ்சு.

``நமக்குத்தான் இப்போ றெக்கை முளைச்சுடுச்சே. அம்மாதானே பறக்கச் சொல்லிக் கொடுத்தாங்க'' - அப்படின்னு சொல்லிச்சு மூணாவது குருவிக்குஞ்சு.

``அது அம்மாவின் மேற்பார்வையில் கொஞ்சம் கொஞ்சமா பறந்து காட்டினோம். அவங்க இல்லாமல் அப்படிச் செய்யக் கூடாது'' - அப்படின்னு சொல்லிச்சு ரெண்டாவது குருவிக்குஞ்சு.

``ஆனா, இன்னைக்கு ஏன் அம்மா இவ்வளவு தாமதம் செய்யறாங்க?''னு அலுத்துக்கிச்சு முதல் குருவிக்குஞ்சு.

``அவங்க ஒண்ணும் தாமதம் செய்யலை. எப்பவும்போல வந்துடுவாங்க. உனக்குத்தான் இன்னைக்கு அந்த மாதிரி தெரியுது'' - அப்படின்னு விளக்கிச்சு ரெண்டாவது குருவிக்குஞ்சு.

அதுதான் நிஜம். மற்ற ரெண்டு குருவிக்குஞ்சுகளுன் இப்படிப் பரபரப்பா இருக்க காரணம் இருக்கு.

ஆமாம்! கொஞ்சம் கொஞ்சமா பறக்க கத்துக்கிட்ட பறவைக் குஞ்சுகளை, இன்னைக்கு வெளியே கூட்டிட்டுப் போறதா சொல்லியிருந்துச்சு அம்மா குருவி.

birds
birds
pixabay
குணாவும் குட்டி பரணியும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

`முதல்முறையா பறந்து வெளியே போகப்போறோம். பல இடங்களைப் பார்க்கப்போகிறோம்' என்கிற ஆவலில்தான் இவ்வளவு பரபரப்பு.

கொஞ்ச நேரத்துல... ``செல்லங்களா... நான் வந்துட்டேன். இன்னைக்கு அருமையான உணவைக் கொண்டுவந்திருக்கேன்'' - அப்படின்னு சந்தோஷத்தோடு சொல்லிச்சு அம்மா குருவி.

``அம்மா... அம்மா... இன்னைக்கு எங்களை வெளியே கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே... எப்போ போறோம், எப்போ போறோம்,. எப்போ போறோம்?'' - அப்படின்னு கேட்டுச்சுங்க குஞ்சுகள்.

``போகலாம் செல்லங்களா... சாப்பிட்டு முடிச்சதும் போகலாம். நிறைய பேரைச் சந்திக்கலாம். அவங்களோடு நீங்க பேசலாம்''

அம்மா குருவி இப்படிச் சொல்லிட்டு, தன் வாயிலிருந்து இரையை எடுத்து குஞ்சுகளுக்குக் கொடுத்துச்சு.

வெளியே போகப்போகிற சந்தோஷத்துல மூன்று குஞ்சுகளும் வேக வேகமாகச் சாப்பிட்டு முடிச்சதுங்க.

``அருமைச் செல்லங்களா... இப்போ போகலாம். முதல்முறையா ரொம்ப தூரம் பறக்கப் போறீங்க. அதனால், ரொம்ப வேகம் இல்லாமல் என்னோடு சேர்ந்து வாங்க'' - அப்படின்னு சொல்லிச்சு அம்மா குருவி.

bird
bird
pixabay

கூட்டைவிட்டு வெளியே வந்த குஞ்சுகள் பறக்க ஆரம்பிச்சதுங்க. காற்று முகத்தில் மோத, அதை எதிர்த்துப் பறக்கிறதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

வேற வேற மரங்கள்... பறந்துபோகும் வேற வேற பெரிய பறவைகள்... கீழே தெரியும் காட்சிகள் என ரொம்ப ரொம்ப ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு.

ப்படியே பறந்துப் பறந்து ஒரு இடத்துக்கு வந்தாங்க.

``செல்லங்களா... நாம எல்லாம் பறவைகள். இந்த உலகத்துல பறவைகள் தவிர இன்னும் பல்வேறு வகையான உயிரினங்கள் இருக்கு. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். என்னுடனே வாங்க. அவங்களோடு பேசுங்க'' - அப்படின்னு சொல்லிச்சு அம்மா குருவி.

மூன்று குருவிகளும் தலையாட்டிச்சுங்க. அவங்க முதலில் பார்த்தது... இலைகள் இல்லாத மரக்கிளை மாதிரி தலையில் வெச்சுக்கிட்டு, இலை மாதிரி அகலமான கண்களோடு, கிளையின் குச்சி மாதிரி கால்களோடு, உடம்பில் புள்ளிகளோடு இருந்த ஒரு உயிரினத்தை.

``வணக்கம்.... என் பேரு குருவிக்குஞ்சு. நீங்க யாரு?'' - அப்படின்னு கேட்டுச்சு முதல் குருவிக்குஞ்சு.

சுட்டீஸ்... அந்த உயிரினத்தின் பெயர் உங்களுக்குத் தெரியும்தானே..?

deer
deer
pixabay
மியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

ஆமாம்!

``என் பெயர் புள்ளிமான். நான் ரொம்ப வேகமா ஓடுவேன். நீங்க கண் திறந்து மூடறதுக்குள்ளே உங்க கண்களைவிட்டே மறைஞ்சுடுவேன்'' - அப்படின்னு பெருமையோடு சொல்லி, தன்னைப் பற்றி விளக்கிச்சு புள்ளிமான்.

``அம்மாடி... நீ பெரிய ஆள்தான்'' - அப்படின்னு மூணு குஞ்சுகளும் வியந்துச்சுங்க.

அங்கிருந்து பறந்த குஞ்சுகள், ஒரு பெரிய கட்டையில் சுருண்டு படுத்திருந்த ஒரு உயிரினத்தைப் பார்த்துச்சுங்க. அதன் உடம்பே பெரிய மரக்கிளையின் தண்டு மாதிரி இருந்துச்சு. உடம்பு முழுக்க முட்டை வடிவில் கோடுகள். அதன் வாயிலிருந்து கொடி மாதிரி நாக்கு வந்து வந்து போச்சு.

``வணக்கம்... என் பெயர் குருவிக்குஞ்சு. நீங்க யாரு?'' - அப்படின்னு கேட்டுச்சு ரெண்டாவது குருவிக்குஞ்சு.

சுட்டீஸ்... அந்த உயிரினத்தின் பெயர் உங்களுக்குத் தெரியுதா?

ஆமாம்!

``நான்தான் மலைப்பாம்பு. நான் நிமிர்ந்து படுத்தா ரொம்ப நீளமா இருப்பேன். இப்போ நீங்க பார்த்தீங்களே புள்ளிமான், அதைவிடப் பெரிய உயிரினத்தையே விழுங்கிடுவேன்'' - அப்படின்னு பெருமையோடு சொல்லி, தன்னைப் பற்றி விளக்கிச்சு மலைப்பாம்பு.

anaconda
anaconda
pixabay

``அப்பாடி...'' அப்படின்னு மூணு குஞ்சுகளும் வியந்துச்சுங்க.

அங்கிருந்து பறந்த மூன்று குருவிக்குஞ்சுகளும் ஒரு உயிரினத்தைப் பார்த்துச்சுங்க.

அந்த உயிரினத்துக்கு தலையைச் சுற்றி வட்டமா கொடிகள் மாதிரி முடிகள் இருந்துச்சு. மூக்குக்கு ரெண்டு பக்கமும் இலைகளின் காம்புகள் மாதிரியும் மீசை இருந்துச்சு. அதன் கால்களில் ஒரு கொடியில் இருக்கிற முட்கள் மாதிரி நகங்கள் இருந்துச்சு. `கிர்... கிர்...' அப்படின்னு சத்தம் போட்டுக்கிட்டே இப்படியும் அப்படியும் நடந்துட்டு இருந்துச்சு.

``வணக்கம்... என் பெயர் குருவிக்குஞ்சு. நீங்க யாரு?'' - அப்படின்னு கேட்டுச்சு மூணாவது குருவிக்குஞ்சு.

சுட்டீஸ்... அந்த உயிரினத்தின் பெயர் உங்களுக்குத் தெரியுதா?

ஆமாம்!

``நான்தான் சிங்கம். ரொம்ப ரொம்ப வலிமையானவன். நான் பெருசா கர்ஜனை பண்ணினா காடே நடுங்கும். காட்டின் ராஜான்னு சொல்வாங்க. ஒரே அடியில் யாரையும் சாய்ச்சுடுவேன்'' - அப்படின்னு சொல்லி, தன்னைப் பற்றி விளக்கிச்சு சிங்கம்.

``ஆத்தாடீ...'' - அப்படின்னு மூணு குஞ்சுகளும் வியந்துச்சுங்க.

அதுக்கு அப்புறமும் சில விலங்குகள், சில பெரிய பறவைகளை மூன்று குருவிக்குஞ்சுகளும் சந்திச்சதுங்க.

lion
lion
pixabay
மக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

துக்கு அப்புறம், ``செல்லங்களா... இன்னைக்கு இதுபோதும். களைப்பாகிடுவீங்க. நாளைக்கு வருவோம்'' - அப்படின்னு அம்மா குருவி சொல்லிச்சு.

நான்கு பேருமா கூட்டை நோக்கிப் பறக்க ஆரம்பிச்சாங்க. அப்போ, மூணு குருவிக்குஞ்சுகளும் பேசிக்கிச்சுங்க.

``சே... நான் ஒரு புள்ளிமானாகப் பிறந்திருக்கலாம். அழகான கொம்புகள் கிடைச்சிருக்கும். வேகமா ஓடியிருக்கலாம்'' - அப்படின்னு முதல் குருவிக்குஞ்சு சொல்லிச்சு.

``சே... நான் ஒரு மலைப்பாம்பாகப் பிற்ந்திருக்கலாம். ரொம்ப நீளமா இருந்திருப்பேன். புள்ளிமானையே விழுங்கியிருப்பேன்'' - அப்படின்னு ரெண்டாவது குருவிக்குஞ்சு சொல்லிச்சு.

``சே... நான் ஒரு சிங்கமாகப் பிறந்திருக்கலாம். பயங்கரமா கர்ஜனை செஞ்சிருப்பேன். எல்லோரும் என்னைப் பார்த்து நடுங்கி இருப்பாங்க'' - அப்படின்னு மூணாவது குருவிக்குஞ்சு சொல்லிச்சு.

சிரிச்ச அம்மா குருவி, ``செல்லங்களா... குருவியாக இருக்கிறது ஒண்ணும் குறைவான பிறப்பு இல்லே. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு. உங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்றேன். இப்போ நாம போனது ஒரு விலங்கியல் பூங்காவுக்கு. அந்த உயிரினங்கள் சொன்ன திறமைகள் எல்லாம் அங்கே செல்லுபடியாகாது. ஏன்னா, அவற்றைக் கூண்டுலேயும் வேலி போட்டும் வெச்சிருக்காங்க. ஆனால், குருவியாக இருந்தாலும் நாம சுதந்திரமானவங்க. நம் இஷ்டப்படி பறந்து திரியலாம்'' - அப்படின்னு சொல்லிச்சு.

சிங்கம் பிடரி ஏன் உதிருது? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

இதைக் கேட்ட மூன்று குஞ்சுகளும், ``ஓ... அப்படியா விஷயம். எங்களை மன்னிச்சுடும்மா. எங்க பிறப்பும் உயர்வானதே. சுதந்திரமான பிறப்பு'' - அப்படின்னு சொல்லிட்டு சந்தோஷமா பறக்க ஆரம்பிச்சதுங்க.

என்ன சுட்டீஸ்... கதை பிடிச்சிருந்துச்சா?

கிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்

அடுத்த கட்டுரைக்கு