Published:Updated:

சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

கிச்சன் ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? யார் கலாட்டா பண்றாங்க? போய்ப் பார்க்கலாமா!

சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? யார் கலாட்டா பண்றாங்க? போய்ப் பார்க்கலாமா!

Published:Updated:
கிச்சன் ( pixabay )

சிட்டு வீட்டு கிச்சன் அன்னிக்குக் காலையிலேயே ஒரே சத்தமா இருந்துச்சு.

ஷர்மிளி என்பதுதான் நிஜமான பெயர். அவங்க இருக்கிற போர்ஷனில் ஷர்மிளிதான் குட்டிப் பொண்ணு. மத்தவங்க எல்லாம் கொஞ்சம் பெரிய குழந்தைகள்... இன்னும் கொஞ்சம் பெரிய குழந்தைகள்... பெரிய்ய்ய்ய குழந்தைகள்.

அதனால், எல்லோரும் ஷர்மிளியைச் `சிட்டு... சிட்டு' எனக் கூப்பிட ஆரம்பிச்சு, பல வருஷமாகியும் ஷர்மிளி வளர்ந்தும் அந்தப் பெயரே நிலைச்சுடுச்சு.

கிச்சன்
கிச்சன்
pixabay

சரி, கிச்சனில் என்ன சத்தம்? யாரு சத்தம் போடறாங்கன்னு பார்க்கலாம் வாங்க!

கிச்சன் மேடையில் இருந்த ஒரு கூடையில் நிறைய காய்கறிகள் இருந்துச்சு. இன்னிக்கி சிட்டுவின் அம்மா யாரைச் சமைக்கப் போறாங்க என்று அந்தக் காய்கறிகளுக்குள் நடக்கிற பேச்சுதான் அந்தச் சத்தம்.

``நேத்திக்கே என்னைப் பொரியல் பண்றதா பேசிட்டிருந்தாங்க. ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சு. இன்னிக்கி கண்டிப்பா நான்தான் சமையலில் இருப்பேன். ஜாலி... ஜாலி''- அப்படின்னு தன்னுடைய கிரீடத்தை அசைச்சு ஆனந்தமாகச் சொல்லிச்சு கத்திரிக்காய் காயு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பார்த்து ரொம்ப ஆடாதே... சிட்டுவுக்கு நான்தான் ரொம்ப ஃபேவரைட். என்னை ஒரு வாரமா காணோம்னு சிட்டு கேட்டுட்டு இருக்கா. அதனால், டுடே இஸ் மை டே'' - அப்படின்னு ஸ்டைலாக, கெத்தாகச் சொல்லிச்சு உருளைக்கிழங்கு உலகு.

Vegetables
Vegetables
pixabay

``ம்க்கும்... சிட்டு கண்ணுக்கு என்னைவிட யாரால் நல்லது செஞ்சுட முடியும்? அதோடு நேத்து நிறைய ஹோம் ஒர்க், புராஜெக்ட்னு சிட்டு ரொம்ப நேரம் கண்விழிச்சு எழுதிட்டிருந்தா. அதனால், அம்மா இன்னிக்கு என்னைதான் சமைச்சுக் கொடுப்பாங்க. சிட்டுவின் பார்வைக்கு நானே போவேன்'' என அசால்ட்டா பேசிச்சு கேரட் கேத்தரின்.

``எல்லோரும் கொஞ்சம் ஷட்டப் பண்றீங்களா? என்னைக் கூட்டு செஞ்சுக்கொடுக்கிற நாளில்தான் சிட்டு கொண்டுபோகிற டிபன் பாக்ஸ் காலியா வருதுன்னு எத்தனை முறை அம்மா பாராட்டி இருக்காங்க தெரியுமா? அதனால், இன்னிக்கி வாழைக்காய் கூட்டுதான்'' என்று பெருமையாகச் சொல்லிச்சு வாழைக்காய் வனி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``யாராவது வாங்க போங்கப்பா... நான் இல்லாமல் ஒருநாளும் சமையல் இருக்காது'' என்று நக்கலாகச் சொல்லிட்டு சாய்ந்து உட்கார்ந்துக்கிச்சு ஒரு பச்சைமிளகாயான பத்ரி.

``தம்பி... கொஞ்சம் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுப்பா. என்னதான் உன்னைச் சமையலில் சேர்த்தாலும் எப்படியும் தூக்கித்தான் போடுவாங்க. ஆனால், ஐயாவின் நிலைமை அப்படி இல்லை. காய்களுடன் கலந்துடுவேன். எல்லோரும் சாப்பிடுவாங்க'' - அப்படின்னு அதிகாரமாகப் பேசுச்சு வெங்காயம் வெண்ணி.

carrot
carrot
pixabay

``ச்சூ... ச்சூ... இங்கே என்ன சத்தம்? உங்க எல்லோரையும்விட பெரியவள் ஒருத்தி இருக்கிறது தெரியுதா? சும்மா வளவளன்னு பேசிட்டிருக்கீங்க'' - அப்படின்னு குரல் கொடுத்துச்சு பூசணிக்காய் பூமி.

``நீங்க காலையில்தான் வந்தேங்கறதை ஞாபகம் வெச்சுட்டு பேசுங்க பெரியம்மா. உருவத்துல சின்னவளா இருந்தாலும் உங்களைவிட நான்தான் சீனியர். ரெண்டு நாளாச்சு வந்து. அதனால், சிட்டு அம்மா இன்னிக்கு எங்களைத்தான் சமைப்பாங்க'' - அப்படின்னு சொல்லிச்சு வெண்டைக்காய் வெங்கி.

இந்தக் காய்கறிகள் எல்லாம் பெரிய கூடையில் இருக்க, பக்கத்திலேயே ஒரு டப்பாவும் இருந்துச்சு. இப்போ, அதிலிருந்து உருளும் சத்தம்.

``நாங்க வந்து ஒரு வாரம் ஆகப்போகுது. உரிச்சு உள்ளே போட்டுட்டு எட்டிகூடப் பார்க்காமல் இருக்காங்க. எங்களுக்கு எப்போ தீர்வோ?'' என்று பச்சைப் பட்டாணிகள் சார்பாகப் புலம்பிச்சு பிச்சு.

இப்படியே இன்னிக்கு யார் சமையலாகப் போறோம் என்பதில் `கிய்யா.. முய்யா...' என்று பேசிட்டு இருந்தப்போ காலடிச் சத்தம் கேட்டுச்சு.

potato
potato
pixabay

எல்லோரும் அமைதியாகி கவனிச்சாங்க. சிட்டுவின் அம்மாவும் அப்பாவும் வேகமா உள்ளே வந்தாங்க.

``ம்... இன்னிக்கும் சமையல் ஆரம்பிக்க லேட்டாகிடுச்சு. எல்லாம் உங்களால்தான். ராத்திரி டிவியில ஒரு பேய் படத்தைச் சத்தமா வெச்சுட்டு பார்த்துட்டிருந்தீங்க. உங்களால் நானும் லேட்டா தூங்கினேன்'' - அப்படின்னு சிட்டு அம்மா சொன்னாங்க.

``சரி... சரி... நடந்து முடிஞ்சதை விடு. நான் எதை வெட்டணும், எதை அரைக்கணும் சீக்கிரம் சொல்லு'' எனச் சொன்னார் சிட்டுவின் அப்பா.

`என்ன நடக்கப் போகுது... யார் சமையலாகப் போறாம்னு எல்லா காய்கறிகளுக்கும் ஒரே ஆர்வம். அமைதியாக கவனிச்சாங்க. எல்லா காய்கறிகளையும் ஒரு நோட்டம் விட்டாங்க சிட்டு அம்மா.

``ம்... எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம்தான் இருக்கு. வாங்கியும் ரெண்டு, மூணு நாள் ஆகுது. இதுக்கு மேலே வெச்சுட்டு இருக்கக் கூடாது. இதை எல்லாத்தையும் மொத்தமா போட்டு காய்கறி சாதம் பண்ணிடுவோம். அது சிட்டுக்கும் ரொம்பப் பிடிக்கும். என் வேலையும் சீக்கிரம் முடிஞ்சிரும்'' - அப்படின்னு சொன்னாங்க அம்மா.

Vegetables
Vegetables
pixabay

``வாவ் சூப்பர்... எனக்கும் ரொம்பப் பிடிக்குமே. காய்கறி கலவை சாதம் சாப்பிட்டு ஒரு மாசம் ஆகப்போகுதில்லே. சரி, நான் எல்லாத்தையும் வெட்ட ஆரம்பிக்கிறேன்'' - அப்படின்னு குஷியாக தயாரானார் சிட்டுவின் அப்பா.

``முதல்ல பட்டாணிகளை எடுத்து கொஞ்சம் தண்ணியில ஊறவைங்க. அப்புறமா மற்ற வேலைகளைப் பாருங்க'' என்று சொல்லிட்டு அம்மா சுறுசுறுப்பானாங்க.

இப்போ எல்லா காய்கறிகளும் குஷியாகிட்டாங்க. ``ஹேய்ய்ய்ய்... நாம எல்லோரும் மறுபடியும் ஒண்ணா சந்திக்கப் போறோம். ஹேப்பி... ஹேப்பி...'' என்று பாட்டு பாடினாங்க.

என்ன சுட்டீஸ்... கதையைக் கேட்டு உங்களுக்கும் ஹேப்பிதானே!

இந்தக் கதையை எழுதியவர்: நா.ஆதித்தி

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism