Published:Updated:

`அலைகளின் அம்மா யாரு?' சுட்டிகளுக்கான குட்டிக் கதை #BedTimeStories #VikatanPodcast

அம்மா
அம்மா ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... நமக்கு அம்மா மாதிரி, நம்மைச் சுற்றியுள்ள பொருள்களுக்கு யார் யாரெல்லாம் அம்மாக்கள்?

ங்களுக்கு சிவப்பியைத் தெரியுமா சுட்டீஸ்?

மீனூர்குப்பம் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் கெட்டிக்காரச் சிறுமிதான் சிவப்பி.

சிவப்பியைப் பள்ளியில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆசிரியர்களுக்கோ ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவள் கேட்கிற கேள்விகள் எல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.

அம்மா
அம்மா
pixabay

தினமும் பள்ளி விட்டதும் பாடப்புத்தகத்தை எடுத்துக்கிட்டு கடற்கரைக்குக் கிளம்பிவிடுவாள். சிவப்பியின் அம்மா கடற்கரையில் பஜ்ஜி பொரித்து விற்கிறவங்க. சிவப்பியின் அப்பா, கடற்கரையில் பலூன் விற்கிறவர்.

கடற்கரைக்கு வந்து அம்மா பக்கத்தில் உட்கார்ந்துக்கிட்டு கடற்கரை காட்சிகளை ரசிச்சுக்கிட்டே படிக்க ஆரம்பிப்பாள் சிவப்பி.

மாலை நேரக் காற்று வாங்க வரும் விதவிதமான மனிதர்கள், ஓடி விளையாடும் குழந்தைகள், பல வகையான கடைகள் என அந்த இடமே ரம்யமாக இருக்கும்.

ன்றைக்கும் அப்படித்தான் கடற்கரைக்கு வந்துவிட்டாள் சிவப்பி. கடலைமாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தண்ணீர் ஊற்றி கரைச்சுகிட்டு இருந்தாங்க அம்மா.

கொஞ்சம் தள்ளி சவாரிக் குதிரையைப் பார்த்தாள் சிவப்பி. அவளுக்கு உடனே ஒரு கேள்வி தோணுச்சு.

``அம்மா... எனக்கு அம்மா நீங்க. இந்தச் சவாரிக் குதிரைக்கு அம்மா இருக்குமா?'' - அப்படின்னு கேட்டாள்.

சிவப்பியின் தலைமுடியைக் கோதிவிட்ட அம்மா, ``சிவப்பி… உலகத்தில இருக்குற எல்லா உயிர்களுக்கும் அம்மா இருப்பாங்க” - அப்படின்னு சொன்னாங்க.

horse
horse
pixabay
Vikatan

``அப்போ இந்த உலகத்தைப் பெற்ற அம்மா யாரு?”னு கேட்டாள் சிவப்பி.

அம்மா திகைச்சுட்டாங்க. அவங்க சிவப்பி மாதிரி இருந்த வயசுல, அறிவியல் புத்தகத்தில் படிச்சது ஞாபகத்துக்கு வந்துச்சு. ``உலகம் சூரியனிலிருந்து பிறந்ததுன்னு சொல்வாங்க. அதனால, உலகத்தின் அம்மா சூரியன்தான்” - அப்படின்னு சொன்னாங்க.

``அப்படின்னா அதோ ஓடிவந்து ஓடிவந்து திரும்பிப் போகுதே அலைகள்... அதோட அம்மா யாரு?'' - அப்படின்னு கேட்டாள் சிவப்பி.

``ம்... அலைகளின் அம்மா கடல்'' - அப்படின்னு அம்மா சொன்னாங்க.

உடனே சிவப்பி, ``இல்லே... அலையை உருவாக்கறது காற்று. அதனால, காற்றுதான் அலைகளின் அம்மா'' - அப்படின்னு சொல்ல, அம்மா சிரிச்சுக்கிட்டாங்க.

சிவப்பி கேட்கும் கேள்விகளும் சிந்திக்கும் விஷயங்களும் இப்படித்தான் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும்.

அம்மாவிடம் கேட்கிற மாதிரியே வகுப்பு ஆசிரியையிடம் கேள்விகளாகக் கேட்டு திணறவைப்பாள் சிவப்பி. வகுப்பு ஆசிரியை வளர்மதி, சிவப்பியின் கேள்விகளுக்கெல்லாம் சலிச்சுக்காமல் பதில் சொல்வாங்க.

sun
sun
pixabay

டுத்த நாள் காலையும் அப்படித்தான். வகுப்புக்குப் போனதும் நேற்று கடற்கரையில் நடந்த விஷயம் சிவப்பிக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு.

வளர்மதி ஆசிரியை ஏதோ எழுதிக்கிட்டிருந்தாங்க. அவங்க பக்கத்தில் போன சிவப்பி, ``டீச்சர்! நீங்க ஏதோ எழுதுறீங்கதானே… இந்த எழுத்துகளுக்கு யாரு அம்மா?'' - அப்படின்னு கேட்டாள்.

யோசிச்ச ஆசிரியை, ``சரியான கேள்வி… இப்போ இந்த பேனா எங்கிட்ட இருக்கு. அடுத்த நிமிஷம் உன்கிட்ட கொடுத்துட்டா நீயும் எழுதுவே. பேனா வெச்சிருக்கிறவங்க மாறிட்டே இருப்பாங்க. ஆனா, பேனா மாறாது. அதனால் எழுத்துகளின் அம்மா பேனா” - அப்படின்னு சொன்னாங்க.

``அப்போ, பென்சிலில் எழுதினா, அந்த எழுத்துகளின் அம்மா பென்சில்'' - அப்படின்னு சிரித்தாள் சிவப்பி.

அதைத் தொடர்ந்து, `யாருக்கு அம்மா யாரு?’ என்கிற விஷயத்தையே எடுத்துக்கிட்டு, கொஞ்ச நேரம் பேசுவோம்னு முடிவுசெஞ்சாங்க.

மாரி என்கிற சிறுமி கையில் போட்டுகிட்டு இருந்த கண்ணாடி வளையல்களைக் காண்பிச்சு, ``இந்தக் கண்ணாடி வளையலின் அம்மா யாரு?” - அப்படின்னு கேட்டாள்.

எல்லோரும் திகைச்சுட்டாங்க. யாருக்கும் பதில் தெரியலை. கடைசியில் ஆசிரியை, ``கண்ணாடி செய்யறதுக்கு முக்கிய மூலப்பொருள், சிலிக்கா என்கிற ஆற்றுமணல் பயன்படுத்தப்படுது. அதனால், மணல்தான் கண்ணாடியின் அம்மா. இப்போவெல்லாம் மணல் இல்லாமல் வேறு வகை மூலப்பொருள்களிலும் கண்ணாடி தயாரிக்கிறாங்க” - அப்படின்னு சொன்னாங்க.

paper
paper
pixabay
Vikatan

``சரி, இந்த மேசையின் அம்மா யாரு?” - அப்படின்னு சுந்தரி கேட்டாள்.

``மரம்” - அப்படின்னு கோரஸா குரல் வந்துச்சு.

``பணத்தின் அம்மா யாரு?”

``காகிதம்”

``இந்த சாக்பீஸின் அம்மா யாரு?''

``சுண்ணாம்பு கட்டி''

ஒரு சிறுமி தன் காதுகளைக் காண்பித்து, ``இந்த ஜிமிக்கியின் அம்மா யாரு?” - அப்படின்னு கேட்டாள்.

உடனே சிவப்பி, ``உன்னோட காதுல இருக்கிற ஜிமிக்குக்கு அம்மா தங்கம். என் காதுல இருக்கிறது கவரிங். அதனால், என் நகையின் அம்மா தகரம்” - அப்படின்னு சொன்னாள்.

ஆசிரியைச் சிரிச்சுக்கிட்டே சிவப்பியை வாரியணைச்சு முத்தம் கொடுத்தாங்க.

``சிவப்பி, உன்கிட்டே ஒரு பொருள் இல்லைன்னாலும், வசதி இல்லைன்னாலும், அதைப்பற்றி வருத்தப்படாம பாசிட்டிவா எடுத்துக்கிறே. உன் மனசு ஒரு முத்து'' - அப்படின்னு சொன்னாங்க ஆசிரியை.

``டீச்சர், முத்துவின் அம்மா சிப்பிதானே. அது சிப்பி... நான் சிவப்பி'' - அப்படின்னு சிரிச்சாள் சிவப்பி.

எல்லோரும் சிரிச்சாங்க.

ஹலோ சுட்டீஸ், நீங்க சொல்லுங்க `சிரிப்பின் அம்மா யாரு?'

Vikatan

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்காகச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்

அடுத்த கட்டுரைக்கு