Published:Updated:

தப்புத் தப்பா தப்பா சொல்வாங்க!

Vikatan Correspondent
தப்புத் தப்பா தப்பா சொல்வாங்க!
தப்புத் தப்பா தப்பா சொல்வாங்க!

சின்ன வயசுல சில பேரைப் பார்த்திருக்கீங்களா? ஸாரி... அவங்க பேசுறதைக் கேட்டிருக்கீங்களா? தியேட்டரை, தேட்டருனுதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட பேசுவாங்க. நான் கேட்ட இப்பவும் மறக்காத மிஸ்டேக் ஆன பெயர் லிஸ்ட் இது!

தப்புத் தப்பா தப்பா சொல்வாங்க!

 சூப்புலி, துருசுலி- ஒருத்தன் ப்ரூஸ் லீயைத்தான் பாஸ் இப்படிச் சொன்னான்!

 செயலலிதா, செமினி கணேசன், சென்ரல் மேனேசர் செயக்குமார். இதுல சில பேரு ‘ஜ’வை தப்பான இடத்துல சரியா போட்டுப் பேசுவாங்க...எப்படினு கேட்கிறீங்களா? ‘ஜெல்வி செயலலிதா’!

 சின்ன வயசுல கிரிக்கெட்டை வெறிகொண்டு பார்த்துத் திரிந்த வயசுல ஒரு பய இப்படிச் சொன்னது இத்தனை வருஷமாகியும் மறக்கலை. ‘இண்டியன் டீம்ல ரெண்டு பேரு புதுசா சேர்ந்திருக்காகடா... ஒருத்தன் கம்புளி, இன்னொருத்தன் கும்புளி’ ரொம்ப நாளா ஊருக்குள்ள அப்படித்தான் சொல்லிட்டுத் திரிஞ்சானுங்க!

 எங்க அம்மாவுக்கு ‘மசாஜ்’, பஜாஜ்’, ‘கோத்ரேஜ்’னு சொல்ல வராது. இப்போ வரை ‘மஜாஸ்’, ‘பசாச்’ ‘கோத்ரேஸ்’ தான்! 

 என் குட்டித்தம்பி நான் பேய்க் கதை சொல்லும்போதெல்லாம், ‘அண்ணே என்னைப் பயன்படுத்தாதேண்ணே’ என்பான்.

 ‘நான் உங்க ரிலையன்ஸ்தான்’னு இப்பவும் சொல்லத்தான் செய்றார் சத்துணவில் வேலை பார்க்கும் மாமா ஒருவர்.

 ‘படத்தோட க்ளைமேட் ஃபைட் சூப்பர்’ என்பான் நண்பன்.

 இன்னும் உற்சாகத்தை உற்காசம்னும், பட்டாசை  டப்பாசுன்னும், துப்பாக்கியை டுப்பாக்கினும், மதுரையை  மருதன்னும், குதிரையை குருதன்னும், சொல்லிட்டுதான் திரியறாங்க ஃப்ரெண்ட்ஸ்!

-சரண்