Published:Updated:

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

Vikatan Correspondent

மிதாப் பச்சனைப் பார்த்தால் ‘சிவாஜி’ போல் தெரிகிறது. குஷ்புவைப் பார்த்தால் ‘இந்திரா காந்தி’ போல் தெரிகிறது. ராமதாஸைப் பார்த்தால் ‘மகாத்மா காந்தி’ போல் தெரிகிறது என அவரவர்கள் எதை எதையோ கிளப்பி விடுகிறார்கள். அப்படியே எனக்கும் ‘நமக்கு நாமே’ பயணத்தில் எடுத்த போட்டோக்களைப் பார்க்கும்போது ஸ்டாலின் எப்படியெல்லாம் தெரிகிறார்னா...

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

ஆலமரத்தின் கீழ் ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்தால் புரட்சித் திலகம் போல் தெரிகிறார். சொம்பு மிஸ்ஸிங்!

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

விதவிதமான ஆங்கிள்களில் போட்டோ எடுத்துக்கொள்(ல்)வதைப் பார்த்தால் மோடி போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

மாணவர்கள் உணர்ச்சி பொங்கப் பேசுவதை, கையில் ‘மைக்’ வைத்துக்கொண்டே அந்த மேடைக்கும் இந்த மேடைக்கும் இடையே உலாத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ‘அரட்டை அரங்கம்’ விசு போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

பஸ்ஸில் கம்பியைப் பிடிக்காமல் பயணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ‘ஏய்’ படத்தில் வரும் வடிவேலு போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

டிராக், ஸ்போர்ட்ஸ் ஷூ, ஃபுட்பால் என நிற்பதைப் பார்த்தால் கால்பந்து கோச் போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

குண்டும் குழியுமான பிட்சில்கூட அசராமல் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்தால் மகேந்திர சிங் தோனி போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

கட்டட வேலை செய்பவர்களே கையெடுத்துக் கும்பிடுவதைப் பார்த்தால் ‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷ் போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

எல்லோரும் ஸ்டாலின் முன் கை நீட்டி நிற்கையில், அவர் மட்டும் சிரித்துக்கொண்டே அமைதியாக நிற்பதைப் பார்க்கும்போது தமிழ் சினிமா கல்யாண வீடுகளில் மெஹந்தி போட்டுவிடும் பொறுப்பான ஹீரோ போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

ரிப்பேரான மின் விசிறி, கிரைண்டர்களை மக்கள் ஸ்டாலினிடம் காண்பித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், ‘இன்று நேற்று நாளை’ படத்தில் வரும் சயின்டிஸ்ட் கிரிதர பார்த்தசாரதி போல் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

பச்சை கலர் படகை ஒண்டியாய் ஓட்டுவதைப் பார்த்தால் ‘நாயகன்’ படத்தில் வரும் கமல் போல் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

பெரும்பாலும் சைக்கிளிலேயே சுற்றுவதால் ‘ஜெயம்’ படத்தில் வரும் ஹீரோ ரவி போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

எல்லாக் கலைகளையும் கற்று வைத்திருப்பதைப் பார்த்தால்‘7-ம் அறிவு’ போதிதர்மரைப் போல் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

சிலம்பத்தை முன்னாடி போய், பின்னாடி போய், சைடில் வருவது போல் சுற்றுவதைப் பார்த்தால் ‘தேவர்மகன்’ கமல் போலத் தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

டேபிளில் கையை ஊன்றி எதிரில் இருப்பவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, விசாரணைக் காட்சியில் வரும் விஜயகாந்த் போல தெரிகிறார்.

உங்களுக்கும் இப்படித் தெரியுதா?

மக்களோடு மக்களாக கலந்து ஆனந்த நடனமாடும்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்திபன் போலத் தெரிகிறார்.

திடீரென ஏதாவது வீட்டினுள் நுழைந்து, அவர்களோடு கலந்துரையாடுவதைப் பார்த்தால் ராகுல் காந்தி போலத் தெரிகிறார்.

-ப.சூரியராஜ்