Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

‘ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள், வீடு வந்ததும், அதில் ஏதோ ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதைப் பார்த்து ஷாக் ஆனான் செந்தில் - இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு, வாசகர்களை சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். இதோ...!

கதை விடுறாங்க!

பிராணன்: சட்டென கனவு கலைந்தவன், கடந்த ஒரு வாரமாய் நிவாரணப் பொருட்களுக்கான ஸ்டிக்கர் பிரின்ட் செய்யும் வேலையில் ஈடுபட்டதன் விளைவுதான் இது என எண்ணினான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முத்து: அந்த ஸ்டிக்கரில் நடிகர் செந்திலை நடிகர் கவுண்டமணி எட்டி உதைப்பதுபோல் ஒரு போஸ் இருந்தது.

மனோ: அது மட்டுமில்லை, டெலிவரி செய்தவர் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க இதை உங்களுக்கு டெலிவர் செய்கிறோம்’ எனச் சொல்லிவிட்டுப் போனதும் பதறிவிட்டான்.

சண்முக சுந்தரம்: ஸ்டிக்கரில் ‘அபாயம் தொடாதே’ என்று எழுதியிருந்தது. அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு அந்த பார்சலைப் பிரித்து உள்ளேயிருந்த பருப்பு பாக்கெட்டைப் பிரித்து டப்பாவில் கொட்டினான்.

திலீபன்: ஆனால், அது ஸ்டிக்கரே இல்லை, ரெண்டு வாரமாக ஸ்டிக்கர் பற்றியே பேசிக் கொண்டிருந்ததால் எதைப் பார்த்தாலும் ஸ்டிக்கர் மாதிரியே தெரிந்தது அவனுக்கு.

பவித்ரன்: ஷாக் ஆன செந்தில் ‘அம்மா’ என ஹை பிட்சில் கத்துகிறான். அவன் கத்துறப்போ அப்படியே அவன் வாய்க்கு க்ளோஸ் அப் போய், சவுண்டைக் குறைச்சு, டைட்டில் போடுறோம் சார். படத்தோட பெயர் ஸ்டிக்கர்.