Published:Updated:

கெட்ட பசங்க சார்!

கெட்ட பசங்க சார்!

நாள்பூரா புது பேட்டரி போட்ட ஆன்ட்ராய்டு போன் மாதிரி ரைமிங்கா டயலாக்ஸ் பேசிக் கொல்லுறவங்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

கெட்ட பசங்க சார்!

காலையில ஏன் லேட்டுனு கேட்டாக்கூட ரைமிங்காதான் பதில் வரும். ‘நைட் ரெண்டு ஜெட்லி படம் பார்த்து  லேட்டாத் தூங்கி காலையில ரெண்டு இட்லி சாப்பிட்டேன்.’னு சொல்வாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘என்னாச்சு இன்னும் தூங்கலையா?’னு மட்டும் இவங்ககிட்ட கேட்டுடாதீங்க.  ‘துக்கம் இருக்குற மனசுக்கு தூக்கம் வராதுப்பா!’ என்று ரைமிங் ரிவிட் அடிப்பார்கள்.

கொஞ்சம் ஜலதோஷம் பிடிச்சிட்டாப் போச்சு. ‘இந்தச் சளி பிடிச்சா சனிப் பிடிச்ச மாதிரி...விடவே மாட்டேங்குதுப்பா!’ என்பார்கள்.

‘இன்னிக்கு என்ன சமையல்?’னு கேளுங்க... ‘கத்திரிக்கா அவியல், கொத்தமல்லி துவையல், உருளைக்கிழங்கு வறுவல், மாங்காய் மசியல்!’ என ரைமிங்கைத் தோண்டித் துருவித் தருவார்கள்.

‘சென்னைல இவ்ளோ நாள் இருக்கியே, ஏடிஎம்ல பணம்கூட எடுக்கத் தெரியாதா?’னு கோபமா கேட்டாப் போச்சு. ‘பணம் கொடுக்குற மனம் மட்டும் இருந்தா போதும்னு பணத்தைப் பிணமா நினைச்சேன்!’னு ஃபீலிங் பீப்பி வாசிப்பாங்க.

கெட்ட பசங்க சார்!

கேப் கிடைச்சா கிடா வெட்டுதான்....’பெட்ரோல் விலை ஹைக் ஆனதுல இருந்து பெற்றோர் நிலைமை எதையுமே லைக் பண்ண முடியாத அளவுக்குப் போச்சு!’னு கப்பித்தனமா ரைமிங் சொல்லிப் பிராண்டுவாங்க!

அவங்க கோட் பண்ணிப் பேசுற கேரக்டர்கள் பெயர்கள்கூட ரைமிங்காதான் வரும். ‘வில்லிவாக்கம் வினோத், அயனாவரம் அசோக், கோபாலபுரம் கோபால்!’

ரைமிங் ரத்தத்தில் ஊறியதற்கு சாட்சியாய் அனிச்சையாகவும் பேசித் தொலைப்பார்கள். எப்படின்னா இப்படித்தான்: ‘பீச்சாங்கைப் பக்கம் போனா பீச் வரும்’!

அவ்வளவு ஏன் ஃபேஸ்புக்ல போடுற ஸ்டேட்டஸ்கூட ரைமிங்காதான் இருக்கும் பாஸ். ‘வெள்ளம் இன்னும் வடியல. அதனால எனக்கு இன்னும் விடியல!’ ஃபீலிங் ஹீலிங்!

முடியல!

- சரண்