Published:Updated:

ஆடை பாதி, மூளை பாதி!

ஆடை பாதி, மூளை பாதி!

பெரும்பாலான மக்களுக்கு டிரெண்டியா டிரெஸ் போடணும்கிற ஆசை இருக்கும். இல்லைனா சமீபத்துல ஹிட் அடிச்ச படங்களில் வரும் டிரெஸ் மாதிரியோ, நமக்கு பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் மாதிரியோ டிரெஸ் போடணும்கிற ஆசை கண்டிப்பா இருக்கும். சில அரைவேக்காடுகள் ‘அதே மாதிரி டிரெஸ் பண்றேன்’ பேர்வழினு சில கிறுக்குத்தனங்கள் பண்ணும். எப்படி? இப்படி!

ஆடை பாதி, மூளை பாதி!
ஆடை பாதி, மூளை பாதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் சின்னப்பையனா இருக்கிறப்போ ‘தாஜ்மஹால்’னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படத்தோட ஹீரோ மனோஜ், பேன்ட் பெல்ட்டுக்குப் பதிலா சடம்புக் கயிறு கட்டியிருப்பாப்ல. வீட்ல பெல்ட் இருந்தும் ரொம்ப நாளா சடம்புக் கயிறைத் தேடிட்டு இருந்தேன், எங்கேயுமே கிடைக்கல. ஆனால், அப்பவும் விடாம இடுப்புல கொச்சக் கயிறைக் கட்டி, காயம் வந்து காய்ப்பு காய்ச்சதுதான் மிச்சம்.

ஆடை பாதி, மூளை பாதி!

அப்புறம் ஒரு நாள் டி.வி-யில் ரஜினி படம் பார்த்தேன். ரஜினி அந்தப் படத்தில் பாதி முழங்கால் நீளத்துக்கு லெதர் ஷூ போட்டிருப்பார். அதே மாதிரி ஷூவுக்கு நான் எங்கே போக, அப்போதான் கல்லீரல் கச்சிதமா வேலை செஞ்சுச்சு. பேன்ட்டுக்கு மேல சாக்ஸைப் போட்டு மேட்ச் பண்ணிட்டோம்ல. இந்தச் சம்பவம் நடந்து பத்து வருஷம் ஆச்சு, இன்னமும் அதைச் சொல்லிக் காட்டிதான் வீட்டுல அசிங்கப்படுத்துறாய்ங்க.

ஆடை பாதி, மூளை பாதி!

‘ஆதவன்’ படம் வந்த நேரம், சூர்யாவோட கட்டம் போட்ட பேன்ட்தான் அப்போ டிரெண்டு. கடை கடையா ஏறி இறங்கியும் அந்த பேன்ட் கிடைக்கவே இல்லை. பின்னர், ஒருநாள் குப்புற படுத்துத் தூங்கிட்டு இருக்கும்போது கல்லீரல் மறுபடியும் கச்சிதமா வேலை செய்ய காலையில எழுந்திரிச்ச உடனே போத்துன போர்வையோட டெய்லர் கடைக்குப் போனேன். அளவு கொடுத்தேன். அந்த போர்வை பேன்ட்டா மாறுச்சு. யூசுப் பாய் பேன்ட்டை ஒரு சாண் கம்மி பண்ணுங்க...

ஆடை பாதி, மூளை பாதி!

‘திருப்பதி’ படத்துல அஜித் எலக்ட்ரீஷியனா வருவார். படத்தில் அவர் போட்டிருக்கும் டிரெஸ்ஸில் ஆங்காங்கே பெல்ட்டுகளாகத் தொங்கும். உடனே வீட்டில் இருந்த பெல்ட்டைத் துண்டு துண்டா அறுத்து அம்மாகிட்ட அடி வாங்கினதுதான் மிச்சம். இது சரிபட்டு வராதுனு காசு சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். ஒரு மாசம் கழிச்சு கடைக்குப் போய் நாலு நாய் பெல்ட் வாங்கினேன், அங்கங்க மாட்டினேன். மேட்டர் ஓவர்.

ஆடை பாதி, மூளை பாதி!

இடையில் கொஞ்சநாள் இந்த மாதிரி கிறுக்குத்தனங்களைப் பண்ணாம இருந்தேன். ஆனால், ‘மாரி’ படம் பார்த்ததில் இருந்து கல்லீரல் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிச்சுது. படம் முழுக்க பூ போட்ட சட்டையா தனுஷ் போட்டு வருவார். உடனே, எனக்கு வீட்டில் இருக்கும் சேலைகள்தான் ஞாபகம் வந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாகக் கடையிலேயே பூ போட்ட சொக்காய் விற்றதால் வாங்கிட்டேன். சேலை தப்பிச்சுடுச்சு. இல்லாட்டி செஞ்சுருப்பேன்!

-ப.சூரியராஜ்