Published:Updated:

ஓ.பி.எஸ்ஸின் கஷ்டம்!

ஓ.பி.எஸ்ஸின் கஷ்டம்!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸாக  இருப்பதன் கஷ்டம் ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் தெரியும்! அது எப்படினு சொல்றேன்!

ஓ.பி.எஸ்ஸின் கஷ்டம்!

•  கார் சக்கரத்துக்கு வணக்கம் வைக்கத் தெரிஞ்சிருக்க வேண்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  ஹெலிகாப்டர் கண்ணிலிருந்து மறையும்வரை வானத்தைப் பார்த்து கும்பிடத் தெரிஞ்சிருக்க வேண்டும்!

•  நாற்காலியே இல்லாமல் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்ற ‘உக்ர நாற்காலிஆசனா’ செய்யத் தெரிந்திருக்க வேண்டும்!

ஓ.பி.எஸ்ஸின் கஷ்டம்!

•  ரைமிங் வார்த்தைகளை மனப்பாடம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். ‘கருத்து கந்தசாமி’, ‘அணையா விளக்கு அம்மா’, ‘தரணி போற்றும் தன்னிகரற்ற தங்கத் தாரகை’ என பன்ச் பேசத் தெரிந்திருக்க வேண்டும்!

•  எப்போதும் சிரித்த முகத்தோடு ‘லாஃபிங் புத்தா’ போல் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அவரைப்போல ‘எமோஷன் கன்ட்ரோல் டெக்னாலஜி’ தெரிந்திருக்க வேண்டும்!  

•  முதல்வர் நாற்காலியில் இருந்தாலும் வெளியே சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு வளராத தாடியை தாறுமாறாக வளர்த்தும் ஃபீல் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும்!

•  கமல்ஹாசன் ஸ்டேட்மென்ட்களுக்கெல்லாம் பதில் சொல்லி மீண்டும் பதில் வாங்கி அதைப் படித்து தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் வராத உடல்நிலையைக் கொண்டிருக்க வேண்டும்!

•  அழுதுகொண்டே பதவி ஏற்று, சிரித்துக்கொண்டே ராஜினாமா செய்யும் ஜென் நிலையில் எப்போதும் இருக்க வேண்டும்!

ஓ.பி.எஸ்ஸின் கஷ்டம்!

•  அம்மாவுக்காக விரதம் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதை அவர் வாய் பேசாமலேயே உடல் மொழியில் வெளியே சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்!

- ஆர்.சரண்