Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

மூன்றே மூன்று வார்த்தைகளில் 2015ஆம் ஆண்டை விவரிக்க வேண்டும் என்றால். எப்படி விவரிப்பீர்கள்?

பதில் சொல்லுங்க பாஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரவணகுமார்: பீஃப், ஸ்டிக்கர், பீப்

சங்கர்: பாகுபலி, புலி, வேதாளம்

அனிஷ்குமார்: வந்தது (மழை), புரிந்தது (மனிதநேயம்), வென்றது (ஒற்றுமை)

ரியாஸ்: பிரதமர் வெளிநாட்டில், முதல்வர் கொடநாட்டில், மக்கள் நடுரோட்டில்

பன்னீர்: குவாட்டரு, வாட்டரு, ஸ்டிக்கரு

மரியா: நமக்குத் தண்ணில கண்டம்

ஒருவேளை தப்பித் தவறி ரஜினி அரசியலுக்கு வந்தால் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்?

பதில் சொல்லுங்க பாஸ்!

உதயகுமார்: இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும் கட்சி

சிலம்பு: அகில உலக சூப்பர் ஸ்டார் முன்னேற்றக் கழகம்

ஹரி: ஒருவன் ஒருவன் முதலாளி கட்சி

டேனியல்: இது எப்படி இருக்கு கட்சி

கார்த்திகேயன்: தப்பித் தவறி கட்சி

நீங்கள் கேட்டதிலேயே ரொம்பக் குழப்பமான கேள்வி எது?

பதில் சொல்லுங்க பாஸ்!

அனிதா: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான். அவன் யார்?

இசாக்: நம்மைப் படைத்தது கடவுள் எனில், கடவுளைப் படைத்தது யார்?

காகா: அ.தி.மு.கவின் அடுத்த வாரிசு யார்?

சிவபிரபு: குரங்கில் இருந்து மனுஷன் வந்தான்னா, குரங்கு இன்னும் ஏன் குரங்காவே இருக்கு?

சரவணன்: ‘சின்னக்கவுண்டர்’ படத்தில் செந்தில் கேட்ட எல்லா கேள்வியுமே தான்.

பிரகாஷ்: மீனுக்கு கால் இருக்குதா இல்லையா?

சுபாஷ்: நீங்கள் கேட்டதிலேயே ரொம்ப குழப்பமான கேள்வி எது?

இந்த ஆண்டில் (2015) நீங்கள் விழுந்து விழுந்து சிரித்த சம்பவம் எது?

பதில் சொல்லுங்க பாஸ்!

முருகவேல்: அம்மா ஆணைக்கிணங்க மழை பெய்தது என்று சேலம் கலெக்டர் சொன்னது,

மனோ: சுப்பிரமணியசாமி தாலி கட்டப் போன சம்பவம்.

தமிழன்: முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்கும் போது நடந்த நிகழ்ச்சிகள்.

திலீபன்: ரமணனை மாணவர்கள் தெய்வமாக கொண்டாடியதுதான்.

தனிஒருவன்: ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம்.

சுரேஷ்: “இது அட்டகாசமான புலி, அட்ராக் பண்ற புலி, அசத்தலான புலி”

யாசர்: தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க!

அசார்: கேப்டனின் யோகாசனம்.

வினோத்: டாஸ்மாக்குக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டதைப் பார்த்து.

ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரையைக் கேட்டபோது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன?

பதில் சொல்லுங்க பாஸ்!

பாலமுருகன்: வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போன வாரம் அரசு அறிவித்த செய்திதான் ஞாபகம் வந்துச்சு...

திலீபன்: இதே மாதிரி கலைஞரும் தன் பதில் அறிக்கையை வாட்ஸ்-அப்பில் ரிலீஸ் பண்ணிடுவாரோனு தோணுச்சு.

இப்ராகிம்: தேர்தல் நெருங்கிடுச்சோனு தோணுச்சு.

ராஜ்: அம்மா பேசுனா மேசையைத் தட்டுற சத்தம் கேக்குமே... இது அம்மா இல்லையோனு தோணுச்சு...

அன்பு: ஆத்திரங்கள் வருது மக்களே!