Published:Updated:

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

த்திரிகையாளர் ஆர்.நட்ராஜுக்குப் பதில் ஜெயலலிதா முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜைக் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டு பிறகு மீண்டும் சேர்த்தார்.  வார்டனா இருந்தா அடிப்போம் என ‘திமிரு’ படத்தில் அடிவாங்குவாரே வடிவேலு, அதேபோல வேறு யாரெல்லாம் ஆபத்தில் இருக்கிறார்கள் என சும்மா பார்ப்போமா?

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரனுக்கு சின்னைய்யா என்ற செல்லப்பெயர் இப்போதும் உண்டு. ‘சின்னையா சரியில்லை!’ என போயஸ் வீட்டுக்குள் யாராச்சும் கிசுகிசுத்தால் கால்நடைத்துறை அமைச்சர் டிகேஎம் சின்னையாவின் தலை உருளும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  ‘ஆர்.வி.உதயகுமார் கமலை வைத்து படம் எடுத்தார்’ என்ற அரதப்பழசான செய்திகூட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பதவிக்கு வேட்டு வைத்துவிடும்!

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  ‘கே டிவியில் ரமணா படம் சரி இல்லை’ என்பதை ஸ்பெல்லிங்  மிஸ்டேக்கோடு ‘பி.வி ரமணா சரியில்லை’  என்று காதில் விழுந்து தொலைத்தால் பால்வளத்துறை புகழ் ரமணா காலி!

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  ‘அம்மனை வழிபடாதீர்கள்’ என திராவிடர் கழக வீரமணி எங்காவது பேசினால் கே.சி.வீரமணிக்கு ஆப்பு விழ வாய்ப்பு இருக்கிறது.  

•  ‘திருப்பதி வெங்கடாச்சலம் ரொம்ப பணக்காரர் ஆகிவிட்டார்’  என ஏழுமலையானை நொந்து கொண்டால் அது தவறுதலாக சுற்றுச்சூழல் அமைச்சர் எ.ன்டி.வெங்கடாச்சலத்தின் பதவிக்கு உலை வைக்கும் வாய்ப்பிருக்கிறது.

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  ‘ஜெயசுதா முன்னமாதிரி ஆக்டிவா இல்லை!’ என சினிமா நடிகை பத்தி தோட்டத்துக்குள் யாரேனும் கிசுகிசுத்தால் போளூர் எம்.எல்.ஏ ஜெயசுதா பதவி அம்பேல்!

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  டாக்டர் விஜய் என்ற பெயரே போதும் வேலூர் எம்.எல்.ஏ விஜய்யைத் தெறிக்கவிட..!

•  ‘பொன்னுசாமி ஹோட்டலில் ஆர்டர் லேட்டாக எடுப்பார்கள்!’ என்ற கிசுகிசு தாராபுரம் எம்.எல்.ஏ பொன்னுச்சாமியைக் காலி செய்துவிடும்!

அம்மா கட்சியில் இப்படியும் நடக்கும்!

•  ‘தோப்புல களை எடுக்கணும்!’ என்ற அட்வைஸ்கூட உருமாறி பெருந்துறை எம்.எல்.ஏ  ‘தோப்பு’ வெங்கடாசலத்தைக் களை எடுக்க வைத்து விடும்!

•  இருக்குற பெயர் குழப்பம் போதாதுன்னு நன்னிலம் எம்.எல்.ஏ காமராஜ்- வேதாரண்யம் எம்.எல்.ஏ  காமராஜ் இருவருமே பக்கத்து பக்கத்தில் இருப்பதால் ரெண்டு பேருமே வாலைச்சுருட்டி இருத்தல் நலம்!

•  அதேபோல பக்கத்துப்பக்கத்தில் இருக்கும் சிவகங்கை (சி.பி.ஐ) எம்.எல்.ஏ குணசேகரனாலேயே  மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ குணசேகரனின் பதவிக்கு வேட்டு வெடிக்க அனேக வாய்ப்புகள் உண்டு!

•  ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் அந்தப் படத்துக்குப்பிறகு சரியான படங்களில் நடிக்கவில்லை. அவர் ‘சொதப்புகிறார்’ என ரிப்போர்ட் கொடுத்தால் போலீஸ் டிஜிபி நட்ராஜின் உறுப்பினர் அட்டை மீண்டும் பறிக்கப்பட்டுவிடும்.

ஏன்னா, வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ். நடந்தாலும் நடக்கும்!

-ஆர்.சரண்