Published:Updated:

கொண்டையை மறைக்கலையே!

கொண்டையை மறைக்கலையே!

மிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிவாஜி முதல் சித்தார்த் வரை பல பேர் கெட்-அப் சேஞ்ச் செய்து நடித்திருக்கிறார்கள். அப்படி மெனக்கெட்டு போடப்படும் அந்த கெட்-அப்புகள் எல்லா நடிகர்களுக்கும் பொருந்துதானு பார்த்தா கண்டிப்பா கிடையாது. அந்த சேஞ்ச், சீரியஸான கேரக்டரைக்கூட சில நேரம் காமெடியாக்கி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

கொண்டையை மறைக்கலையே!

இந்த லிஸ்டில் முதல் ஆள் நம்ம இளையதளபதி விஜய்ணாதான். அவரே எப்போதாவதுதான் கெட்-அப் சேஞ்ச் பண்ணி நடிக்கிறார். அது உங்களுக்கு பொறுக்கலையானு கோவப்படாதீங்க பாஸ். ‘சுறா’ என்கிற மரண காவியத்தில் வில்லன் தேவ் கில் ஆட்களிடம் இருந்து சரக்குக் கப்பலைக் கடத்த பள்ளிக்கூட மாறுவேடப் போட்டியைப் போல தாடி மீசையெல்லாம் ஒட்டிக்கொண்டு வருவார் விஜய். அவரைக் கப்பல் கேப்டனா அந்த சிங் கெட்-அப்பில் ஒட்டுதாடியுடன் பார்த்தும் நாம் விழுந்து விழுந்து சிரித்தோம். அதே போல ‘ஃப்ரெண்ட்ஸ்’ கிளைமாக்ஸ் காட்சியில் சித்தபிரமை பிடித்தவரைப் போல் ‘சேது’ கெட்-அப்பில் உட்கார்ந்திருக்கும் அவரை இன்றுவரை கலாய்த்துத் தள்ளுகிறோம். இங்கே ‘புலி’யையும் சேர்த்து எழுதணும்னா இடம் பத்தாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கொண்டையை மறைக்கலையே!

அஜித் ‘சிட்டிசன்’ படத்தில் போட்ட ஒரு கெட்-அப் சேஞ்ச் கொடூர ரகம். வக்கீல், மீனவன், ட்ராஃபிக் போலீஸ் போன்ற கெட்-அப்புகளையெல்லாம் சரியாகப் போட்டவர் குளித்தலை எம்.எல்.ஏ தணிகாசலம் கேரக்டரில் தடுமாறி குப்புற விழுந்துவிட்டார். போலீஸ் கமிஷனர் தேவனைக் கடத்த வரும் அவரைக்  குண்டான அரசியல்வாதியாகக் காட்ட அவருடைய கன்னங்களில் ஃபெவிகால் தடவி மேக்-அப் போட்டிருப்பாங்க. அது மட்டும் தனி கலர்ல தெரியும். அப்போ அவரைப் பார்க்க அப்படியே பெரிய சைஸ் மதன்பாப் போலவே  இருப்பார். ‘வீரம்’ படத்தில் நரைத்த தலையோட தமன்னாவுடன் ஆடிய ‘செல்லமே செல்லமே என்ன ஆச்சு’ பாட்டுக்கு உலகமே சிரிச்சுதே.

கொண்டையை மறைக்கலையே!

அர்ஜுன் நடித்த ‘பரசுராம்’ படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ராகுல் தேவ்வை அர்ஜுனே கொன்றுவிடுவார். கடைசியில் அவரே பாகிஸ்தான் தீவிரவாதியாக கெட்-அப் சேஞ்ச் பண்ணி கோர்ட்டில் போய் சரணடைவார். அப்படி என்ன ஸ்பெஷலா கெட்-அப் சேஞ்ச்  பண்ணிருக்கார்னு  பார்த்தா, ஒரு மங்கி குல்லாவை  மாட்டிக்கொண்டு நீளமான ஒரு பிளாஸ்டிக் மூக்கை அவர் மூக்கு மேல ஒட்டிக்கொண்டு வந்திருப்பார். அந்த பிளாஸ்டிக் மூக்கு அவருடைய கலருக்குக் கொஞ்சம்கூட செட்டாகாது. சிம்பிளா சொன்னா ‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்தில் கவுண்டர் கிளிமூக்கு அரக்கனாக பறந்து பறந்து வருவாரே... அப்படியே இருக்கும். பாகிஸ்தான்ல இருக்கிற எல்லோருக்கும் மூக்கு நீளமாதான் இருக்கும்னு நம்ம ஆக்‌ஷன் கிங்குக்கு யாரோ தப்பாச் சொல்லிருக்காங்க.

கொண்டையை மறைக்கலையே!

நம்ம ஹீரோயின்ஸ் மட்டும் என்ன சும்மாவா...

கொண்டையை மறைக்கலையே!

‘லூட்டி’ படத்தில் சத்தியராஜுக்கு ஜோடியா நடிச்ச ரோஜா சத்தியராஜ் நல்லவரா, கெட்டவரான்னு கண்டுபிடிக்க அவர் சொந்த வீட்டுக்குள்ளேயே ஆம்பள மாதிரி கெட்-அப்ல வருவார். அது ரோஜாதான்னு படம் முடியும்போதுதான் சத்தியராஜும் வடிவேலுவும் கண்டுபிடிப்பாங்களாம். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் தன்னுடைய அப்பா மணிவண்ணனிடமே கொள்ளையடிக்க வரும் ரம்பா சிம்பிளா ஒரு கைலி ஒரு ஒட்டு தாடியோடு வருவார். முடியல்ல!

-ஜுல்ஃபி