Published:Updated:

அது ஒரு டார்ச்சர் காலம்!

அது ஒரு டார்ச்சர் காலம்!

நாம குழந்தையா இருக்கும்போது சில டார்ச்சர்களை அனுபவிச்சுருப்போம். அதை வெளியே சொல்ல முடியாம தவிச்சுருப்போம். புரியலையா? படிங்கோ...

அது ஒரு டார்ச்சர் காலம்!

•  அம்மா பாடுற தாலாட்டு காதை அடைக்குதுனு கத்துனோம்னா, தூக்கம் வராமத்தான் அழுவுறான்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு தாலாட்டைத் தொடர ஆரம்பிச்சுடுவாங்க. அய்யாங்ங்ங்ங்ங்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  வளர்ந்து கொஞ்சமா வாய் பேச ஆரம்பிச்சதுமே, ‘எங்கே அம்மா சொல்லு... அப்பா சொல்லு’னு சொந்தக்காரங்ககிட்ட சொல்லச் சொல்லி சோதனையை உண்டாக்குவாங்க. நாம ‘சரஸ்வதி சபதம்’ சிவாஜி மாதிரி தத்தித் தத்திப் பேசுறதைக் கேட்டு என்னா ஒரு ஆனந்தம் அவங்களுக்கெல்லாம். அ... அம்மா!

•  ஏதோ ஒரு குத்துப்பாட்டுக்கு தப்பித் தவறி டான்ஸ் ஆடி தொலைச்சிடுவோம். அந்தப் பாட்டை ரெக்கார்டு பண்ணி வெச்சுக்கிட்டு, போர் அடிச்சா பாட்டைப் போட்டு ஆடச் சொல்லி ஆத்திரத்தைக் கிளப்புவாங்க. கொஞ்சம் கேப் விடுங்கய்யா டயர்டா இருக்கு!

•  இனிப்பா வாங்கி வீட்ல வைக்கிறது, அப்புறம் அதைச் சாப்பிட்டா, பூச்சி கடிக்கும்னு பயமுறுத்துறது. உங்க வாய்க்கு நேரா வான்கோழி பிரியாணி இருந்தும், அதை சாப்பிடக் கூடாதுனு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? வெவ்வெவ்வே!

•  பைக்குல போகும்போது பெட்ரோல் டேங்க் மேல ஹெல்மெட் மாதிரி உட்கார வெச்சிடுறது, அப்புறம் ரோடு மறைக்குதுனு குனிஞ்சுட்டே வரச் சொல்றது... எவ்ளோதான் நானும் கழுத்து வலிக்காத மாதிரியே நடிக்கிறது!

அது ஒரு டார்ச்சர் காலம்!

•  அப்புறமா, பஸ்ல போகும்போது ‘பையனுக்கு மூணு வயசுதான் ஆகுது’னு டிக்கெட் காசை மிச்சம் பண்ண கண்டக்டர்கிட்ட பொய் சொல்றது. எங்ககிட்டயும் ‘வயசு கேட்டா மூணுனு சொல்லணும். சரியா?’னு பொய் சொல்லச் சொல்லி டார்ச்சர் பண்றது. அஞ்சிலேயே தப்பா வளைக்கிறாங்க!

•  வெளியே போய் விளையாண்டா அடிபடும்னு சொல்றது, சரின்னு, வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து வீடியோ கேம் விளையாண்டா கண்ணுக்கு நல்லதில்லைனு மிரட்டுறது. அப்புறம் நாங்க என்னத்தைதான் விளையாடுறது?

•  பிறந்ததும் ‘குட்டீஸ் சுட்டீஸ்’ல பேசுற அளவுக்கு தேத்தி விடுறது, வளர்ந்ததும் ஏதாவது பாட்டுப் பாடுற நிகழ்ச்சியில் கலந்துக்கிறதுக்காக பாட்டுப் பயிற்சி கொடுக்கிறது. ஆனா, டி.வி பார்த்தால் படிப்பு கெடும்னு கேபிளைப் பிடுங்கி விடுறது, ஏன் இதெல்லாம்?

வளர்ந்ததும்தான் தெரிஞ்சுது. இதுக்குப் பெயர் டார்ச்சர் இல்லை, நம் அம்மா, அப்பாக்களோட நேச்சர்னு!

-ப.சூரியராஜ்