கல்யாண் ஜூவல்லர்ஸுக்குள் போனால் அம்மா பொண்ணா மாறுறதும் பொண்ணு அம்மாவா மாறுறதும் சகஜம்தான். இதை வாய்ப்பாக வைத்து யார் யாரை எப்படி எப்படி மாற்றலாம் பாஸ்..? வாங்க சொல்றேன்.

• ஓ.பி.எஸ்ஸை அம்மாவாகவும் அம்மாவை ஓ.பி.எஸ்ஸாகவும் மாற்றலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• கேப்டனை பாகிஸ்தான் தீவிரவாதியாகவும் பாகிஸ்தான் தீவிரவாதியை அர்ஜூனாகவும் மாற்றலாம்.
• தலயை தளபதியாகவும் தளபதியை தலயாகவும் மாற்றலாம்.
• எம்.எஸ்.பாஸ்கரை ரஜினியாகவும் அல்வா வாசுவை கமலாகவும் மாற்றலாம்.
• எஸ்.ஏ.சியை அமிதாப்பச்சனாகவும் அமிதாப்பச்சனை நிரந்தரமாக சிவாஜியாகவும் மாற்றலாம்.
• விஷாலை சரத்குமாராகவும் சரத்குமாரை அப்துல்கலாமாகவும் மாற்றலாம்.

• சிம்புவை அனிருத்தாகவும் அனிருத்தை அர்னால்டாகவும் மாற்றலாம்.
• ஸ்டாலினை அழகிரியாகவும் அழகிரியைக் கலைஞராகவும் மாற்றலாம்.
• பிரபுதேவாவை விக்னேஷ் சிவனாகவும் விக்னேஷ் சிவனை நயன்தாராவாகவும் மாற்றலாம்.
• மிஷ்கினை டகேஷி கிட்டானோவாகவும் டகேஷி கிட்டானோவை தங்கர் பச்சானாகவும் மாற்றலாம்.
• சந்தானத்தைக் கவுண்டமணியாகவும் கவுண்டமணியை செந்திலாகவும் மாற்றலாம்.
-ஆர்.சரண்