Published:Updated:

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?
பிரீமியம் ஸ்டோரி
ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

Published:Updated:
ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?
பிரீமியம் ஸ்டோரி
ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

மிழ் சினிமா வில்லன்களுக்கு வைக்கப்படும் வித்தியாசமான காமெடி பெயர்கள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

• தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரவி என்ற பெயரில் ஏரியாவுக்கு ஒரு வில்லன் இருப்பார். உதாரணத்துக்கு சென்னை சம்பந்தப்பட்ட படமென்றால் பெசன்ட் நகர் ரவி, பான்பராக் ரவி, மதுரை பக்கம் என்றால் சிம்மக்கல் ரவி, கோரிப்பாளையம் ரவி. திருச்சி என்றால் மலைக்கோட்டை ரவி, தில்லை நகர் ரவின்னு, ஏகப்பட்ட பேர் இருப்பாங்க. இந்த ரவிகளை இடைவேளையில் ஹீரோ போட்டுத்தள்ள காசி மேடு கஜான்னு மெயின் வில்லன் அப்போ இன்ட்ரோ கொடுப்பார். ட்விஸ்ட்டாமாம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• தம்பா, இப்போ பல படங்களில் வில்லன்களுக்கு இந்தப் பெயர் வைக்கப்படுது. இதுக்கு ஒரே தகுதி நீளமா முடி இருக்கணும், அவ்ளோதான்.

• தோத்தாத்ரி, இதுவும் வில்லன் பேருதான். கடைசில ஹீரோக்கிட்ட அடி வாங்கி, மிதிவாங்கி, பாலா படமா இருந்தா கழுத்துல கடி வாங்கி தோத்துப் போறதால ஒருவேளை தோத்தாத்திரின்னு வைக்கிறாங்களோ என்னவோ?

• கோரக், இந்தப் பெயரைக் கேட்டதும் ‘அம்மன்’ பட வில்லன் ராமி சண்டான்னு இந்நேரம் உங்க கற்பனையில செய்வினை வைக்க ஆரம்பிச்சிருப்பாரே... அவ்வளவு கொடூரமான பெயர் பாஸ் இது!

• தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட படம் என்றால் வாசிம்கான், அக்தர் பாபா, ரசூல் அக்தர். அன்வர், மெளலானா மசூத் ஆஸாத் இதுல ஏதாவது ஒரு பெயரை வெச்சு ஒரு கையில துப்பாக்கியையும் இன்னொரு கையில இந்திய மேப்பையும் கொடுத்து தீவிரவாதியாத் திரிய விடுவாங்க!

• மல்லி, அட பூ இல்லை பாஸ். ‘காதலன்’ படத்தில் வில்லன் ரகுவரன் பெயர். முட்டிக்கால் வரை ஓவர் கோட் போட்டுக்கிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கே பாம் வெச்ச ரகுவரனுக்குதான் மென்மையா மல்லின்னு பெயர் வெச்சிருப்பார் ஷங்கர்.  

• சமீபமா வெளிநாட்டு வில்லன்கள் அதிகரிச்சிட்டாங்க ‘பூலோகம்’ ஸ்டீவ் ஜார்ஜ், ‘சிங்கம்’ டேனி, ‘பேராண்மை’ ஆண்டர்சன். இந்த வில்லன்களுக்கு அவங்க ஹைட் வெயிட்டுக்கு ஏத்த மாதிரி ஸ்டைலா பெயர் வைக்கிறாங்க. என்னதான் அவங்க முரட்டு பாடியா இருந்தாலும் மூணே நிமிஷத்துல மண்ணைக் கவ்வ வெச்சிடுவாங்க நம்ம ஊர் ஹீரோஸ்.

ஏன் இப்படிப் பேர் வாங்குறாங்க?

• பாபு ஆண்டனிக்கு ‘ஏர்போர்ட்’ படத்தில் டேனியல்னு பெயர் வெச்சிருப்பாங்க. பத்துப் பதினைஞ்சு ஜீப் முன்னேயும் பின்னேயும் வர, நடுவுல மினிஸ்டர் பாதுகாப்பா வரும் வழியில் ஏதாவது ஒரு பில்டிங் மேலே இருந்து பிரிச்சுப்போட்டுக் கொண்டு வந்த ராக்கெட் லாஞ்சரை அசெம்பிள் பண்ணி மினிஸ்டரைப் போட்டுத்தள்ள குறி பார்த்து உட்காந்திருப்பார் பாபு ஆண்டனி. ஹைடெக் கிரிமினல்!

• வீரபத்திரன், வால்பாறை வரதன், ஒத்தை கண்ணன் இந்த மாதிரி பெயர் வைத்தால் இவங்கள்லாம் காட்டுக்குள்ளே வாழும் வில்லன்கள்னு அர்த்தம். சந்தன மரங்களைக் கடத்தி அரசாங்கத்தை கலங்கடிப்பது, போலீஸ் வந்தா, பாறைகளுக்குள் ஒளிஞ்சு ஓடுறது, தேவைப்பட்டா கண்ணிவெடிகளையும் வைக்கிறதுனு டெரரான ஆட்கள் பாஸ்!

• இப்படி வில்லன்களுக்கு எல்லாம் முரட்டுத்தனமாவும் காமெடியாவும் பெயர் வெச்சிட்டு ஹரோக்களுக்கு மட்டும் கார்த்திக், விஜய், சிவான்னு பெயர் வைக்கும் இயக்குநர்களை மென்மையாகக் கண்டிக்கிறேன்!
 

-ஜுல்ஃபி