Published:Updated:

ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

Published:Updated:
ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

னு, பூஜா, பிரியா, கவிதா இதுல ஏதாவது ஒண்ணுதான் ஐ.டி பெயரா இருக்கும்.

ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

• அந்த ஐ.டி-க்களில் இருந்து நமக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ப்ரொஃபைல் பிக்சர்களில் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, காஜல் அகர்வால் படங்கள் இருக்கும்.

• ஃப்ரெண்ட்ஸ் 4,500 பேருக்கு மேலேயும் மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் நூற்றுக்கணக்கைத் தாண்டும்.

• பிறந்த வருடம் 1993. ஃபீமேல், இன்ட்ரஸ்டட் இன் மென், பிரபல லேடீஸ் காலேஜ் பெயர் போன்ற எல்லா விபரங்களும் நம்புவது மாதிரி பக்காவா இருக்கும்.

• நம்முடைய மெசேஜுக்கு உடனுக்குடன் ரிப்ளை வரும். நம்பர் கேட்டால், நம்பர்லாம் வேணாமே... சாட்டிங்கிலேயே பேசலாமேனு பதில் வரும்.

• ரோஜாப்பூ, மெஹந்தி வெச்ச கை, தாஜ்மஹால், இந்த மாதிரி போட்டோக்கள் அடிக்கடி அப்லோட் ஆகும். நமக்கும் டேக் செய்யப்படும். அவை அசால்ட்டா 400 லைக்ஸ்களைத் தாண்டும். எல்லாப் பயலுங்களும் நைஸ் தோழி, ஆஸம்னு பராட்டுவாங்க.

• இந்த போட்டோவில் நான் யாருனு கரெக்டா சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்னு கூகுள்ல இருந்து எடுத்த ஒரு குரூப் போட்டோவைப் போட்டு நமக்கு டெஸ்ட் வைக்கப்படும்.

• ‘சாப்புட்டியா செல்லம்’னு பெத்த தாயைவிட நம்மைப் பற்றி அதிகம் கவலைப்படுவது.

• இப்படி கொஞ்ச நாளைக்கு பயங்கர ஆக்டிவா இருக்கும் இந்த ஐ.டி-க்கள், அப்புறம் லோ வோல்டேஜ் மாதிரி அப்பப்போ மட்டும் பச்சை லைட் எரியும்!

-ஜுல்ஃபி