Published:Updated:

டுர்ர்ரூம்ம்ம்..!

டுர்ர்ரூம்ம்ம்..!
பிரீமியம் ஸ்டோரி
டுர்ர்ரூம்ம்ம்..!

டுர்ர்ரூம்ம்ம்..!

டுர்ர்ரூம்ம்ம்..!

டுர்ர்ரூம்ம்ம்..!

Published:Updated:
டுர்ர்ரூம்ம்ம்..!
பிரீமியம் ஸ்டோரி
டுர்ர்ரூம்ம்ம்..!

பைக்கை நம்ம பயலுக தாறுமாறா ஓட்டுறதுக்கு அதிமுக்கியக் காரணம் விளம்பரங்கள்தான். அப்படி சில ஆக்ரோஷ விளம்பரங்கள்...

டுர்ர்ரூம்ம்ம்..!

• ‘இது ஓடாது. பறக்கும்’னு தெறிக்க விடுற மாதிரி விளம்பரம் விடுறது. # ஏம்பா, நாங்க என்ன விமானம் வாங்கவா வந்தோம்?

• கும்பலா எருமையா நிற்கிறப்போ, நம்ம வண்டி போய் நின்னா எல்லா எருமையும் ஒரு மாதிரி லுக்கு விட்டுட்டு பெரிய எருமை வந்து இருக்குனு ஒதுங்கிப் போகுமாம். # உருவ கேலி தவறு நண்பா!

• பைக்லேயே உட்கார்ந்து பேன்ட், சட்டை எல்லாம் போடலாமாம். ஷூகூட மாட்டலாமாம். அப்புறம் கேர்ள் ஃப்ரெண்ட் பிக்-அப் பண்ணிட்டு, அவங்களும் ஷூவை வண்டியில உட்கார்ந்தே போடலாமாம். # இதென்ன பைக்கா இல்லை, ட்ரெஸ்ஸிங் ரூமா?

• ரோட்டுல விளையாடுங்கனு ஒரு பைக் விளம்பரம் வருது. # ட்ராஃபிக் போலீஸ் சொந்தக்காரர் இல்லீங்க!

• ‘டெஃபனைட்லி மேல்’னு போட்டு இருக்கிற பைக் ஓட்டுற பாதிப் பேர் ரோட்டுக்குக் கீழதான் கிடக்கிறாங்க!

• விளம்பரத்துல எல்லாம் ஊரே திரும்பிப் பார்க்கிற மாதிரிதான் பைக் ஓட்டுறாங்க. நம்ம ஓட்டுறப்போ ஊரே பார்க்கிறது இல்லை. குப்புற விழுந்து கிடக்கிற அப்போ மட்டும்தான்...!

-கார்த்தி