Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

Published:Updated:
பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

பெண் - ஒரே வரியில் நச்சுனு கவிதை மாதிரி ஒரு கமென்ட் ப்ளீஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

சௌந்தர் ராஜன்: பெண்! இந்த வார்த்தையின் பின் பொதிந்திருக்கும் ஒரு விசையே ஒட்டுமொத்த உலகையும் இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதுவே நிதர்சனம்!

பரணி
: பெண் ஆணை விட ஒரு படி உயர்ந்தவள். ஆனால் எப்போதும் தனக்கு ஒரு படி கீழ் உள்ள ஆணின் அங்கீகாரத்துக்கு ஏங்குவாள்.

திரவியராஜ்
: பெண் என்பவள் இறைவனின் கவிதை. ஆனால், இந்தக் கவிதை எழுதப்பட்டதா? அல்லது வரையப்பட்டதா? எனத் தெரியவில்லை.

இனியவன்: வாழ்த்துவதற்கு தகுதியான வார்த்தைகள் கிட்டவில்லை. இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன்...

மாரியப்பன்: எழுதப்படாத கவிதை எவ்வளவு அழகோ... அவ்வளவு அழகு பெண்கள்.

விமலப்பன்: தன்னலமின்றி தனக்கானவர்க்காக தன்னையே அர்ப்பணிக்கும் அன்பான தெய்வங்கள்.

ஹரி: அவள் இன்றி அமையாது உலகு.

அர்ஜூன்: அவள் பார்வையில் புத்தனும், பித்தனாவான். கிறுக்கனும் கவிஞனாவான்.

ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பாலாஜி: நம்ம சிக்னலை மதிச்சு நின்னாலும் என்னவோ வேணும்னு நிற்கிற மாதிரி பின்னாடி நிற்கிறவன் சும்மா ஹார்ன் அடிச்சுட்டே இருக்குறது செம கடுப்பா இருக்கும்.

ரவி: நம்மகிட்ட வந்து பிச்சை கேட்பாங்க. அவங்களுக்குக் கொடுக்க நம்ம பாக்கெட்டில் சில்லறை இருக்காதே, அப்போ வரும் கடுப்பு.

சரண்: பைக்ல வெறித்தனமா வெயில்ல நின்னுட்டு இருக்கும்போது பக்கத்துல எவனாவது ஒரு கார்காரன் கூலா ஏ.சி காத்து வாங்கிக்கினு மியூஸிக் கேட்டுக்கினு இருக்கிறதைப் பார்த்தா வரும் பாருங்க ஒரு கடுப்பு.

ஜெயலட்சுமி:  பசிக்காகப் புத்தகத்தைத் துறந்து பொருட்கள் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களைப் பார்க்கும்போது வரும் கோபம் கடுப்பு.

ஜேசுராஜ்: வாகனங்கள் அதிகம் இல்லாத ஊரில் ஆட்டோமேட்டிக் சிக்னல்ல காத்துக்கிட்டு இருக்கிறதுதான் பாஸ்.

சண்முக சுந்தரம்: அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ரொமன்ஸ் பண்ணுபவர்களைப் பார்க்கும்போது...

வெயிலைச் சமாளிக்க வேடிக்கையான டிப்ஸ் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

அன்பு: அது மேலயும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி மறைச்சிடலாம்.

நாளைய முதல்வர்: தமிழ்நாட்டை அலேக்காத் தூக்கி பாரீஸ் பக்கத்திலையோ இல்லை லண்டனுக்குப் பக்கத்திலையோ வெச்சுடலாம். கண்னுக்கும் குளிர்ச்சியா இருக்கும், உடம்புக்கும் குளிர்ச்சியா இருக்கும்.

பிரவீன்:  ஏசி ஷோ ரூம் எங்கெல்லாம் இருக்கோ, அங்கே பொருள் வாங்க வந்த மாதிரி சும்மா ஒரு விசிட் அடிக்கலாம், ஆனா முகத்தைக் கொஞ்சம் சீரியஸா வெச்சுக்கணும். அப்போதான் நம்புவாங்க...

ராஜா: 5,000 ரூபாய் பணத்தை பேங்குல போட்டு ஒவ்வொரு ஏடிஎம்லேயும் போய் கொஞ்சம் கொஞ்சமா பணத்தை எடுத்து ஏசியில் குளிர்காய வேண்டியதுதான்.

வினோ: குளிரைப் போக்க ரோட்ல தீ மூட்டி குளிரைப் போக்குறோம். அதுபோல வெயில் காலத்துல நாலு ஐஸ்கட்டியை ரோட்ல போட்டு வெயிலைப் போக்க வேண்டியதுதான்.

சிவசுப்ரமணியன்: நூறு ரூபாய் இருந்தால் டாஸ்மாக் பீர், பத்து ரூபாய் இருந்தால் அம்மா குடிநீர்.

எல்லோரும் முதல்வராக ஆசைப்படும்போது பிரதமர் ஆக ஆசைப்பட்டவர் சரத்குமார். சரத்குமார் பிரதமர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்லுங்க பாஸ்!

மணியரசன்: கே.எஸ்.ரவிகுமாரிடம் ‘பிரதமர்’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு கதை ரெடி பண்ணச் சொல்லி நடிக்கலாம்.

உமர்: தென்காசியைத் தனிநாடாகப் பிரிக்கலாம்.

ஹரிஷ்: ராதிகா தயாரிக்கும் நாடகத்தில் பிரதமராக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கலாம்.

வைரம்: குப்புறப்படுத்துத் தூங்க வேண்டும். அப்போதான் கனவு வரும்.

துரை: பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்ல வேண்டும். சின்ராசு உட்றா வண்டியை...

சுரேஷ்
: ஆசையை அப்படியே பாராளுமன்றத்துக் கல்வெட்டில் எழுதி வைத்து, பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

வைரமுத்து: அவரோட பெயரை ‘பிரதமர்’னு மாத்திட்டாலே போதும்.

இஸ்மாயில்: தங்கப்ப தக்கத்தை ஒழுங்காப் படிச்சா பிரதமர் ஆக வாய்ப்பிருக்கு.

ஆர்பிஎஸ்:
அவர் எதுக்கு பிரதமர் ஆகணும். அவர் அமெரிக்க ஜனாதிபதியா ஆகக் கூடாதா?

பிரபாகரன்: அப்படியென்றால் ஓமத்திரவம் சாப்பிட வேண்டும்.

சகாய சேவியர்: ராதிகாவை ஜனாதிபதி ஆக்க வேண்டும்.

ஆங்கிரி பேர்ட் ஏன் எப்போதும் ஆங்கிரியாகவே இருக்கிறது?

பதில் சொல்லுங்க பாஸ்!

மணிவண்ணன்: உண்டிகோலுல உட்கார வெச்சுத் தூக்கிக் கல்லுலேயும் கட்டையிலேயும் அடிச்சா, யாருக்குதான்யா கோவம் வராது!

இஸ்மா:  ‘ஆங்’ னு சொல்ற விஜயகாந்தோட வார்த்தையையும் ‘கிரி’ னு முடியுற ‘அழகிரி’ பேரையும் வெச்சிருக்கிறதால ஒருவேளை இருக்கலாம்.

கார்த்தி: ‘ஷூட் தி குருவி’ பாடலைக் கேட்டு நம்மளைத்தான் சுட வர்றாங்கனு கடுப்பான குருவிகள்தான் ஆங்கிரி பேர்ட்.

திலீபன்: சிவப்பு கலர்ல இருக்கும்போதே தெரியலியா... அது கேப்டனோட தூரத்துச் சொந்தம்னு.

சண்முக சுந்தரம்:  அதை வெச்சு விளையாண்டுட்டு பாயின்ட்டை நாமே வெச்சிக்கிறோமே அதான்.

கார்த்திக்: அதுக்கு ஜாங்கிரி கெடக்கலியாம் அதான் ஆங்கிரியாவே இருக்கு.

செந்தில்: ஏன் பாஸ் என்னை யோசிக்க வைக்கிறீங்க?