Election bannerElection banner
Published:Updated:

ஊர்ப்பாவம் பொல்லாதது!

ஊர்ப்பாவம் பொல்லாதது!
ஊர்ப்பாவம் பொல்லாதது!

ஊர்ப்பாவம் பொல்லாதது!

மிழ் சினிமாவில் ஊர்ப் பெயரை வெச்சுக்கிட்டு நம்மாளுங்க பண்ற அட்ராசிட்டீஸ் இருக்கே... ரொம்ம்ம்ம்ப ஓவர் பாஸ்!

ஊர்ப்பாவம் பொல்லாதது!

• ‘ரோஜா’ படத்துல நெல்லை மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் ஹீரோயின் ஊரு. ‘எங்க ஊரு பொண்ணுக்குப் பயம்லாம் கிடையாது. அச்சம் எதுவும் கிடையாது’னு பில்ட்-அப் கொடுப்பாரு ஹீரோ அர்விந்த் சுவாமியின் சீனியர் அதிகாரி. ஒரு வெள்ளைப் பணியாரத்துக்கு இவ்வளவு பில்டப்பா?

• ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் க்ளைமாக்ஸ்ல இருக்கிறதுலேயே கொடூரமான ஊருக்கு பனிஷ்மென்ட்டா ஹீரோவை அனுப்பி வைப்பாங்க. வேற எங்கே... ராமநாதபுரம்தான் பாஸ்! என்னங்கய்யா பண்ணாங்க அவங்க?

• இப்போவெல்லாம் எல்லா ஊர்லேயும் அருவா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க பாஸ். ‘திருப்பாச்சி’ படத்துல அந்த ஊர்தான் அருவாவை ஹோல்சேல்ல உலகத்துக்கே பார்சல் பண்ற மாதிரி அம்புட்டு பில்ட்-அப் கொடுப்பாரு நம்ம தளபதி.

• மதுரைன்னதும் ‘கில்லி’ படம் ஞாபகத்தில் வந்து போகுமே? ‘மதுரையே முத்துப்பாண்டி கோட்டைடி’ என்பார் பிரகாஷ்ராஜ். கபடி விளையாட மதுரை போய் இறங்கினாலே, ‘இது மதுரை. உங்க வால்தனங்களை மறந்துட்டு ஆட்டத்தை மட்டும் ஆடுங்க. இல்லைனா வெட்டி சாய்ச்சிருவாங்க’ என பில்ட்-அப் ஏற்றி பயம் காட்டுவார் கோச். ஏன்யா ஏன்?

ஊர்ப்பாவம் பொல்லாதது!

• ‘அட்டகாசம்’ படத்துல தூத்துக்குடி குருவா நம்ம தல நடிச்சிருப்பார். ‘சோத்துல உப்புப் போட்டு திங்கிறியாலே... அந்த உப்பு எங்க ஊருல இருந்துதான்லே வருது!’ என ஆனா ஊனா உப்பை வெச்சே தப்பாம பன்ச் பேசுவாரு. முடியலை மக்கா.

• ‘ஆதிடா...காசிமேடு ஆதிடா!’ என ‘சிவாஜி’ வில்லனில் ஆரம்பித்து பல படங்களில், ‘காசிமேடுல பெரிய கை அவர்’ எனப் பத்து டஜன் படங்களில் வில்லன்களுக்கு பில்ட்-அப் ஏற்றுவார்கள். உண்மையில் கேரம் போர்டு விளையாடிக்கொண்டு சமர்த்தாய் மீன் பிடிப்பார்கள் ஏரியாவாசிகள். பாவம்யா!

ஊர்ப்பாவம் பொல்லாதது!

• ‘மதுரைக்காரன் என்னிக்கிடா தண்ணி ஊத்தி சரக்கடிச்சிருக்கான்?’ என வெட்டி பந்தா காட்டி  கோமணத்தோடு கிடப்பார் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு  செக்யூரிட்டி!

• ‘உசிலம்பட்டியில பெரிய தலைகட்டுதான்’ என கித்தாப்பு காட்டுவதாகட்டும், ‘எங்க பொண்ணுங்க மனசை காதல், கீதல்னு கலைச்சா இந்தக் காட்டுக்குள்ள கொன்னு புதைச்சிடுவோம்!’ என ஆணவ பந்தா காட்டுவதிலும் ‘சுந்தரபாண்டியன்’ படம் ரொம்பவே ஓவர் பாஸ்!

ஊர்ப்பாவம் பொல்லாதது!

• ‘ஏனாதி, அரசனூர், ராணிமங்கலம்’ போன்ற ஊர்களை ‘களவாணி’ விமல் மூலம் அடிக்கடி சொல்ல வைத்து ஊர்ப்பாசம் காட்டினாரே சற்குணம்!

• நாட்டரசன்கோட்டை, சிவகங்கை ஜில்லா, மதுரை அனுப்பானடி, சிவகாசி, திருப்பாச்சி என எத்தனைப் படங்கள்ல ஊர்களுக்கு வக்காலத்து வாங்கினாரு நம்ம பேரரசு!

ஊர்ப்பாவம் பொல்லாதது!

• ‘அந்த சிவகாசி வெடி தயாரிக்கிற இடம்... இந்த சிவகாசி வெடிக்கிற இடம்!’ எனத் தன் பெயருக்கு விளக்கம் கொடுத்து லைக்ஸ் அள்ளுவாரே ‘சிவகாசி’ விஜய்ணா!

• ‘திருநெல்வேலியை ரொம்பப் பிடிக்கக் காரணம் பொண்ணுங்க. இந்த ஊர்ப் பொண்ணுங்க குடை எடுத்துட்டுப் போறதுகூட அருவா எடுத்துட்டுப் போற மாதிரியே இருக்கும்’ என வெட்டி பில்ட்-அப் கொடுப்பாரு நம்ம ‘சாமி’ விக்ரம்!

ஊர்ப்பாவம் பொல்லாதது!

• ஆனா ஊனா தாமிரபரணி தண்ணி குடிச்சவன், சிறுவாணி தண்ணி குடிச்சவன், தென் மதுரை வைகை நதியில தமிழ் படிச்சவன், காவிரியில கால் நனைச்சவன்னு எக்கச்சக்க எகனை மொகனைகள். ஏன்யா ஏன்? இதெல்லாம் அந்தந்த ஊர்ல அவனவன் செய்றதுதானே?

• ‘அதாங்ணா கோயம்புத்தூர் குசும்பு’, ‘பொண்ணு அமெரிக்கா- பையன் அமிஞ்சிக்கரை’, ‘இதுக்கு வியாசர்பாடி வால்பசங்களை அனுப்பி ஆளைத் தூக்கு’, ‘மைலாப்பூர் மாமி’ , ‘கும்பகோணம் சாம்பு மாமா’ என நேட்டிவிட்டியிலே நெத்தியிலேயே அடிக்கிறீங்களே...!

பாவம் பாஸ் நாங்க!

-ஆர்.சரண்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு