Election bannerElection banner
Published:Updated:

இவ்ளோதான் பாஸ் மிமிக்ரி!

இவ்ளோதான் பாஸ் மிமிக்ரி!
இவ்ளோதான் பாஸ் மிமிக்ரி!

இவ்ளோதான் பாஸ் மிமிக்ரி!

டி.வி-க்களில் பல குரலில் பேசும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகளை நல்லா கவனிச்சுப் பார்த்தா, ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கலாம். ரஜினி வாய்ஸ்ல பேசச் சொன்னா, ‘கண்ணா வணக்கம்’னுதான் ஆரம்பிப்பாங்க. கண்ணாங்கிற வார்த்தை இல்லாம அவங்களுக்கு ரஜினி வாய்ஸ் வராது. இதே மாதிரி எந்தெந்த நடிகர்களுக்கு எப்படி  வாய்ஸ் எடுக்கிறாங்கனு பார்க்கலாமா?

 விஜய் வாய்ஸ் பேசுறவங்க ‘அண்ணா வணக்கங்ணா’னுதான் ஆரம்பிப்பாங்க. அடுத்த வரி ‘என் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கும் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குட்டிக் குட்டி ரசிகர்களுக்கும் வணக்கம்’னு ஒரு ஃப்ளோவுல போவாங்க. அப்படியே முதுகுக்குப் பின்னால கையை விட்டு கீழே இறங்கின ஜீன்ஸ் பேன்டை லைட்டா ஏத்திவிட்டு பாடி லாங்குவேஜையும் சேர்த்துப் பண்ணினா, அன்னைக்கு ஆடியன்ஸுக்கு அவர் தான் விஜய்.

 அஜித் வாய்ஸ் ரொம்ப சிம்பிள். ‘அத்த்து’. இந்த ஒரு வார்த்தையை சரியா பேசினாப் போதும். ஆட்டோமேட்டிக்கா அஜித் வாய்ஸ் வந்திடும். இடுப்பில் பீச்சாங்கையை வெச்சு முட்டுக்கொடுத்து சோத்தாங்கையால் தலையை சொறிஞ்சபடி அத்த்துனு ஆரம்பிப்பாங்க. அடுத்து ‘நீ கரையில இருக்க நான் கடலுக்குள்ளே இருக்கேன். அதோட ஆழம்  என்னான்னு தெரியாது. அழுத்தம் என்னான்னு தெரியாது’னு வண்டி அது பாட்டுக்குப் போகும். 

இவ்ளோதான் பாஸ் மிமிக்ரி!

மாதவன் வாய்ஸ் ரெண்டு விதமாப் பேசுவாங்க. டெரர் வாய்ஸ் வேணும்னா ‘தம்பி’ மாதவன்தான். ‘ஏய் ஏய் சும்மா இரு, சும்மா இரு, எங்க போகுது என் நாடு’னு பேசுவாங்க. அதுவே சாஃப்டான மாதவன் வேணும்னா ‘அலைபாயுதே’ டயலாக்தான். ‘நான் உன்னை லவ் பண்ணலை. உன் மேல ஆசைப்படலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோனு பயமா இருக்கு’னு பேசுவாங்க. சில பேருக்கு மாதவன் வாய்ஸ் வரவே வராது. நானும் மாதவன் மாதிரி பேசுறேன்னு சொல்லி அவங்க வாய்ஸ்லேயே பேசி உசுரை வாங்குவாங்க.

 கார்த்திக்னு சொன்னாலே ‘ஏய் பானு நான் உன்கிட்ட என்ன கேட்டேன். ஒரே ஒரு உம்மாதானே கேட்டேன்’னு ஸ்டார்ட் பண்றாங்க. கார்த்திக் வாய்ஸ் எப்படி பேசுறதுனு நமக்கு க்ளாஸ்கூட எடுக்கிறாங்க. ஆங்கிலத்தில் உயிரெழுத்துகள் A, E, I, O, U இதை வேகமாச் சொன்னா கார்த்திக் வாய்ஸ் வந்திடுமாம். A, E, I, O, U... அட! நிஜமாவே வருதுய்யா.

 சூர்யா வாய்ஸ் எப்படினா ‘எல்லாருக்கும் வணக்கம். நான் உங்க  சூர்யா  பேசுறேன்’னு முக்கிக்கிட்டே சிலர் பேசுவாங்க. இன்னும் சிலர் ‘நான் உன்கிட்ட இதைச் சொல்லியே ஆகணும்’னு ஹால்ஸ் மிட்டாய் சாப்பிட்ட ஃபீல்ல பேசுறாங்க. ஆனா முடிக்கும்போது எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி ‘ரபபப ரபபப பம்’ மறக்காம போடுறாங்க. அடப் போங்கய்யா...

 ரவிகிருஷ்ணா வாய்ஸ்...
இது ரொம்ப அபூர்வமான  வாய்ஸ்னு சொல்லி சில பேர் மிமிக்ரி பண்றாங்க. சரி அப்படி என்னதான் பண்ணப்போறாங்கனு பார்த்தா ‘அனிதா, அனிதா, அனிதா, ம்ம்ம்ம்ம்ம்’ மறுபடியும் ‘அனிதா’ வேற எதாவது சொல்லுங்கடானு நாம கடுப்பாகிற வரை அனிதாவை விட மாட்டேங்கிறாங்க.

 சீரியஸான ஆளா இருந்த கேப்டனை காமெடியாக்கி விட்டதில் முக்கியப் பங்கு ரோபோ ஷங்கருக்குதான். கேப்டன் மாதிரியே நாக்கைக் கடிக்கிறது, கண்ணை உருட்டுறது, வேட்டியைத் தூக்கி ஒரு சுத்து சுத்துறதுனு  அநியாயம் பண்ணியிருக்கார். அவர் ஆரம்பிச்சு வெச்சதைதான் இன்னைக்கு கேப்டன் மாதிரி மிமிக்ரி பண்றவங்க பேசிட்டுத் திரியறாங்க.

 சண்முக சுந்தரம் வாய்ஸ் பேசுறவங்க நெஞ்சுல கை வெச்சுப்பாங்க. ‘அக்கா உன் தம்பிய நெஞ்சுலையே மிதிச்சாங்கக்கா. நான் ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்தேன்கா’னு பேசுனா அது சென்டிமென்ட் மோட், அதுவே ‘அம்மா காமாட்சி, வந்திருக்கிற புள்ளைகளுக்கு காப்பித் தண்ணி குடுமா’னு பேசுனா   நார்மல் மோடு.

எவ்ளோ வருஷமாப் பார்க்கிறோம்!

-ஜுல்ஃபி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு