தமிழ் சினிமாவில் சிலரின் நடிப்பில் அபத்தமான காட்சிகள் இவை... மொக்கையான நடிப்பில் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்த இவர்களை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!

‘எனக்குள் ஒருவன்’ படத்தில் நம்ம சித்தார்த் தியேட்டரில் டார்ச்லைட் அடிக்கும் இளைஞனாக வேலை பார்ப்பார். ஆனால், சீனுக்கு சீன் கருப்புச்சாயம் பூசிக்கொண்டு முன் துருத்திய ப்ளாஸ்டிக் பல்லோடு, ‘தேட்டரு தேட்டரு’ என்று சொல்லும்போது சிப்பு வரும் சிப்பு!

‘காதல் கோட்டை’ படத்தில் நம்ம தல க்ளைமாக்ஸில் சொதப்பி இருப்பார். தேவயானி ரயிலில் இருந்து எதார்த்தமாக குதித்து ஓடிவந்து, ‘சூ...சூர்யா..’ எனச் சுட்டிக் காட்டி, ‘கமலி...’ என அழகாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருப்பார். பதிலுக்கு போனா போகுதென்று சிரித்து வைப்பார் தல. ஏன் தல?

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் இரண்டு ரஜினிகள். இரண்டாவது ரஜினி செம சேட்டைக்கார ஆசாமி. ஒரு சீனில் செத்துப்போன ரஜினியின் ஓவியத்தின் பின்னால் நின்றுகொண்டிருக்கும்போது அவரை சுஹாசினி பார்த்து விடுவார். அப்போது ஒரு பபிள்கம் மென்றபடி வித்தியாசமான பாடி லாங்குவேஜ் காட்டுவார் பாருங்க. ஆஸம் ஆஸம்!

‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி அந்த பங்களாவில் இருக்கும் ரகசியங்களைச் சொல்லும்போதெல்லாம் அநியாயத்துக்கு ஜெர்க் ஆகி அழுவார் பிரபு. க்ளைமாக்ஸில் ஜோதிகா போடும் ஆட்டத்தை ஓட்டை வழியாக எட்டிப்பார்த்துவிட்டு ‘என்ன கொடுமை சரவணன் இது?’ எனச் சொல்வார் பாருங்கள். என்ன கொடுமை பிரபு இது?

‘பாண்டவர் பூமி’ படத்தின் ஃப்ளாஷ்பேக்காக வரும் காட்சியில் தங்கச்சியையும் தங்கச்சியின் கணவனையும் அரிவாளால் சதக் சதக்கென தலைகளை வெட்டி வீசிவிடுவார் ரஞ்சித். அப்போது அந்தக் காட்சியைப் பார்த்த மூத்த அண்ணன் ராஜ்கிரண் ‘ஃப்ரீஸ்’ ஆகி கையைக் கரடி பொம்மை போல வைத்தபடி அப்படியே நிற்பார். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், இன்னொரு அண்ணன் வாகை சந்திரசேகர் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருக்கும் பாலத்தின் சுவற்றில் போய் முட்டுக் கொடுத்து தண்டால் எடுப்பது போல் எதையோ செய்வார். யதார்த்தமா நடிக்கிறாங்களாமாம்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் க்ளைமாக்ஸில் ‘இன்னிசை பாடி வரும்..’ பாடலைக் கேட்டதும் சிம்ரன் தான் கலெக்டர் என்பதையும் மறந்து ஓடுவார். அவரைக் கத்தியோடு மணிவண்ணன் துரத்துவார். ஒரு பஸ்ஸில் ஏறிய சிம்ரன், ‘இங்கே யார் குட்டி..? நீங்களா..? நீங்களா?’ எனக் கேட்பார். ‘நீதான் குட்டி’ என நம் மைண்ட் வாய்ஸை கேப்சர் பண்ணியது போல ஷாக் ஆகி ‘நீங்கதான் ருக்குவா?’ என பஸ்ஸில் கேட்பார்கள் பாருங்கள். செம ட்ராமா.

‘ஒரு தாயின் சபதம்’ படத்தில் ‘அக்கார்டிங் டு தி ப்ராஸிகியூஷன் மிஸ்டர் ஜான்சன்! யூ ஸே இட்ஸ் எ பாய்சன்...அக்கார்டிங் டு மீ இட்ஸ் எ எக்ஸாக்ரேஷன்...ஐ ஸே திஸ் பாட்டில் கன்டெய்ன்ஸ் ஆர்டினரி சொல்யூஷன்...’ என ஆரம்பித்து லூஸ் மோஷனைத் தவிர எல்லா வார்த்தைகளையும் ரைமிங்காக பேசுவார் நம்ம டி.ஆர். கோர்ட்டில் எல்லோரும் அவரது வாதத்திறமையைப் பார்த்து பாராட்டி சிரிப்பார்கள். நமக்குதான் மயக்கம் வராதக் குறை!

-ஆர்.சரண்