‘ஏழு கழுதை வயசாகுதே... இன்னுமா இப்படி இருக்கே’னு கேட்கிற அளவுக்கு சின்னவயசுப் பழக்கத்தை சிலர் தொடர்ந்து ஃபாலோ பண்றாங்க. அவங்க இவங்கதான்!

ரோட்ல சர்வ சாதாரணமா சின்னப் பசங்க மாதிரி டெளசர் போட்டு சுத்துறது, சிட்டியில இதை ஷார்ட்ஸ்னு ஸ்டைலா சொல்லிக்கிட்டாலும் எங்க ஊர் பக்கம் இன்னமும் அது டெளசர்தான். மாட்டிக்கிட்டு வெளியே வர முடியாது. வந்தா கிண்டல் பண்ணியே கிழிச்சிடுவாங்க டெளசரை.

பள்ளிக்கூடத்தில் பென்சில், சிலேட்டுக் குச்சி, அழி ரப்பர், ஸ்கேலுனு திருடிப் பழக்கப்பட்டவங்க, ஆபீஸ் ஸ்டேஷனரி ஐட்டங்களில் கை வைப்பாங்க. குறிப்பா ஸ்டேப்ளர், பென்சில் பாக்ஸ் சுடுவாங்க.

எவ்வளவு காஸ்ட்லியான சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் ஃபைனல் டச்சா ரெண்டு ரூபாய் கடலை மிட்டாயை வாங்கித் தின்னாத்தான் சிலருக்கு சாப்பிட்ட திருப்தியே வரும். இன்டர்வெல்ல சாப்பிட்டுப் பழகிட்டாங்க.

எவ்வளவு பெரிய அதிகாரியா இருந்தாலும் பேப்பரைப் புரட்டும்போது பால்வாடியில் கத்துக்கிட்ட எச்சில் தொட்டுப் பக்கம் புரட்டும் முறையையே பயன்படுத்தி நம்மைப் பயமுறுத்துவாங்க.

பள்ளிக்கூடத்தில் பக்கத்தில் இருப்பவனைப் பார்த்து காப்பி அடிச்சுப் பழக்கப்பட்டவங்க திடீர்னு எப்படி அதை மாத்திக்க முடியும்? பேங்கில் அடுத்தவனுடைய சலானைக் காப்பியடிப்பதில் தொடங்கி அட்மிஷன் ஃபார்ம் ஃபில்-அப் பண்ணுவது வரை எங்கேயும் எப்போதும் காப்பிதான்.

ஜெட்டிக்ஸ் ரெட் ரேஞ்சர் ரசிகன்னு தன்னைக் காட்டிக்கிறதுக்கு அந்த போட்டோவை மொபைல் வால்பேப்பரா வெச்சிக்கிட்டு அலைவாங்க.

முடி வெட்டும்போது சின்னப் புள்ளைங்க மாதிரி தூங்கித் தூங்கி விழுந்து வெட்டுறவரைப் பாடாய்ப் படுத்துவாங்க.

வீட்ல யாரும் இல்லைனா, தன்னை ஒரு குழந்தையாவே நினைச்சுக்கிட்டு ‘பூவே உனக்காக’ சார்லி மாதிரி சுதந்திரக் குளியல் போடுவாங்க. நிறையப் பேர் இப்படித்தான்!

-ஜுல்ஃபி