Published:Updated:

கவலைப்படாதே சகோதரா!

கவலைப்படாதே சகோதரா!
கவலைப்படாதே சகோதரா!

கவலைப்படாதே சகோதரா!

கவலைப்படாதே சகோதரா!

ம்ம ஊர்ல கொலை செஞ்சவனைக்கூட மன்னிச்சிடுவாங்க. ஆனா இந்தப் பரீட்சையில ஃபெயிலானவனை மட்டும் மன்னிக்கவே மாட்டாங்க. ஒரு நாள் முழுக்க அப்பா, அம்மா, சொந்தக்காரங்க, பக்கத்து வீட்டு ஆன்ட்டினு எல்லோரும் ஒண்ணுகூடி அட்வைஸ் பண்ணுவாங்க. இவங்களை எப்படி சமாளிக்கலாம்னு சில யோசனைகள்.

• காலையில 10 மணிக்கு வந்த ரிசல்ட்டைப் பார்த்து நமக்கு பக்குனு இருக்கும். ஃபீலிங்க்ல இருக்கும்போது சில பாஸான பக்கிங்க வந்து மில்க் சாக்லேட் கொடுப்பாங்க. அதாவது நமக்குப் பால் ஊத்திட்டாங்கனு சிம்பாலிக்கா சொல்வாங்க. அடுத்து என்ன செய்றதுனு தெரியாம ஃப்ரெண்ட்ஸ் வீடு, கிரிக்கெட் கிரவுண்ட், கம்மாக்கரைனு சுத்தித் திரிஞ்சா மதியம் 12.30-க்கு லைட்டா பசிக்கும். சரி, என்னதான் நடக்குதுனு பாத்திருவோமேனு வீட்டுக்குப் போனா, கரெக்டா வீட்டு வாசல்ல தங்கச்சி நிற்கும். எப்படா அண்ணன் வருவான், கலாய்க்கலாம்னு காத்திருக்கிறது அது கண்ணுலேயே தெரியும். ‘மறுபடியும் ஃபெயிலா’னு நக்கலா கேட்கிற தங்கச்சிகிட்ட, ‘வருஷம் முழுக்க சொல்லிக்கொடுத்த வாத்தியார் மேல கொஞ்சம்கூட மரியாதை இல்லாம பாஸாகிப் போக நான் ஒண்ணும் நன்றி கெட்டவன் இல்லம்மா’னு ‘சச்சின்’ படத்து வடிவேலு டயலாக்கைச் சொல்லி சமாளிக்கலாம். 

• அடுத்து தம்பியை ஃபேஸ் பண்ணணும். ‘உன் க்ளாஸ்ல நீ மட்டும்தான் ஃபெயிலாமே’னு கேட்கும் தம்பிகிட்ட ‘டேய் பாஸாகிப் போனவன் எல்லாம் எந்த சப்ஜெக்டையும் முழுசா புரிஞ்சு படிக்காதவன்டா ஆனா உன் அண்ணன் அப்படியா அதுல என்ன சொல்லி இருக்குனு திரும்ப இன்னொரு வாட்டி படிச்சு முறையா முழுசா கத்துக்கிறவன்டா’னு சொல்லி எஸ்ஸாகலாம்.

கவலைப்படாதே சகோதரா!

• கண்டிப்பா அம்மாவுக்குத் தெரியாம இருக்காது. வெளியூர்ல இருந்து ஏதாவது ஒரு சித்தி போன் போட்டு மார்க் என்னன்னு விசாரிச்சிருப்பாங்க. ஃபெயிலான கோபத்துல இருக்கும் அம்மாகிட்டே போய் ‘மத்தவனுங்க எல்லாம் காப்பி அடிச்சு பாஸ் பண்ணினாங்கம்மா, உன் புள்ளை அப்படியா நீ என்னை அப்படியா வளர்த்திருக்கே’னு அம்மாவுடைய கோபத்தை ஆஃப் பண்ணலாம்.

• ராத்திரி 7 மணிக்கு மேல வீட்டுக்கு வரும் அப்பா ‘7 ஜி ரெயின்போ காலனி’ விஜயன் மாதிரி சாப்பிடும்போது ரிசல்ட் பத்தி கேட்பார். மூணு பேப்பர்ல போச்சுனு தெரிஞ்சதும் ‘ப்ளாட்ஃபார்ம்ல இருந்து படிக்கிறவங்க கூட ஸ்டேட் ஃபர்ஸ்ட் கோல்ட் மெடல் வாங்குறாங்க உனக்கு என்னடா கேடு’னு திட்டும்போது நாம அவசரப்பட்டு கோபப்படக் கூடாது. ‘நீங்க தானேப்பா சொன்னீங்க, எக்ஸாம்ல பாஸானா பைக் வாங்கித் தரேன்னு இப்போ நம்ம குடும்பம் இருக்கிற கஷ்டத்துல எதுக்கு தேவை இல்லாத வீண் செலவுனுதான்பா நான் ஃபெயில் ஆனேன்’னு  சென்டிமென்டா பேசித் தப்பிக்கலாம்.

• சுத்தியிருக்கிற எல்லோரும் அன்னைக்கு ஹேட்டர்ஸா மாறினாலும்   ஒரே ஒரு ஜீவன் மட்டும் நமக்கு சப்போர்ட் பண்ணும். அது யாருனா இத்தனை வருஷமா பெருசுனு நாம கிண்டல் பண்ணின பாட்டிதான். ‘அட விடுப்பா என் பேரன் அடுத்த வருஷம் பாஸாகிடுவான்’னு  நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பல பேர் அதுக்கப்புறம் எங்கே போறாங்கனு யாருக்குமே தெரியலை. ஆனா ஃபெயிலாப்போற  மக்கு ஸ்டூடன்ட்ஸ், எதிர்காலத்துல பெருசா சாதிச்சிருக்காங்க. இப்போ சொல்லுங்க பாஸ் பெருசா? ஃபெயில் பெருசா?  

-ஜுல்ஃபி

அடுத்த கட்டுரைக்கு