Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

Published:Updated:
பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான வாசகர்கள் ...

பதில் சொல்லுங்க பாஸ்!

 தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திருநாவுக்கரசருக்கு என்ன அட்வைஸ் தருவீங்க?

ராஜ்குமார் : ஒரே ஒரு அட்வைஸ்தான். ப்ளீஸ்... வேஷ்டி அணிவதைத் தவிர்ப்பீர். கோஷ்டிச் சண்டையில் வேஷ்டியை உருவுவதிலிருந்து தப்பிக்க பேன்ட் அணிவீர்.

திலீபன் : எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமாங்கிற டயலாக்கைத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு துடிப்புடன் செயல்படவும்!

பரிபாடல் அரசு : அடுத்த கோஷ்டிகள் எல்லாம் கிளம்பறதுக்கு முன்னாடி திருநாவுக்கரசரே `தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசரை உடனடியாக மாற்ற வேண்டும்' என்று டெல்லிக்குக் கடிதம் எழுதிப் போராட்டம் நடத்தலாம், மத்த கோஷ்டிங்க எல்லாம் மிரண்டுடும்.

அருள் முருகன்
: இன்று என்ன கிழமைனு யாராவது கேட்டாக்கூட `அதையும் மேலிடம்தான் முடிவு பண்ணிச் சொல்லும்'னு சொல்லிடணும். சரியா?

தூத்துக்குடி கிங் : `சொன்னானுவளே எனக்கும் சொன்னானுவளே...'ங்கிற `அரசு' பட காமெடிதான் ஞாபகத்துக்கு வருது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஓசோன் ஓட்டையால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த ஓசோன் ஓட்டை மேலும் பெரிதாகாமல் தடுக்க, அதிரடியான ஐடியாக்கள் சொல்லுங்களேன் பாஸ்!

பஷீர் அப்துல் காதர் : ஓட்டை இருப்பதால்தான் மழை பூமியில் விழுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பதில் சொல்லுங்க பாஸ்!

திலீபன் : இதையேதான் நான் ஐந்தாவது படிக்கும்போதும் கேட்டாங்க. இப்பவும் கேட்டுகிட்டே இருக்காங்க... அடப் போங்கப்பா!

விக்கிரமாதித்தன் : ஓசோனைக் கண்டுபிடிச்சது #தமிழன்டா அப்படினு சொல்லிப் பாருங்க. நம்மகூடதான் சண்டைபோட சுற்றி நிறைய மாநிலங்கள் இருக்கே. உடனே உரிமை கொண்டாட வந்துருவானுங்க. தமிழ்நாட்டுக்கு மட்டும் வெளிச்சம் தரும் அந்த ஓட்டை இனி எவனுக்கும் பயன்படக்கூடாதுனு அடைச்சு விட்டுருவாய்ங்க.

இம்ரான் : கொஞ்சமாக சங்கர் சிமெண்டை அள்ளிப் பூசிவிட்டா சரியாகிடும். உறுதியும் நம்பிக்கையும் கொண்டது. எப்படி நீங்க சீப்பா போட்ட பிளானை நான் சீப்பை வெச்சே முடிச்சுட்டேன் பார்த்தீங்களா?

லக்‌ஷ்மண் : மைதா மாவைக் காய்ச்சி பவர்ஸ்டார் பட போஸ்டரை அந்த இடத்தில் ஒட்டவும்.

 நடிகரும், `நாடாளும் மக்கள் கட்சி'யின் நிறுவனருமான கார்த்திக் முதல்வர் ஆனால், என்னென்ன நடக்கும்?

கார்த்திக்ராஜ்
: அமைச்சர்கள் கால்ல விழுந்து... அப்படியே தூங்கிடுவாங்க!

சரண்யன் மணிவேல் : இவரே முதல்வர் ஆகும்போது, நாம நினைச்சா வாழ்க்கையில என்னா வேணாலும் ஆகிடலாம்னு இளைஞர்களிடம் தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் எல்லாம் பிறக்கும். #ஹேஹெய் என்னா ஷொல்ற டார்லிங்... ஷரியா?

பதில் சொல்லுங்க பாஸ்!

வைத்தீஸ் : கார்த்திக் கூட வைகோ கூட்டணி வைப்பாருனு ஒரு செய்தி வருது (முடிவு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்).

ப்ரேம் விஜய்
: அவர் மூன்று பக்க நன்றி உரையைப் பேசி முடிக்கவே மூன்று மணி நேரம் ஆகும். சபாநாயகரே பேச நேரம் கிடைக்கலைனு வெளிநடப்பு பண்ண வேண்டியிருக்கும். பரவாயில்லையா பாஸ்?

மாரியப்பன்: கார்த்திக்குக்கெல்லாம் கட்சி இருக்குதா? (இருக்குனு எழுதிப் போடுங்கய்யா... வழிச்சு எடுத்த மாதிரியே இருக்கு).

 டிப்ஸுக்கும் அட்வைஸுக்கும் என்ன வித்தியாசம்?

ராஜாராம் : லவ் பண்றதுக்கு நண்பன் கொடுக்கிற யோசனைக்குப் பேரு டிப்ஸ். லவ்வே பண்ண வேணாம்னு நண்பன் கொடுக்கிற யோசனைக்குப் பேரு அட்வைஸ்.

பதில் சொல்லுங்க பாஸ்!

சாமிநாதன் : `சரக்கு அடிக்கும்போது தண்ணி சேர்த்துக்கோ'னு ஊருக்கே சொன்னா அது டிப்ஸ். உனக்கு மட்டும் சொன்னா அது அட்வைஸ்.

ராகவன் :`பரீட்சைக்கு பிட் எடுத்துட்டுப் போயாவது பாஸ் ஆயிடு'னு சொன்னா டிப்ஸ். `படிச்சாதான் வாழ்க்கையில் உருப்படுவே'னு அறுவையைப் போட்டா தட் இஸ் அட்வைஸ்!

சரவணன் : நீங்க இப்ப எங்ககிட்ட கேட்கிறீங்களே அது டிப்ஸ். நீங்களா யோசிச்சுப் போடுங்கனு நாங்க சொன்னா அது அட்வைஸ்.

சங்கர் நடராஜன்
: போறபோக்குல சொல்லிட்டுப் போனா டிப்ஸ். போட்டுக் கழுத்தை அறுத்தா அது அட்வைஸ். சிம்பிள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism