Published:Updated:

ரியல்... டரியல்!

ரியல்... டரியல்!
பிரீமியம் ஸ்டோரி
ரியல்... டரியல்!

ரியல்... டரியல்!

ரியல்... டரியல்!

ரியல்... டரியல்!

Published:Updated:
ரியல்... டரியல்!
பிரீமியம் ஸ்டோரி
ரியல்... டரியல்!
ரியல்... டரியல்!

காலேஜ் லைஃப் எல்லோருக்கும் முக்கியமான அத்தியாயம். இதுவரைக்கும் சினிமாவுல கொஞ்சமும், பக்கத்துவீட்டு அண்ணனுங்க, அக்காங்க சொல்லி கொஞ்சமுமா காலேஜைப் பத்தி அரைகுறையா  தெரிஞ்சுக்கிட்டு உள்ளே நுழைவோம். அங்கே நமக்குக் கிடைக்கிற பல்பைப் பார்ப்போமா..?

புதுசா எடுத்த சட்டை, ஜீன்ஸ் பேன்ட்டு, பேக்னு எல்லாத்துலயும் பிரஸ் டேக் எஃபக்ட்டோட ஒரு வாக்கப் போட்டுப் போவோம். உள்ள நமக்குனே வெயிட் பண்ணிட்டிருக்குற எவனாவது நக்கலா ஒரு சிரிப்பைப் போட்டு நமக்குள்ள முழிச்ச ஹீரோவ மறுபடி படுத்த படுக்கையாக்குவான். நாமளும் சுத்தி எவனும் பாக்குறானானு பார்த்துட்டு நடையப்போடுவோம். அங்க இருக்க மூஞ்சிங்கள்ல எவனாது தேர்றானானு பார்த்து அவன்ட, “அண்ணே! இங்க (டிபார்ட்மெண்ட் பேரச் சொல்லி) ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் எங்க இருக்கு?”னு கேட்போம். உடனே அவன் ஒரு லுக்க விடுவான். `எதுக்கு இப்பிடிப் பாக்குறாரு?'னு வடிவேல் மாதிரி யோசிப்போம். `டேய் உனக்கு வேற டிப்பார்ட்மென்ட்டே கிடைக்கலயாடா?'னு நொந்துகிட்டே `அந்தப் பக்கமா போ'னு சொல்லுவான். `நான் என்ன ஆசப்பட்டாடா இந்த டிப்பார்ட்மெண்ட்ல சேந்தேன். வேற எதும் கிடைக்கலயேடா'னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டே கிளாஸ்க்குள்ள நுழைவோம். அங்கே போனதும் டமார்னு நெஞ்சு வெடிச்சுச் சுக்குநூறாகும். பின்ன இருக்குறதுலேயே சப்ப பீஸுங்களா பார்த்து கிளாஸ்ல போட்டுருந்தா எவனுக்குத்தான்யா மனசு வெடிக்காது?

சரி போகட்டும் பாத்துக்கலாம்னு உள்ள போய் உக்காருவோம்னு கடைசி பெஞ்சப் பார்ப்போம். அது ஆல்ரெடி ஹவுஸ்புல்லாகியிருக்கும்(என் இனமடா நீங்கள்லாம்). மூணாவது பெஞ்ச்ல ஒரு வேகன்ஸி இருக்கும் அங்க போய் உட்க்காந்து பக்கத்துல இருக்கவன்ட பேசலாம்னு பார்ப்போம். அவன் வந்தன்னிக்கே லைப்ரேரில இருந்து புக்க எடுத்துட்டு வந்து நோட்ஸ் எடுத்திட்டிருப்பான் (யாருமே இல்லாத பார்ல யாருக்குடா பீர் வாங்கி வெச்சுருக்க?) `இப்பிடி ஒரு காலேஜ்ல வந்து சிக்கிட்டோமே ஆண்டவா'னு நெனைக்கிறப்ப வெளில இருந்து ஒருத்தன் ஓடிவந்து  “லெக்சரர் வர்றாரு”னு சொல்லுவான். (எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கிப் போங்க... நம்பள நோக்கி ஒரு பெரிய ஆபத்து வருது மொமண்ட்!) அவரு வந்ததும் வராததுமா, “எங்க ஒவ்வொருத்தரா எழுந்து செல்ஃப் இன்ட்ரோ பண்ணிக்கோங்க''னு அவிச்ச கடலையவே திரும்ப அவிப்பாரு. எல்லாப்  பயலுகலும் எழுந்து, ``மை நேம் இஸ் பார்த்தா... ஐயாம் கம்மிங் ஃபிரம் மைலாப்பூர்''னு ஓகே ஓகே சந்தானத்தை மிஞ்சற அளவு இங்கிலீஸ்ல காமெடி பண்ணுவானுங்க.

ரியல்... டரியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`நாம எப்போட எந்திரிப்போம்'னு காத்திருந்தவன் மாதிரி நமக்கு மட்டும் எக்ஸ்ட்ரா கொஸ்டீன் ரெடி பண்ணி வெச்சிருப்பார். ``தம்பி இந்த காலேஜ ஏன் சூஸ் பண்ணிங்க?''னு கேட்பார்.  `நான் அத இப்ப தான் யோசிக்க்கிறேன்'னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டு, வெளில சமாளிக்கிறதுக்கு எதையாச்சும் உளறி வெப்போம். எல்லாம் முடிஞ்சதும், ``இந்தக் காலேஜைப் பத்தி வெளிய விசாரிச்சீங்களா?''னு கேட்பார். ``விசாரிச்சிருந்தா நாங்க ஏங்க இங்க சேரப்போறோம்''னு பொடனிக்குப்பின்னாடி லாஸ்ட் பெஞ்ச் பக்கி கமெண்ட் அடிக்கும். அதைக் கண்டுக்காம கன்டினியூ பண்ணுவார்.
 
இது ரொம்ப ஸ்ட்ரிக்டான காலேஜ். டிசிப்பிளின் இஸ் மஸ்ட். இந்த மாதிரி செக்டு ஷர்ட்டெல்லாம் போடக்கூடாது (ஐயய்யோ இப்ப தானேய்யா புதுசா நாலு வாங்கி வெச்சுருக்கேன். போச்சா!). ஜீன்ஸ் பேன்ட் அறவே கூடாது (என்கிட்ட ஜீன்ஸ் தவிர வேற எதும் இல்லியே ராஜா). ஃபார்மலா டிரஸ் பண்ணி, டக்கின் பண்ணி, ஷூ போட்டுட்டு புரொஃபஷனலாதான் வரணும். அதுதான் நீங்க நாளைக்கு ஜாப் கிடைச்சு வெளிநாடு போகக்கூட ஹெல்ப் பண்ணும் (நாங்க ஏன்யா நடு சாமத்துல சுடுகாட்டுக்குப் போகணும்?)

அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் (சொல்லித்தொல!) காலேஜ் கேம்பஸ்க்குள்ள யாரும் கேர்ள்ஸ்கூட பேசக்கூடாது (அப்படியே பேசிட்டாலும் நாங்க அசந்துதான் போவோம்!) இன்னிக்கி முதல் நாள்ங்கிறதால இதோட கிளாஸ் ஓவர் ஆகுது. (வந்ததில இருந்து இப்போதாய்யா நல்ல வார்த்தையக் கேட்குறோம்.) `ஸீ யூ டுமாரோ!' (மீண்டுமா?!)

வெளியே வந்ததும் எவனாது பாழாப்போன சீனியர், ``என்ன தம்பி காலேஜ் எப்பிடி இருக்கு?''னு சீண்டுவான். நாம பொலம்புறதப் பார்த்துட்டு, ``விடுப்பா ஃபர்ஸ்ட் இயர் அப்பிடித்தான் இருக்கும். அதுக்கு அப்பறம், அப்படியே பழகிடும்!'' என்பார்.

கிட்டத்தட்ட இப்போ எல்லோரோட மனநிலையும் இப்பிடித்தான் இருக்கும். `சார் வாட் இஸ் தி புரொசீஜர் டூ சேஞ்ச் தி காலேஜ்?'' (இவ்வளோ கண்டிப்பெல்லாம் ஆகாது முதலாளி)

- பா.ஜான்சன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism