Published:Updated:

கொக்கிபீடியா!

கொக்கிபீடியா!
பிரீமியம் ஸ்டோரி
கொக்கிபீடியா!

கொக்கிபீடியா!

கொக்கிபீடியா!

கொக்கிபீடியா!

Published:Updated:
கொக்கிபீடியா!
பிரீமியம் ஸ்டோரி
கொக்கிபீடியா!
கொக்கிபீடியா!

ருப்பக்கம் கொக்கி போட்டு திருவிழாவுக்கு கரெண்ட் எடுக்குறதுபோல வேற மாதிரி விக்கிபீடியாவுக்காகத் தகவலைத் தொகுத்திருக்கோம். அதான் இந்த கொக்கிபீடியா..!

பெயர்: ஜெ.ஜெயலலிதா

பிறப்பு: 24 பிப்ரவரி 1948

வயது: 68

இருப்பிடம்: போயஸ் கார்டன்

19-வது தமிழ்நாட்டு முதலமைச்சர்

ஜெ.ஜெயலலிதா என்பவர் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்திய நடிகையும் ஆவார்.

திரையுலகப் பங்களிப்பு:

இவர் ‘வெண்ணிற ஆடை’ என்கிற படத்தின் மூலம்தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘பக்பக் ப்ட்ரூ...’ என அடிக்கடி உச்சரிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் இதே படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆரிடம் ஓவராக வாய்பேசி வாங்கிக் கட்டிக்கும் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ‘ஆடாமல் ஆடுகிறேன்...’ பாடலின் இறுதிக்காட்சியில் கிர்டு கிர்டு எனச் சுற்றி, கீழே விழும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். இதுவரை 127 படங்களில் நடித்திருக்கும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்திருக்கிறார். இன்றும் இவர் நடித்த படங்களும் பாடல்களும் ஒரு நல்லநாள், நடுராத்திரி எனப் பாராமல் எல்லா நேரத்திலும் ஜெயா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்.

சட்டமன்றப் பொறுப்புகள்:


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

தமிழக முதல்வராக ஆறு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கொக்கிபீடியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதனைகள்:

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. கட்சி எண்ணற்ற பல சாதனைகளைச் செய்திருந்தாலும், அந்தக் கட்சியினர் ‘மாங்கு மாங்கு’ என மாரில் அடித்துக்கொண்டு பெருமைகொள்ளும் சம்பவம் ‘அதிக நாட்கள் குனிந்தே வாழும் குழு’ என்ற உலகசாதனையைப் படைத்ததுதான். 110 என்ற எண்ணை மட்டுமே வைத்துக்கொண்டு எண்ணற்ற வாய்களை அடைத்தது, சசிகலா புஷ்பாவைக் கூப்பிட்டு ‘சப்’ என அறைந்தது, நிவாரண மூட்டையில் இருந்து மணமக்கள் நெற்றி வரை ஓர் இடம் விடாமல் சூப்பர் குழு ‘அம்மா’ ஸ்டிக்கர் ஒட்டி விட்டது,  தமிழக அரசின் சின்னம் ‘வள்ளுவர் கோட்டமா?’, ‘ சென்ட்ரல் ஸ்டேஷனா’ என நாம் குழம்பும் அளவிற்கு, அனைத்து இடங்களிலும் அம்மா ஸ்டிக்கர்கள் ஒட்டி அரசு சின்னத்தையே மறக்கடித்தது,  ‘பூமி உள்ளவரை எங்கம்மா புகழே...’ நிலைத்திருக்கும் பாடலை ஓயாமல் அலற விட்டு கடைக்கோடி தமிழன் முதல் கடலைமிட்டாய் சாப்பிடும் சிறுவன் வரை அனைவரது மனதிலும் மனப்பாடமாகப் பதியவைத்தது, வாயில் கட்சிக்கொடியை நட்டுக்குத்தலாக நட்டுவைத்து பப்பரப்பே என நீரில் மிதந்து தலைவர் பிறந்தநாளுக்கு டெடிகேட் செய்வது, காலையில் காரச்சட்னி அரைக்க முக்குக் கடைக்கு பச்சை மிளகாய் வாங்க வந்தவர்களை எல்லாம் பிடித்துக்கொண்டு போய் பச்சை குத்தி விட்டது,   ஹிலாரி க்ளிண்டனுக்கே முன் மாதிரியாகத் திகழ்ந்தது, சேலத்தில் தன் உத்தரவால் மழை பெய்ய வைத்தது என சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்... சொல்லிக்கொண்டே போகலாம்.

குழப்பங்கள்:

இதுவரை எத்தனை பேரை எந்தெந்தப் பதவியில் இருந்து எந்தக் காரணத்திற்காக மாற்றினார், தூக்கினார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.

உண்மையிலேயே, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இருப்பது பறக்கும் குதிரைதானா என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் குதிரை எப்படி பறக்கும் என்பதற்கான விடையும் தெரியவில்லை.

மேலும் படிக்க...

அற்புதத் தலைவி அம்மா

தமிழகத் தாய்

அம்மா சூடும் பொன்மாலைகள்

அம்மா அந்தாதி

இலைக்குறள்

அம்மா கலைக்களஞ்சியம் படிக்கவும்.

- ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism