Published:Updated:

ஆஹான்னா ஆஹான்தான்!

ஆஹான்னா ஆஹான்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்னா ஆஹான்தான்!

ஆஹான்னா ஆஹான்தான்!

ஆஹான்னா ஆஹான்தான்!

ஆஹான்னா ஆஹான்தான்!

Published:Updated:
ஆஹான்னா ஆஹான்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்னா ஆஹான்தான்!

ப்போ வடிவேலு சொன்னதுக்கு அப்புறம்தான் இந்த `ஆஹான்’ங்கிற வார்த்தையை பட்டிதொட்டி எல்லாம் பேசிக்கிட்டு இருக்குறாங்க. ஆனா முன்னாடி 80-கள்லயே பலதடவை இந்த `ஆஹான்’ங்கிற வார்த்தையை வேறவேற மாடுலேஷன்ல  தோலுரிச்சு தொங்கவிட்டுருக்காங்க. அதையெல்லாம் எப்போவாச்சும் கவனிச்சுருக்கீங்களா நண்பர்களே?

ஆஹான்னா ஆஹான்தான்!

இதோ  ச்சும்மா  சாம்பிளுக்கு...

காதல் ஆஹான்: மண்வாசனை படத்துல `பொத்திவச்ச மல்லிகை மொட்டு...’ பாட்டுல `மாமன்பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே... ரொம்ப நாளானதே’னு ரேவதி பாடும் போது இடையில `ஆஹான்’ அப்டினு அதுக்கு எதிர்ப்பாட்டாக பாண்டியன் பாடுவாரே, அதை நோட் பண்ணி இருக்கீங்களா நோலன் ரசிகர்களே..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஹான்னா ஆஹான்தான்!

கவிதை ஆஹான்: தம்பிக்கு எந்த ஊரு படத்துல ரெண்டு பாக்கெட்டுலயும் கையை விட்டுக்கிட்டு `காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்’னு வருவாரு ரஜினிகாந்த். ஆனா அதுக்கு முன்னாடி பாட்டோட ஓபனிங்க்லயே ‘ஆஹான்... ஆஹான்... ஆஹான்...’னு தலையை ஆட்டி ஆட்டிக்கிட்டு ஸ்டைலா, கெத்தா நடந்து வருவாரே அதெல்லாம் உங்க கண்ணு முன்னால வந்துபோகுதா இல்லையா..?

ஆஹான்னா ஆஹான்தான்!

கலாட்டா ஆஹான்: `கல்யாணராமன்’ படத்துல வர்ற ‘காதல் வந்திடுச்சு ஆசையில் ஓடிவந்தேன்’ பாட்டைக் கேட்டிருக்கீங்களா? ‘ஆஹான் வந்துடுச்சு... ஆஹஹான் ஓடிவந்தேன்’னு கமல்ஹாசன் அலப்பறை பண்ணி ஆடுவாரே... இங்கே ஆஹான்னா என்ன அர்த்தம்னு தெரிஞ்சிடுச்சா பாஸு?

ஆஹான்னா ஆஹான்தான்!

காம் டவுன் ஆஹான்: ரஜினிகாந்த் நடிச்ச `நெற்றிக்கண்’ படத்துல `நீங்க பிஸியா இருப்பீங்க. அதனால தங்கச்சியோட கல்யாணத்துக்கு மட்டும் வந்தாப் போதும்’ னு மகன் ரஜினி ‘ஆன்ட்டி’ ஹீரோ அப்பா ரஜினிகிட்ட சொல்வாரு. ‘ஆஹான்’னு திருப்பி ரிவிட் அடிப்பாரு அப்பா ரஜினி!

ஆஹான்னா ஆஹான்தான்!

இதெல்லாம் சும்மா 80கள்ல வந்தவைதான். இன்னும் முன்னாடி குலேபகாவலி காலத்துக்குப் போனோம்னா ‘ஆஹான்... குறும்புக்காரராய் இருப்பீங்கள் போலிருக்கிறதே!’ என ரொமான்ஸ் செய்வார்கள் நம்ம ஹீரோயின்கள்!

- ஜெ.வி.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism