Published:Updated:

திருவிழா ரவுசு!

திருவிழா ரவுசு!
பிரீமியம் ஸ்டோரி
திருவிழா ரவுசு!

திருவிழா ரவுசு!

திருவிழா ரவுசு!

திருவிழா ரவுசு!

Published:Updated:
திருவிழா ரவுசு!
பிரீமியம் ஸ்டோரி
திருவிழா ரவுசு!

கிராமங்களில் வருடத்திற்கு ஒருமுறை திருவிழாக்கள் நடக்கும்போது, இந்த ஊர்க்காரப் பெரிசுகளும், இளவட்டங்களும் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது. அப்படி நடக்கும் திருவிழா அட்ராசிட்டி ரவுசுகள் ஒரு ரீவைண்ட்...

திருவிழா ரவுசு!

• கோயிலுக்குக் காப்புக் கட்டிய நாள்முதல் `உள்ளூர்க்காரர்கள் அசலூருக்குப் போனால் இரவில் தங்கக் கூடாது', `வேற யார் வீட்டிலேயும் சாப்பிடக் கூடாது' என கருப்பசாமி பல ரூல்ஸ்களையும் பனை ஓலையில் எழுதி வைத்திருந்ததாகச் சொல்லி நம்ம ஆட்கள் `கிலி' கிளப்புவார்கள். `இப்படித்தான் நூத்தியிருவது வருசத்துக்கு முன்னாடி நடுத்தெரு முனியாண்டியோட பாட்டன் யாவாரத்துக்கு வெளியூருக்குப் போனவரு அடைமழை பெய்ஞ்சதால ராத்திரி தங்கிட்டாரு. விடியக்காலைல வாயில நுரைதள்ளி செத்துக் கிடந்தாராம்'னு ஊருக்கு ஊர் பேரை மட்டும் மாற்றி ஒரு திகில்கதையை உருவாக்கிவெச்சு நம்ம வாயில் நுரைதள்ள பயமுறுத்துவாய்ங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பெரிசுகள் ஒருபக்கம் என்றால் ஊரில் இருக்கும் யூத்துகள் இன்னொரு பக்கம் தாறுமாறாக வண்டியைக் கிளப்புவார்கள். இளைஞர் மன்றங்களை அமைத்து எல்லாப் பக்கங்களிலும் சங்கத்து லோகோ பதித்த டீ-ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவார்கள். (கெத்துக் காட்றாங்களாமா...) பேனர்களில் வேட்டியை ஒரே மாதிரி மடித்துக்கட்டி 20 பேர் வரிசையாக `போட்டோஷாப்' அரிவாளைப் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். `இது எங்களோட கோட்டை. இங்கே பண்ணாதீங்க சேட்டை', `எங்களைப் பகைச்சவன் எவன்டா? அவனுக்கு நாங்க எமன்டா' என்பது மாதிரியான எமகாதக வாசகங்களை எழுதிய பேனரில் போன் பேசியவாறு போஸ் கொடுத்து வெறியேற்றுவார்கள். (பாவத்த..!)

• திருவிழாவை முன்னிட்டு `நாடகம் நடத்துறோம்... கபடி போட்டி வைக்கிறோம்'னு அஞ்சாறு பேர் கூட்டமாக பக்கத்து டவுனில் பிரின்ட் அடித்த ரசீது புக்கோடு முக்கியத் தலைக்கட்டுகளைச் சந்தித்து பில்லைப் போடுவார்கள். மைக்செட் கடை, ஷாமியானா பந்தல் எனச் சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் ஐட்டங்களையும் உபயமாகவே வாங்குவார்கள். போட்டி நடத்தும் ஊர்க்காரர்கள் மட்டும் நேரடியாகவே ஃபைனலில் கலந்துகொள்வார்கள். வசூல் பண்ணின காசு வெளியே போகக் கூடாதுங்கிற நல்லெண்ணம். இதென்னய்யா தினுசான கள்ளாட்டமா இருக்கு!

• வீடுகளுக்குப் பின்புற மறைவில் நின்று சரக்கைப் போட்டுவிட்டு, கறிக்குழம்பைக் கொட்டி நெஞ்சுவரை ரொப்பி, மத்தியானம் மல்லாக்கப் படுத்துத் தூங்குவதோடு முடிந்துவிடாது அந்தத் திருவிழா. அன்னிக்கு இரவு நடக்கும் கரகாட்டத்திலும், நாடகத்திலும் இடையில் புகுந்து இம்சைகள் கொடுப்பது, மைக் வேலை செய்யலைனா ஊர் தர்மகர்த்தாவை மாற்றச் சொல்வது, ரோட்டில் போறவர்ற எவனையாச்சும் போட்டுப் பொளப்பது என இவிய்ங்க பண்ற அலப்பறைகள் அளவில்லாமப் போய்க்கிட்டிருக்கும்.

இந்த என்டர்டெயின்மென்ட்லாம் இல்லைன்னா என்னங்க திருவிழா அது?

- விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism