Published:Updated:

போய்யா என் மீம்ஸு!

போய்யா என் மீம்ஸு!
பிரீமியம் ஸ்டோரி
போய்யா என் மீம்ஸு!

போய்யா என் மீம்ஸு!

போய்யா என் மீம்ஸு!

போய்யா என் மீம்ஸு!

Published:Updated:
போய்யா என் மீம்ஸு!
பிரீமியம் ஸ்டோரி
போய்யா என் மீம்ஸு!
போய்யா என் மீம்ஸு!

ருக்குள் நாளைய இயக்குநர்கள் போய் இப்போ மீம் க்ரியேட்டர்கள் அட்ராசிட்டி அதிகமாகிடுச்சு. சோஷியல் மீடியாவைத் திறந்து பார்த்தால், திரும்புகிற பக்கமெல்லாம் மீம்ஸாதான் இருக்கு. ஆத்தி... சில மீம் கிரியேட்டர்கள் நம்மை குபீர்னு சிரிக்க வெச்சாலும், தன்னை மீம் கிரியேட்டர்னு சொல்லிக்கிற பலர் பண்ற டார்ச்சர்கள் இருக்கே... அவ்வ்வ்!

•    மீம் கிரியேட்டரா ஃபார்ம் ஆக வல்லாரை, வெண்டைக்காய்னு சாப்பிட்டு மூளையை 30 கிராம் எக்ஸ்ட்ரா வளர்த்துக்கணும்னு அவசியமில்லை. `வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் போனை நோண்டிட்டு நிற்கிற ஸ்டில்லைப் போட்டு கீழே எதை எழுதிவிட்டாலும் இந்த ஊர், உலகம் அது மீம்ஸ்தான்னு சூடத்துல அடிச்சு சத்தியம் பண்ணும்ங்கிறதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டாய்ங்க. அதுக்காக அதே ஆணியைப் பிடுங்கணும்னு அவசியமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•   சரி, ஆரம்பிக்கிறது எல்லோருமே `அ'னா... `ஆ'வன்னா...' தானே, அதுக்கப்புறம் புள்ளைங்க எப்படியாவது நாலு டெம்ப்ளேட்டை புதுசாத் தோண்டி எடுத்து `டபக்...டபக்...'னு மேலே வந்துருங்கனு பார்த்தால், வழக்கொழிஞ்சுபோன டெம்ப்ளேட்ல மீம்ஸ் பண்ணி வயிறு எரிய வெக்கிறாய்ங்க. கிண்டுறது பூராமே பீஸ் இல்லாத பிரியாணிதான்..!

•   `மை ரியாக்‌ஷன்',  `தட் மொமென்ட் ', `அட்மிட் இட்', `க்ளோஸ் எனஃப்' வகையறா மீம்கள் இனி எத்தனை வருஷத்துக்குதான் போடுவீங்க? அதையெல்லாம் பார்க்கும்போது நான் என்னமோ ஜெமினிகணேசன், சுருளிராஜன் காலத்தில் வாழ்ற மாதிரியே ஃபீல் ஆகுது. அவ்வ்வ்...

•     ஒரு நல்ல மீம் கிரியேட்டர், ஒரு நல்ல மீமைத் தப்பித்தவறிப் போட்டுவிடக் கூடாதே. அதிலும், புது டெம்ப்ளேட்டில் போடவே கூடாதே. உடனே, கமென்ட் பாக்ஸில் குதிச்சு `சூப்பர் ஜி... சிரிச்சே செத்துட்டேன். அப்படியே டெம்ப்ளேட் கிடைக்குமா?' னு கேட்க ஆரம்பிச்சுடுவீங்களே. சரி, எல்லா டெம்ப்ளேட்டையும் வாங்கி வெச்சுக்கிட்டு என்னதான்யா செய்வீங்க?

போய்யா என் மீம்ஸு!

•   ராகுல் பாண்டி போட்டோகிராஃபி, முத்து ராஜா போட்டோகிராஃபி மாதிரி, தவபாண்டி மீம்ஸ், ஸ்மார்டி மீம்ஸ்னு மீம்ஸ் பேஜ்களும் பல உருவாகிடுச்சு. ஊரே ஒருபக்கம் பேசிக்கிட்டு இருந்தால் சம்பந்தமில்லாமல் எதாவது ஒரு மீமைப் போட்டுவிட்டு, டீக்கடையைத் தீக்கடையாக்கி ஊரைப் போர்க்களமாக்கிடுறீங்களேய்யா..!

•   மீம்ஸ்தான் இந்த நிலைமையில் இருக்குனா, அதுக்கு வைக்கிற கேப்ஷன்கள் பார்க்கும்போது பைபாஸ் ரோடு நடுவில் பாயைப் போட்டுப் படுத்திடலாம்னு தோணுது. பங்கம், மரணபங்கம், ஏலியன் லெவல், தெய்வ லெவல், டைகர் குமாரு, டுமீல் குப்பம் வௌவால்னு எதையாவது எழுதி விடுறீங்களே... பாவம் பார்க்க மாட்டீங்க? 

• காவிரிப் பிரச்னையில் ஆரம்பிச்சு, கானாடுகாத்தான் பக்கத்துல பஸ் வசதி சரியில்லைங்கிற வரை எல்லாத்தையும் பற்றி மீம்ஸ் போடுவது மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பசங்களா. ஆனால், திடீர்திடீர்னு கிறுக்கடிச்சு `அந்தக் கடையில் சாம்பார் நல்லாருக்கும், இந்தக் கடையில் சாத்துகுடி நல்லாருக்கும்'னு எல்லாம் மீம்ஸ் போடுறீங்களே... ஏம்ப்பா ஏன்?

•   எல்லாத்துக்கும் மேல் இந்தத் தல/தளபதி மீம் க்ரியேட்டர்கள்தான் சாவடி மீம்ஸ் போடுவது. நாட்டுக்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்து, அவனவன் வாழ்க்கையை வெறுத்து வேதனையில் உட்கார்ந்திருக்க, அந்த நேரத்தில் வந்து இப்படி நடந்ததுக்குக் காரணமே தல தான், தளபதி தான்னு மீம்ஸ் போட்டுத் தகராறு பண்றீங்களே. எங்களால முடியலை மீம் பாய்ஸ்...

- ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism