Published:Updated:

எந்தக் கட்சி நீங்க?

எந்தக் கட்சி நீங்க?
பிரீமியம் ஸ்டோரி
எந்தக் கட்சி நீங்க?

எந்தக் கட்சி நீங்க?

எந்தக் கட்சி நீங்க?

எந்தக் கட்சி நீங்க?

Published:Updated:
எந்தக் கட்சி நீங்க?
பிரீமியம் ஸ்டோரி
எந்தக் கட்சி நீங்க?

சில அறிகுறிகளை வெச்சே நீங்க எந்தக் கட்சினு அசால்ட்டாக சொல்லிடலாம். செல்ஃப் செக்கப் பண்ணிக்க நீங்க ரெடியா மக்களே?

எந்தக் கட்சி நீங்க?

 மதியம் சாப்பிட்டதும் தூக்கம் வந்தா அது நார்மல். ஆனா காலேஜ்லயோ ஆபீஸ்லயோ காலையில 10 மணிக்கே தூங்கி விழற பழக்கம் இருக்கா? உங்க மம்மி கொடுத்த லஞ்ச்பாக்ஸ்ல சாப்பாடு இருந்தாலும் பக்கத்தில் உள்ளவன் பாக்ஸைத் திறந்து தின்னுட்டு, `யம்மி'னு சொல்ற பழக்கமுள்ள ஆளா நீங்க? விதம்விதமா பேன்ட் சர்ட்கள் வந்தாலும் கிழிச்சுவிட்டுப் போடுற ஜீன்ஸ் மேலேயே கண் இருக்கா? கங்கிராட்ஸ் பாஸ்... நீங்க காங்கிரஸ் பாஸ்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போன் தொடங்கி வீட்டு ஃபிரிட்ஜ் வரைக்கும் சிப்ஸ் பாக்கெட்டுக்கு ஃப்ரீயாகக் கொடுக்கிற ஸ்டிக்கரையெல்லாம் ஒட்டிவைக்கிற பழக்கம் இருக்கா? கிச்சன்ல இருந்த டேபிளைத் தூக்கி ரிசப்ஷன்ல போடுறது, மொட்டைமாடியில் இருக்கிற நாற்காலியைத் தூக்கி பெட்ரூமுக்கு மாத்துறதுனு  வீட்டில் எதாவது பண்ணிக்கிட்டே இருக்கிற ஆளா நீங்க? ஆடிப்போயி ஆவணி  இல்லை. அடுத்த சித்திரையே வந்தாலும் இது மாறாது. ஏன்னா டிசைன் அப்படி! இது எந்தக் கட்சிக்கான அறிகுறினு தனியா வேற சொல்லணுமா?

சாப்பிடும்போது அடிக்கடி நாக்கைக் கடிச்சு `உஸ்ஸ்ஸ்'னு கதறுகிறீர்களா? ஆபீஸ்ல உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க லொடலொடன்னு ஏதாவது பேசிட்டு இருக்கும்போது ஓங்கி ஒரு அப்பு விடணும் போலத் தோணுதா? எனக்கு அதிரசம்னா ரொம்பப் பிடிக்கும், தீபாவளி வந்தா சாப்பிடுவேன். `ஆட்டுக்கால் சூப்னா ரொம்பப் பிடிக்கும், ஞாயிற்றுக்கிழமையானா மறக்காம சாப்பிடுவேன்'னு அடிக்கடி உங்க நட்பு வட்டத்துக்குள் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிற பழக்கம் உடையவரா? ஆங்...மக்கழே நீங்க தே.மு.தி.க-வே தான்!

எந்தக் கட்சி நீங்க?

உங்களுக்கு நீங்களே அடிக்கடி செல்ஃபி எடுத்துக்கிறீங்களா? சாண்ட்ரோ கார் வெச்சிருந்தாலும் சைக்கிள்ல ஊருக்குள்ள சுத்தணும் போல இருக்குதா? `ரவா பணியாரம் செஞ்சு தர்றேன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா..? ராத்திரியில் லேட்டா வந்தா, திட்ட மாட்டேன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?'னு வீட்டுல கேள்வி கேட்கும் கேள்வியின் நாயகரா நீங்க? `சிக்கன் பிரியாணி பார்சல்ல மட்டன் பீஸ் வரும், சீயக்காய் பாக்கெட் சிக் ஷாம்புவாக மாறும்'னு எக்குத்தப்பா உட்கார்ந்து வெயிட் பண்ணிப் பார்க்கிற குரூப்பா நீங்க? ஃபிரெண்ட்ஸ்களுக்குள்ளே கேங் லீடர்னு ஒருத்தர் இருந்தா அது பிடிக்காம நீங்க ஒரு தனி கேங் அமைக்கிற பார்ட்டியா? அறிவாலயம் அன்புடன் அழைக்கிறது சகோஸ்...

சோஷியல் மீடியாவில் நீங்களே ஒரு ஸ்டேட்டஸ் போட்டு நீங்களே அதைப் படிச்சு லைக் போட்டு அதுக்கு கமென்ட்டும் போட்டு `செமல்ல?'னு சொல்லிக்கிற வினோதப் பழக்கம் உடையவரா? யூத்துங்க பேசிக்கிறது மச்சி! குழந்தைங்களுக்குப் பிடிச்சது டோரா புச்சி! எல்லாருக்கும் புடிச்சது பஜ்ஜி! மேல சொன்ன அறிகுறி இருந்தா நீங்க ல.தி.மு.க. கட்சி!

புதுசா பேனா வாங்கினாலோ, நோட்புக்ஸ் வாங்கினாலோ உடனே பேனாவை எடுத்து உங்க கையெழுத்தை அதில் கிறுக்குற பார்ட்டியா? சோஷியல் மீடியாவுல எவனாச்சும் சப்பைத்தனமாக ஒரு ஹேஸ்டேக் போட்டு ஒரு ட்ரெண்ட் ஓடிட்டு இருந்தாலும் அதையும் ஃபாலோ பண்ணி ஹேஸ்டேக் போட்டு கடமை ஆத்துற போராளியா நீங்க? #யூ ஆர் பா.ம.க!

 சிஸ்டமோ மொபைலோ ஆன் பண்ணியதும் ஸ்க்ரோலிங்ல ஓடிக்கிட்டு இருக்கிற டூரிஸ்ட் பேக்கேஜ் விளம்பரத்தை க்ளிக் பண்ணிப் பார்க்கணும்னு கை `நமநம'னு  (நமோ நமோ இல்லை.!) அரிக்குதா? எந்த ஊரு எங்கே இருக்குனு சும்மா கில்லி மாதிரி  `கத்தி' பட ப்ளூ ப்ரின்ட் கணக்காக டீட்டெயிலா சொல்றதில் புலியா நீங்க? `டி.வி-யைத் துடை... டேபிளைத் துடை'னு வீட்டில் சொன்னா துடைக்காமலே `க்ளீன் பண்ணிட்டேம்மா'னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி `அந்த ஏற்காடு டூர் போற ப்ளான் என்னாச்சுடா'னு இந்தப் பக்கம் கேப்பில் ரெட்டைக்கிடாய் வெட்டி போன்ல மொக்கை போடுற கில்லாடி வேலைகள் பண்ணுகிற குரூப்பினைச் சேர்ந்தவரா? நீங்க பக்கா பா.ஜ.க. மக்கா!

  - ஜெ.வி.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism