Published:Updated:

சண்டைல கிழியாத சங்கம்!

சண்டைல கிழியாத சங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
சண்டைல கிழியாத சங்கம்!

சண்டைல கிழியாத சங்கம்!

சண்டைல கிழியாத சங்கம்!

சண்டைல கிழியாத சங்கம்!

Published:Updated:
சண்டைல கிழியாத சங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
சண்டைல கிழியாத சங்கம்!

மோடி பிரதமரானபோது தொடங்கிய நடிகர் சங்கப் பஞ்சாயத்து `அம்மா ரிட்டர்ன்ஸ்' படலம் ஆரம்பித்த பின்னும் தொடர்கிறது. `மிஸ் என்னைக் கிள்ளிட்டான்' ரேஞ்சுக்கு இருதரப்பும் மாறி மாறி சேற்றை அள்ளிவீசி விளையாடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா வல்லரசாக வாய்ப்பே இல்லை என்பதால் இரு தரப்பையும் சேர்த்து வைக்க சில டமால் டுமீல் ஐடியாஸ்!

சண்டைல கிழியாத சங்கம்!

• ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப் படம் ரிலீஸாகிறதோ இல்லையோ, சுப்ரீம் ஸ்டாரின் கட்சியில் இருந்து ஓர் ஆள் எஸ்ஸாகிவிடுகிறார். இப்போது இருப்பது ஸ்டாரும் சித்தியும் மட்டுமே என்பதால் நடிகர் சங்கக்கூட்டம் மொத்தத்தையும் சமத்துவ மக்கள் கட்சியில் உறுப்பினராக்கிவிடலாம். அடுத்த முதல்வர், அடுத்த ராணுவத் தளபதி, அடுத்த பிலிப்பைன்ஸ் பிரசிடென்ட் என அவரவர்களுக்கு பிடித்தவகையில் அடைமொழி கொடுத்துக்கொள்ளலாம். காசா பணமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பேச்சுலராக இருக்கும்வரையில்தான் வெளியுலகப் பஞ்சாயத்துகளுக்கு எல்லாம் டைம் இருக்கும். எனவே விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் சீக்கிரமே கால்கட்டு போட்டுவிடலாம். அதன்பின் வீட்டுப் பஞ்சாயத்தைப் பார்க்கவே நேரம் பத்தாது. இதில் எங்கே பிரஸ்மீட் வைத்து சண்டை போட?

சண்டைல கிழியாத சங்கம்!

• விஷால், ஆர்யாவுக்கு இடையே யார் அதிக கெஸ்ட் ரோல் செய்வது எனப் போட்டியே நடக்கும் போல. இதே மைண்ட்செட்டில் விறுவிறுவென ராதிகாவின் சீரியலில் நான்கைந்து எபிஸோடுகள் நடித்தால் டி.ஆர்.பி எகிறிய சந்தோஷத்தில் இரு அணிகளும் கை குலுக்கிக் கொள்வார்கள்.

• கேங் சண்டை, செலிபரேஷன் பார்ட்டி, கிரிக்கெட் என வெங்கட் பிரபு படத்திற்கான அத்தனை அம்சங்களும் நடிகர் சங்கத்தில் இருக்கின்றன. எனவே `பாலவாக்கம் பாண்டவாஸ் - கொட்டிவாக்கம் கெளரவாஸ்' என இரு டீமாகப் பிரித்து `சென்னை 600017' என ஒரு படம் எடுத்தால் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே கலாய் கலாட்டா ஆகி ராசியாகிவிடுவார்கள்.
டிஸ்க்ளைமர் - பிரேம்ஜி காமெடி ஏதாவது செய்தால் இரண்டு அணிகளும் மன உளைச்சலுக்கு உள்ளாகி சண்டை பெரிதாகிவிடும். பீ கேர்ஃபுல்!

சண்டைல கிழியாத சங்கம்!

• லேசாகக் கிளம்பும் பொறியைக் காற்றடித்துக் கிளறித் தீயாய்ப் பரவவிடுவதே ராதாரவியின் கபீம்குபாம் கருத்துகள்தான். தமிழ் அகராதியில் தேடித்தேடி மானாவாரியாய்த் திட்டும் அவரை, கொஞ்சநாளைக்கு மெளனவிரதம் இருக்கச் சொன்னால், ல.தி.மு.க கட்சி ஆபீஸ்போல சகலமும் அமைதியாகிவிடும். வெள்ளைக்கொடிக்கு வேலையே இல்லை!

சண்டைல கிழியாத சங்கம்!

• ரெண்டு அணிக்கும் உள்ளே கோபம் பானைப்பொங்கல்போலத் தளும்புவதால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். இவர்களை கூல் செய்ய, ஜே.கே ரித்தீஷை ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கவைத்து, ரெண்டு தரப்பையும் ஒரே நேரத்தில் பார்க்க வைக்கலாம். குபீர் குபீர் எனதச சிரிப்பு கிளம்பி ஸ்ட்ரெஸ் குறைந்து ராசியாகிவிடுவார்கள். ஆக்‌ஷன் படம் பார்த்தா எப்படி சிரிப்பு வரும்னு கேட்கிறீங்களா? உங்களுக்கு ரித்தீஷோட திறமைபற்றித் தெரிஞ்சே ஆகணும்  ப்ரோ!

- நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism