Published:Updated:

குத்துங்க எசமான் குத்துங்க!

குத்துங்க எசமான் குத்துங்க!
பிரீமியம் ஸ்டோரி
குத்துங்க எசமான் குத்துங்க!

குத்துங்க எசமான் குத்துங்க!

குத்துங்க எசமான் குத்துங்க!

குத்துங்க எசமான் குத்துங்க!

Published:Updated:
குத்துங்க எசமான் குத்துங்க!
பிரீமியம் ஸ்டோரி
குத்துங்க எசமான் குத்துங்க!
குத்துங்க எசமான் குத்துங்க!

காலத்திற்கு ஏற்ப ஜனங்களின் சினிமா ரசனை மாறினாலும் என்றும் எவர்க்ரீனாக ரசிக்கப்படும் விஷயங்களில் ஐட்டம் சாங்கிற்கு நிச்சயம் தனி இடம் உண்டு. ஐட்டம் பாடல்களில் ஜெயமாலினி, அனுராதா, சில்க் ஸ்மிதாக்களைப் பார்த்த ஜெனரேஷனைக் கடந்து இன்று ஹீரோயின்களே குத்தாட்ட நாயகிகளாக மாறினாலும், சில விதிகளை மாறாமல் கடைபிடித்து வருகிறார்கள் நம் இயக்குநர்கள். அவை என்ன என்ன என்று பார்க்கலாமா..?

•  பெரும்பாலும் ஐட்டம் பாடல்களை கிளைமாக்ஸுக்கு முன்னாடிதான் வைப்பார்கள். அப்போதானே படம் முடிந்து வெளியே வரும் நம்மவர்கள், ``கிளைமாக்ஸ் மட்டும் சரியில்ல, மத்தபடி படம் ஓகே'' என சர்டிபிக்கேட் கொடுப்பார்கள்! ( என்ன ஒரு புத்திசாலித்தனம்!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• படம் முழுக்க கத்திக்கிட்டும் அடிச்சுக்கிட்டும் இருக்குற நம்ம ஹீரோவும் வில்லனும் ஐட்டம் பாடலைப் போட்டதும் ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவாங்க! (அது வேற வாய்... இது நாற வாய்!)

குத்துங்க எசமான் குத்துங்க!

• நம்ம ஊருலயாச்சும் பரவாயில்ல... படத்துலதான் ஐட்டம் சாங்கை சொருகுவாங்க. ஆன பக்கத்து ஸ்டேட்ல ஐட்டம் சாங்கை நம்பித்தான் படமே எடுக்குறாங்க! (பொதுவாத்தான்லு...சொன்னோம்லு)

• `ஒரு ஆண் பொண்ணுக்கிட்ட மனச கொடுத்துட்டா வேறபொண்ணை நினைக்கமாட்டாங்க'னு முந்தைய சீன்ல பஞ்ச் டயலாக் பேசுற ஹீரோ, ஐட்டம் பாட்டைப் போட்டதும் முட்டி கிழியுற அளவுக்கு குத்தாட்டம் போடுவாங்க. இதுல ஒட்டிக்கிட்டு மூவ்மெண்ட் வேற. (நல்லா இருங்கய்யா!)
 பொதுவா ஐட்டம் பாட்டுகள் மூலமா கலெக்‌ஷன் அள்ளுற ஹீரோயின்ஸ், தேர்தல் அப்போ முக்கியப் புள்ளியா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. (யார் கண்டா `நாளைய தமிழகமே' என எதிர்காலமே கூறலாம்!)

• பெரும்பாலான படங்கள்ல ஐட்டம் சாங்ஸ் சீன்லதான் ஏதாச்சும் முக்கியமான சஸ்பென்ஸ் ஓப்பன்ஆகும். (ஒரேசமயத்தில் இரண்டு வேலைகளை நம் மூளை செய்ய முடிகிறதா என்பதற்கான பயிற்சிதான் இது!)

• படம் முழுக்க டீ, காபி கூட குடிக்காத நம் ஜென்டில் ஹீரோக்கள் அசால்ட்டாக ஒரு கேஸ் பீரை குடித்துத் தள்ளுவார்கள். இதுல பாதியை டான்ஸர்கள் மீது தெளித்து போதை ஏற்றிக் கொள்வார்கள். (வில்லனை ஏமாத்துறாங்களாமாம்!)

- நிர்மல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism