ஃபேஸ்புக்கில் நாம் சுற்றிக்கொண்டிருக்கும்போது நம் வாலைச் (wall) சுற்றும் விதவிதமான ஆப்ஸுகள் பிரபலங்களின் சுவர்களையும் சுற்றி அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தால் எப்படியிருக்கும்?
இந்த வாரம் வைகோவின் ஃபேக்புக் பக்கம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் முன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள்?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து துவங்காத காலகட்டத்தில் ஏதென்ஸில் பிறந்த நீங்கள் யாரிடமும் லிஃப்ட் கேட்காமல் நடந்தே ரஷ்யாவைச் சென்றடைந்ததாக வரலாறு சொல்கிறது. வரும் வழியில் குளிர்தாங்காமல் பாதிவிலைக்கு ஒரு கறுப்புப் போர்வையையும் பச்சை மப்ளரையும் வாங்கிக்கொண்டு வீராவேசமாக முழக்கமிட்டுக்கொண்டே ரஷ்யாவைச் சென்றடைந்தீர்களாம்.

உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?
விஜயகாந்த்: இவர் வந்தாலே பத்தடி தள்ளிப் போயிடணும்.
மக்கள்: ஆமா... நாங்க பாத்தோம். இவருக்கு இதான் வேலை.
மீம்ஸ் க்ரியேட்டர்கள்: எங்க குலசாமியே இவர்தான்.
கருணாநிதி: நல்லவேளை. இந்த வாட்டியும் நான் சிக்கலை.
- விக்கி